Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது

Breaking News LIVE 29th Dec 2024: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 29 Dec 2024 12:58 PM
ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது

முகுந்தன் நியமனம் தொடர்பாக பொதுக்குழு மேடையிலே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், தைலாவரம் தோட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சமரசப் பேச்சுவார்த்தை; ராமதாசைச் சந்திக்க புறப்பட்டார் அன்புமணி

விழுப்புரம் மாவடத்தில் உள்ள தைலாவரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசைச் சந்திக்க சென்னையில் உள்ள அன்புமணி ராமதாஸ் சந்திக்க புறப்பட்டுள்ளார். 

புத்தாண்டு கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் பொருட்கள் விற்பனை தீவிரம்!

புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான விற்பனை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தென்கொரியாவில்175 பயணிகளுடன் சென்ற விமானம் வெடித்துச் சிதறியது

தென்கொரியாவில் 175 பயணிகளுடன் சென்ற விமானம் வெடித்துச் சிதறியதில் விமானம் எரிந்து நாசமானது. இதில் தற்போது வரை 28 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 

Background

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு, கட்டுப்பாடுகள் அறிவிப்பு


சென்னையில் 31ம் தேதி மாலை வரை மறுநாள் வரை பொதுமக்கள் கடலில் இறங்கத் தடை


சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை



தமிழ்நாட்டில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் - ஜன. 9ம் தேதியில் இருந்து டோக்கன் விநியோகம்


பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை விநியோகிக்கப்படும் 


மன்மோகன்சிங்கின் உடலுக்கு அரசு உரிய மரியாதையை அளிக்கவில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மறைவிலும் காங்கிரஸ் மலிவான அரசியல் 


மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை மீட்கும் பணி தீவிரம்


ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒருவாரமாகியும் குழந்தையை மீட்க முடியாத சோகம் 


மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி; அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த ஆளுநர் உத்தரவு


அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், பெற்றோர்களும் அச்சம் அடைய வேண்டாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்


பாமக பொதுக்குழு  கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் 


அம்பேத்கரை சீண்டிய தினமே பா.ஜ.க.விற்கு இறங்குமுகம் - விசிக தலைவர் திருமாவளவன் 


தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதா? தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி


ராஜஸ்தான் மாநிலத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் கலைப்பு - அம்மாநில முதலமைச்சர் திடீர் அறிவிப்பு 


தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகும் மக்கள் - ஜோராக நடக்கும் வியாபாராம்


காஷ்மீர் மாநிலத்தில் கொட்டும் பனி; ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுதளத்தில் குவிந்துள்ள பனி முழுவீச்சில் அகற்றம்


தென்கொரியாவில் நடைபெற்ற விமான விபத்து; 175 பயணிகளுடன் சென்ற விமானம் வெடித்துச் சிதறியதால் பெரும் சோகம்


பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட் 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.