மத்திய அரசு வழங்கும் இலவச மருத்துவ காப்பீட்டு

ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கார்டு என்பது மக்கள் மருத்துவ சேவையை இலவசமாக பெற உதவும் ஒரு சிறப்பு அட்டையாகும். மத்திய அரசு ஏழை மக்களுக்காக இந்த மருத்துவக் காப்பீடை வழங்கி வருகிறது. இது திடீர் மருத்துவ செலவுகளை குறைத்து, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அட்டை மூலம் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவுகளை செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

2018 ஆம் ஆண்டில், மக்கள் மருத்துவ உதவியைப் பெறுவதற்கு அரசாங்கம் "ஆயுஷ் மான் பாரத் யோஜனா" என்ற திட்டத்தைத் தொடங்கியது. அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 8000 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திட்டத்திற்கு ஒதுக்குகிறார்கள். தமிழ்நாடு அரசு வழங்கும் மருத்துவ காப்பீட்டை போல் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது மத்திய அரசின் திட்டமாகும், இது ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் செலவுக்கு உதவுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது பல மேம்பட்ட சிகிச்சைகள் உட்பட 1354 வெவ்வேறு வகையான சிகிச்சைகளை உள்ளடக்கியது. இந்தியா முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உட்பட 17,000 மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கலாம். புற்றுநோய், சிறுநீரக பிரச்சனைகள், இதய பிரச்சனைகள், மூட்டு வலி, கல்லீரல் நோய், பல் பிரச்சனைகள், மனநலம் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் உதவி பெற்றுக் கொள்ளலாம்.

Continues below advertisement

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்:

1) ஆதார் கார்டு

2) ஓட்டர் ஐடி

3) பான் கார்டு

4) முகவரிச் சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை...

ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பெறுவது மிகவும் எளிது. முதலில், healthid.ndhm.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். நீங்கள் அங்கு ​​ABHA எண் விருப்பத்தை கிளிக் செய்து, அந்த எண்ணைப் பெற உங்கள் ஆதார் எண் அல்லது ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் ஆதார் எண்ணுடன் உள்நுழைந்த பிறகு, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசியில் OTP பெறுவீர்கள். அந்த குறியீட்டை உள்ளிட்ட பிறகு, நீங்கள் தளத்தில் நுழைய முடியும். பிறகு உங்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை தோன்றும். அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.