IPL 2022, CSK vs KKR LIVE:6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய கொல்கத்தா.. !
IPL 2022, CSK vs KKR LIVE Updates: சென்னை-கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்..
சென்னை அணிக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 14 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை வீரர் பிராவோவின் பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களின் முடிவில் கே.கே.ஆர் அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி கொல்கத்தா அணி 15 ரன்கள் எடுத்துள்ளது.
132 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கியுள்ளனர்.
கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 131 ரன்கள் எடுத்துள்ளது. மகேந்திர சிங் தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே அணி 98 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 15 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணியின் சிவம் துபே 3 ரன்களில் ரஸல் பந்துவீச்சில் சிவம் நரேன் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 10 ஓவர்களின் முடிவில் 57 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. ருதுராஜ்(0),கான்வே(3),உத்தப்பா(28),ராயுடு(15) ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 5 ஓவர்களின் முடிவில் 29 ரன்கள் எடுத்து 2 விக்கெட் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இவர் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் நிதிஷ் ரானாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
சென்னை அணியில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் டூபிளசிஸ் இம்முறை பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார். ஆகவே சென்னை அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்து அணியின் டேவான் கான்வே ருதுராஜ் கெய்க்வாட் உடன் களமிறங்க உள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கும் சென்னை அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டேவான் கான்வே,ஜடேஜா,தோனி,சிவம் துபே,ராபின் உத்தப்பா, ராயுடு,பிராவோ,சாண்டனர்,ஆடேம் மில்னே,துஷார் தேஷ்பாண்டே
ஐபிஎல் முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இன்னும் சற்று நேரத்தில் டாஸ் நடைபெற உள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது வரை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 6 முறை களமிறங்கியுள்ளது. அவற்றில் 2 முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. எஞ்சிய 4 முறையும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தடைக்கு பிறகு மீண்டும் திரும்பியது. அப்போது முதல் சென்னை-கொல்கத்தா அணிகள் தற்போது வரை 9 முறை மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 7 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரும் களமிறங்க மாட்டார்கள்.
சென்னை அணியில் மொயின் அலி மற்றும் தீபக் சாஹர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 25 முறை மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 17 முறையும், கொல்கத்தா அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடந்த சீசனில் மோர்கன் கேப்டனாக இருந்தார். அவரை அந்த அணி தக்கவைக்கவில்லை. இதையடுத்து இம்முறை வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளார். இதன்காரணமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
Background
இந்திய கிரிக்கெட் உலகில் பெரிய திருவிழாவான ஐபிஎல் இன்று தொடங்குகிறது. இன்று முதல் தினமும் இரவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய திருவிழா காத்திருக்கிறது. இம்முறை புதிதாக லக்னோ மற்றும் குஜராத் அணிகள் களமிறங்கின்றன. ஆகவே 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடர் இம்முறை நடைபெற உள்ளது. இதன்காரணமாக அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த குரூப் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் புனேவில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை அணி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் முதல் போட்டியில் களமிறங்க உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -