CSK vs RCB Score Live : பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி : சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
CSK vs RCB Score Live : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் 2022 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூர் அணிக்கு தற்போது 12 பந்துகளில் 43 ரன்கள் தேவையாக உள்ளது.
ஜடேஜா வீசிய 16 வது ஓவரில் ஹசரங்கா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு, அடுத்த பந்தே அவுட் ஆனார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
சிறப்பாக விளையாடிவந்த சுயாஷ் பிரபுதேசாய் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து தீக்ஷனா வீசிய 13 வது ஓவரில் அவுட் ஆனார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
அடித்து ஆடிய மேக்ஸ்வல் ஜடேஜா வீசிய 7 வது ஓவரில் 26 ரன்களில் கீளீன் போல்டானார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 6 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.
முகேஷ் சௌத்ரி வீசிய 5 வது ஓவரில் விராட் கோலி 1 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
சென்னைக்கு அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளிசி எட்டு ரன்களில் அவுட் ஆனார்.
ஹசரங்கா வீசிய 19 வது ஓவரில் சென்னை அணி 200 ரன்களை கடந்த நிலையில், அடித்து ஆடிய ராபின் உத்தப்பா 88 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து உள்ளே வந்த ஜடேஜாவும் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
சென்னை அணி 18 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணி 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
உத்தப்பா 33 பந்துகளில் அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து சிவம் துபேவும் 30 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்.
சென்னை அணிக்கு தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த ராபின் உத்தப்பா 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
மேக்ஸ்வள் வீசிய 13 வது ஓவரில் ராபின் உத்தப்பா 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு சென்னை அணியின் ரன் எண்ணிகையை உயர்த்தி வருகிறார்.
ஹசரங்கா வீசிய 11 வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.
மேக்ஸ்வல் வீசிய 9 வது ஓவரில் சிவம் துபே ஒரு சிக்ஸர் அடித்து சென்னை 50 ரன்களை கடக்க உதவி செய்தார்.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.
மேக்ஸ்வல் வீசிய 7 வது ஓவரில் ரன் எடுக்க ஓடிய மொயின் அலி விக்கெட் கீப்பர் கையினால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.
ஹசல்வுட் வீசிய நான்காவது பந்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் 17 ரன்களில் LBW முறையில் அவுட் ஆனார்.
கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க தடுமாறி வந்த ருதுராஜ், சிராஜ் வீசிய 3வது ஓவர் 2 வது பந்தில் பௌண்டரியை தெறிக்க விட்டார்.
ஹசல்வுட் வீசிய 2 வது ஓவரில் சென்னை அணி வெறும் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
Background
2022 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடி 4 தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -