ஜகர்த்தாவில் வரும் 23ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது. ரூபிந்தர்பால் சிங் தலைமையிலான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல் மற்றும் எஸ்.கார்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மாரீஸ்வரன் சக்திவேல் கோவில்பட்டியை சேர்ந்தவர். அதேபோல் எஸ்.கார்த்தி அரியலூரை சேர்ந்தவர். 


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த இருவருக்கும் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது.ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார். 


 






கடைசியாக 2009ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் பங்கேற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் குணசேகரன் மற்றும் நவீன் ஆகிய இருவரும் இடம்பெற்று இருந்தனர். அதன்பின்னர் 13 ஆண்டுகளாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் தமிழ்நாட்டிலிருந்து வீரர்கள் இடம்பெறவில்லை. 13 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு தமிழக வீரர்கள் இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ளனர். 


ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய ஹாக்கி சார்பில் இந்தியா ஏ அணியே இம்முறை அனுப்பப்பட உள்ளது. அந்த அணியில் இந்த இரண்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 2023ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2024 பாரீஸ் ஒலிம்பிக் ஆகிய இரண்டிற்கும் தயாராகும் வகையில் இந்திய ஹாக்கி இந்த முடிவு எடுத்துள்ளது. அதற்கான வீரர்கள் தேர்விற்காக இந்த முயற்சியில் இந்திய ஹாக்கி அணி இரங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண