IPL 2022 Final Prize Money: என்னது... ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா..-பரிசு தொகை விவரம் இதோ..!

ஐபிஎல் தொடரை வெல்லப் போகும் அணிக்கு கிடைக்கவுள்ள பரிசு தொகை என்ன தெரியுமா?

Continues below advertisement

விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ள குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேபோல் முதல் ஐபிஎல் தொடருக்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்காரணமாக இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. 

Continues below advertisement

 

இந்நிலையில் இன்றைய இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணிக்கு கிடைக்க உள்ள பரிசு தொகை என்ன? 

 

முதல் பரிசு:

15வது ஐபிஎல் தொடரை வெல்லப் போகும் அணிக்கு ஐபிஎல் கோப்பையுடன் சேர்ந்து 15 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசாக வழங்க உள்ளது. 

இரண்டாவது பரிசு:

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. 

 

மூன்றாவது பரிசு:

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் தோல்வி அடைந்து மூன்றாவது இடத்தை பிடித்த அணிக்கு 7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணிக்கு பரிசு தொகையாக 7 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. 

இன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்பாக வண்ணமையமான நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் ஏஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த விழாவில் 75 ஆண்டுகால இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும் விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் தொடர்பாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement