கார்த்திகை முதல் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுருளி அருவியில் புனித நீராடி குருசாமி கைகளால் மாலை அணிந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தங்களின் விரதத்தைத் தொடங்கினார்கள்.




கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்


சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை  நேற்று 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் ஐயப்ப தேஸ்சம்போர்டு கடைபிடிக்கப்பட உள்ளன.இந்த நிலையில் தமிழகத்திலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இந்த மண்டல பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய தங்களது விரதத்தை தொடங்கினர்.




தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி ஆன்மீக புண்ணிய ஸ்தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இங்கு சித்தர்களும் ரிஷிகளும் தவம் இருப்பதாக ஐதீகம் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளன்று தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்து புனித நீராடி ஐயப்பனுக்கு பிடித்த வண்ணங்களான காவி மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து துளசி மாலை,சந்தன மாலை, குங்கும மாலை,மற்றும் காசி மாலை உள்ளிட்டவைகளைசுருளி மலை பகுதியில் உள்ள ஐயப்ப சாமி கோவில், பூத நாராயணர் கோவில் ஆதி அண்ணாமலையார் கோவில் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் குருசாமிகள் மூலமாக மாலைகளை தங்கள் கழுத்தில்  அணிந்து செல்வது வழக்கம்.


அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?




இந்நிலையில் இன்று கார்த்திகை முதல் நாளான இன்று சுருளி அருவி பகுதியில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சென்று ஐயப்பன் சுவாமி தரிசனம் செய்வதற்காக மாலை அணிந்து விரதத்தை துவக்க வந்த பக்தர்கள் சுருளி அருவி மற்றும்  ஆற்றங் கரையோரமாக புனித நீராடி கற்பக விநாயகர் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில்,  ஐயப்ப சுவாமி கோவில், பூத நாராயணன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சரண கோஷங்கள் முழங்க மாலை அணிவித்து தங்களது விரதத்தை துவக்கினர்கள்.


ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்!




அதே போன்று பழனி மலை முருகனுக்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரத்தை துவங்கினார்கள். முன்னதாக சுருளிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் உற்சவரை குருசாமி கதிரேசன் தலைமையில்  பக்தர்கள் கோயிலில் இருந்து பல்லக்கில் சுமந்து சென்று புனித நீர் ஆறாட்டு செய்து முடிந்தபின் விரதம் இருந்த பக்தர்கள் சரண கோஷம் முழங்க உற்சவர் முன்பு குருசாமி கையால் மாலையை அணிந்து சபரி யாத்திரைக்கான விரதத்தை தொடங்கினார்கள்.