PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!

PM Modi - G20: ஐந்து நாட்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி. எதற்காக இந்த பயணம், இதுகுறித்து, பிரதமர் மோடி தெரிவித்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

Continues below advertisement

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன் என்று பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று முதல் நவம்பர் 21 ஆம் தேதிவரை வெளிநாடுகளில் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்

Continues below advertisement

வெளிநாட்டு பயணம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

” நைஜீரியா நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்”

அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று, மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நமது நெருங்கிய கூட்டாளி நாடான நைஜீரியாவுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை மீதான பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் நமது ராஜீய கூட்டாண்மையை உருவாக்க எனது பயணம் ஒரு வாய்ப்பாக அமையும். இந்தியில் எனக்கு அன்பான வரவேற்புச் செய்திகளை அனுப்பியுள்ள இந்திய சமூகத்தினரையும், நைஜீரியாவைச் சேர்ந்த நண்பர்களையும் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

பிரேசில்:

பிரேசிலில், 19-வது ஜி-20 உச்சிமாநாட்டில்  உறுப்பினராக நான் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டு, இந்தியாவின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பு, ஜி-20-ஐ மக்களின் ஜி-20 ஆக உயர்த்தியது. உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளை, அதன் நிகழ்ச்சி நிரலில் பிரதான நீரோட்டத்தில் சேர்த்தது. இந்த ஆண்டு, பிரேசில் இந்தியாவின் பாரம்பரியத்தைக் கட்டமைத்துள்ளது.


"ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற நமது தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை நான் எதிர்நோக்கியுள்ளேன். பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வேன்.

கயானா:

அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பின் பேரில் கயானாவுக்கு நான் மேற்கொள்ளும் பயணம், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இருக்கும். பகிரப்பட்ட பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த நமது தனித்துவமான உறவுக்கு உத்திசார் திசையை அளிப்பது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். 185 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த  மிக வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு எனது மரியாதையையும், ஜனநாயக சகா என்ற அளவில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவிப்பேன்.

இந்தப் பயணத்தின்போது, 2-வது இந்தியா- கரீபியன் சமுதாய  உச்சிமாநாட்டில் பங்கேற்கும் கரீபியன் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் நானும் பங்கேற்க உள்ளேன்.  நாங்கள் நெருங்கிய உறவுகளால் ஒன்றாக வலுவுடன் நிற்கிறோம்.  வரலாற்று உறவுகளை புதுப்பிக்கவும், நமது ஒத்துழைப்பை புதிய களங்களுக்கு விரிவுபடுத்தவும் இந்த உச்சிமாநாடு நமக்கு உதவும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement