SRH vs GT Score Live : ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!
IPL 2022 SRH vs GT Score Live :சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா வீசிய 17 வது ஓவர் முதல் பந்தில் வில்லியம்சன் 57 ரன்களில் வெளியேற, 23 பந்துகளில் ஹைதராபாத் அணிக்கு 33 ரன்கள் தேவையாக இருந்தது.
தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த வில்லியம்சன் 42 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தி வருகிறார்.
குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.
ராகுல் திவாட்டியா வீசிய 11 வது ஓவர் முதல் பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஹைதராபாத் அணி 100 ஐ கடக்க உதவி செய்தார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 11 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 25 ரன்களுடனும், திரிபாதி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா 32 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ரசித் கான் வீசிய 9 வது ஓவரில் அவுட் ஆனார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்துள்ளது.
பெர்குசன் வீசிய 6 ஓவரில் அபிஷேக் ஷர்மா தொடர்ச்சியாக 4 பௌண்டரி அடித்து அசத்த, 6 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்து, ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடி வந்த அபினவ் மனோகர் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து புவனேஸ்வர்குமார் வீசிய 19 வது ஓவரில் அவுட் ஆனார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
மார்கோ ஜான்சன் வீசிய 14 வது ஓவரில் மில்லர் 12 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் அணி கேப்டன் ஹர்திக் 25 ரன்களுடனும், மில்லர் 6 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் அணி கேப்டன் ஹர்திக் 23 ரன்களுடனும், மில்லர் 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்
உம்ரான் வீசிய எட்டு ஓவர் இறுதி பந்தில் மேத்யூ வேட் 19 ரன்களில் LBW முறையில் அவுட்டானார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.
ஹைதராபாத் பந்து வீச்சாளர் நடராஜன் வீசிய 6 வது ஓவரில் சாய் சுதர்சன் 11 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
புவனேஸ்வர் குமார் வீசிய மூன்றாவது ஓவரில் குஜராத் அணியின் தொடக்க வீரர் கில் 7 ரன்களில் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட் மற்றும் கில் களமிறங்கியுள்ளனர். ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் வீசிய முதல் இரண்டு பந்துகளில் பௌண்டரி சென்றது.
Background
இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். புள்ளி பட்டியலில் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 8 வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 3வது இடத்தில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -