MI vs CSK: நடப்புத் தொடரில் இரண்டாவது முறையாக மும்பை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Continues below advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 9 ஆவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 10ஆவது இடத்திலும் உள்ளன. 

Continues below advertisement

 

நடப்பு ஐபிஎல் தொடர் இந்த இரண்டு அணிகளும் மிகவும் மோசமாக தொடங்கியது. சென்னை அணியின் கேப்டனாக இருந்த ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கடந்த போட்டியில் தோல்வியை கண்ட சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். சென்னை நடப்புத் தொடரில் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9ஆவது இடத்தில் உள்ளது. 

 

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 9 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் அந்த அணி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அந்த அணி நடப்புத் தொடரில் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை முற்றிலும் இழந்துள்ளது. மும்பை அணியில் நட்சத்தி வீரரான சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் அந்த அணிக்கு இது மேலும் ஒரு பெரிய சிக்கலாக இருந்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அதிரடி வீரர் பொல்லார்டு ஆகியோரின் ஃபார்மும் மிகவும் பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. 

 

சென்னை அணியை பொறுத்தவரை இனிமேல் வரும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் அதற்கு மற்ற அணிகளின் போட்டி முடிவுகளும் சென்னை அணிக்கு சாதமாக அமைய வேண்டும். இருப்பினும் சென்னை-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி என்றால் ரசிகர்கள் எப்போதும் ஆரவாரமாக இருப்பார்கள். நடப்புத் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற சென்னை-மும்பை போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெறுமா என்ற ஆர்வத்துடன் சென்னை ரசிகர்கள் உள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola