Jasprit Bumrah: ஆஸ்திரேலியா வீரர் சாம் கோன்ஸ்டாஸை இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கிளீன் போல்டாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கான்ஸ்டோஸை கிளீன் போல்டாக்கிய பும்ரா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியதும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய பந்தில் தனது அபாரமான திறனை வெளிப்படுத்தினார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டோஸை கிளீன் போல்டாக்கினார். முதல் இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு சவால் விடுத்த கான்ஸ்டோஸ் 2வது இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களுக்கு நடையை கட்டினார்.
சவால் விட்ட கான்ஸ்டோஸ்
முன்னதாக முதல் இன்னிங்ஸில் அரைசதம் விளாசிய பிறகு பேசிய கான்ஸ்டோஸ், இரண்டாவது இன்னிங்ஸிலும் பும்ராவிற்கு எதிராக அட்டாக்கிங் பேட்டிங்கை தொடருவேன் என பேசியிருந்தார். அதற்கு பதிலளித்த பும்ரா, எப்போதும் சவால்களை ஏற்க தயாராக உள்ளேன் என குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, கான்ஸ்டோஸ் விட்ட சவாலில் அவரை வீழ்த்தி பும்ரா வெற்றி பெற்றார். அதன்படி, கான்ஸ்டோஸை வீழ்த்திய பிறகு பும்ரா வெளிப்படுத்திய மகிழ்ச்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸி., அணி முன்னிலை
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 369 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, 105 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தற்போது வரை, தொடக்க வீரர்களான கான்ஸ்டோஸ் மற்றும் கவாஜா அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம், 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.