தனுஷுக்கு எதிராக நயன்தாரா
நடிகை நயன்தாரா பற்றி நெட்ஃளிக்ஸ் தயாரித்துள்ள ஆவணப்படம் பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் நயன்தாரா தனது காதல் வாழ்க்கைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு வீடியோக்களை பயன்படுத்திக்கொள்ள தனுஷிடம் அனுமதி கேட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் கழித்தும் தனுஷ் அனுமதி வழங்கவில்லை. மேலும் நயன்தாராவின் தனிப்பட்ட செல்ஃபோனில் எடுக்கப்பட்ட காட்சியை ஆவணப்படத்தில் பயண்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதையும் நயன்தாரா தெரிவித்துள்ளார். நயன்தாராவைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனுஷூக்கு எதிராக படையெடுக்கும் நடிகைகள்
தனுஷ் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் இதற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தாலும் இவற்றுக்கு உறுதியான ஆதாரங்கள் இருந்ததில்லை. தற்போது நடிகை நயன்தாரா தனுஷ் மீது வெளிப்படையாக பல்வேறு குற்றங்களை அடுக்கியுள்ள நிலையில் தனுஷ் படங்களின் மற்ற நடிகைகளும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
மரியான் படத்தில் நடித்த நடிகை பார்வதி திருவொத்து நயன்தாராவின் பதிவிற்கு ஃபயர் எமோஜி கமெண்ட் செய்துள்ளார். மேலும் நையாண்டி படத்தில் நடித்த நஸ்ரியா , வடசென்னை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், 3 படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் , நடிகை இஷா தல்வார் , கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஷ்வர் , அனா பென் , அஞ்சு குரியன் , மஞ்சிமா மோகன் , ஐஸ்வர்யா லெக்ஷ்மி , அதிதி பாலன் உள்ளிட்ட நடிகைகள் இந்த பதிவிற்கு லை செய்துள்ளார்கள்.