RCB vs PBKS LIVE Updates: மூன்றாவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர்

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 48வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதும் போட்டியின் லைவ் அப்டேட்ஸ்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 03 Oct 2021 07:19 PM
மூன்றாவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர்

பஞ்சாப் அணி கடைசி ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக முன்னேறியது.

பஞ்சாப் நம்பிக்கை நாயகன் ஷாரூக்கான் அவுட்...!

பஞ்சாப் வெற்றிக்கு 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நம்பிக்கை அளித்த ஷாரூக்கானை ஹர்ஷல் படேல் ரன் அவுட் செய்தார்.

பஞ்சாப் நம்பிக்கை நாயகன் ஷாரூக்கான் அவுட்...!

பஞ்சாப் வெற்றிக்கு 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நம்பிக்கை அளித்த ஷாரூக்கானை ஹர்ஷல் படேல் ரன் அவுட் செய்தார்.

6 பந்தில் 19 ரன்கள் - வெல்லப்போவது யார்?

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 19 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ஹென்ரிக்ஸ் மற்றும் ஷாரூக்கான் உள்ளனர்.

மைதானத்தை விட்டு வெளியே பந்தை பறக்கவிட்ட ஷாரூக்

பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கடைசி கட்டத்தில் அதிரடியாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாரூக்கான் ஆடி வருகிறார். அவர் அடித்த சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது.

மைதானத்தை விட்டு வெளியே பந்தை பறக்கவிட்ட ஷார

பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கடைசி கட்டத்தில் அதிரடியாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாரூக்கான் ஆடி வருகிறார். அவர் அடித்த சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது.

5வது விக்கெட்டையும் இழந்தது பஞ்சாப்

பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக களத்தில் இருந்த மார்க்ரம் கார்டன் பந்தில் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சாஹலின் சுழலில் ஒரே ஓவரில் இரு விக்கெட்

பெங்களூர் அணிக்காக திறமையாக பந்துவீசி வரும் யுஸ்வேந்திர சாஹலில் சுழற்பந்தில் சர்ப்ராஸ்கான் டக் அவுட்டாகி வெளியேறினார். சாஹல் தனது ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சாஹலின் சுழலில் ஒரே ஓவரில் இரு விக்கெட்

பெங்களூர் அணிக்காக திறமையாக பந்துவீசி வரும் யுஸ்வேந்திர சாஹலில் சுழற்பந்தில் சர்ப்ராஸ்கான் டக் அவுட்டாகி வெளியேறினார். சாஹல் தனது ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மயங்க் அகர்வால் அவுட் - பஞ்சாப் அணி போராட்டம்

பஞ்சாப் அணிக்காக ஆதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மயங்க் அகர்வால் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் அவுட்டாக்கியுள்ளார்.

30 பந்தில் 52 ரன்கள்- வெற்றி பெறப்போவது யார்?

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது வரை பஞ்சாப் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

பஞ்சாப்பின் அடுத்த விக்கெட்டும் காலி...!

பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் அவுட்டாகிய சிறிது நேரத்தில் அந்த அணியின் அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் சிக்ஸர் அடிக்க முயன்று சாஹல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அரைசதம் அடித்த மயங்க் அகர்வால்...!

பெங்களூர் அணிக்கு எதிராக இலக்கை நோக்கி ஆடி வரும் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 36 பந்தில் 50 ரன்களை எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் அவரது 11வது அரைசதம் இதுவாகும்.

பஞ்சாப் வெற்றிக்கு 50 பந்தில் 72 ரன்கள் தேவை...!

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 50 பந்தில் 72 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் மயங்க் அகர்வால் 47 ரன்களும், பூரன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் விக்கெட்டை இழந்தது பஞ்சாப் - கே.எல்.ராகுல் அவுட்

ஷாபாஸ் அகமது சுழற்பந்தில் கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால்

இலக்கை நோக்கி ஆடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் இணைந்து 9 ஓவர்களில் 72 ரன்களை எடுத்து வலுவாக உள்ளனர்.

பவர்ப்ளேவில் 49 ரன்களை எடுத்த பஞ்சாப்..!

ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைப்பதற்காக அதிரடியாக ஆடி வரும் பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களில் 49 ரன்களை எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 19 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ருதுராஜிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய கே.எல்.ராகுல்...!

பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் தற்போது வரை 23 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இதனால், அவர் இந்த தொடரில் 512 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

பஞ்சாப் அணி 4 ஓவர்களில் 33 ரன்கள்

165 ரன்கள் என்ற இலக்குடன் ஆடி வரும் பஞ்சாப் அணி 4 ஓவர்கள் முடிவில் 33 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் வெற்றிக்கு 96 பந்தில் 132 ரன்கள் தேவைப்படுகிறது.

கே.எல்.ராகுலுக்கு அதிர்ஷ்டம்...! மூன்றாம் நடுவரால் மீண்டும் பேட் செய்ய வாய்ப்பு...!

முகமது சிராஜ் வீசிய பந்தில் எல்.டபிள்யூ ஆகிய கே.எல்.ராகுல் மூன்றாம் நடுவரிடம் அப்பீல் செய்தார். இதில் நாட் அவுட் என்று தெரியவந்ததால் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் பேட் செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மேக்ஸ்வேல்லிற்கு போட்டியாக பந்தை தொலைத்த கே.எல்.ராகுல்..!

முகமது சிராஜ் வீசிய பந்தில் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் அடித்த 101 மீட்டர் சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியேறியது. இதனால், பந்து தொலைந்தது. மேக்ஸ்வேல்லிற்கு போட்டியாக கே.எல்.ராகுலும் மைதானத்தை விட்டு பந்தை அனுப்பினார்.

பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. 

கடைசி ஓவரில் ஆட்டமிழந்த மேக்ஸ்வேல்

ஷமி வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 33 பந்தில் 57 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வேல் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பெங்களூர் ரன்வேட்டை : 5 ஓவரில் 60 ரன்கள்

பெங்களூர் அணி 13வது ஓவரில் இருந்து 18வது ஓவர் வரை ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்துள்ளனர்.

ஹாட்ரிக் அரைசதம் அடித்த மேக்ஸ்வேல்

பெங்களூர் அணியின் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய மேக்ஸ்வேல் சிக்ஸர், பவுண்டரி அடித்து 29 பந்தில் அரைசதம் கடந்துள்ளார். மேக்ஸ்வேலின் ஹாட்ரிக் அரைசதம் இதுவாகும்.

அரைசதம் கடந்த மேக்ஸ்வேல - டிவிலியர்ஸ் பார்ட்னர்ஷிப்

பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான டிவிலியர்சும், மேக்ஸ்வேல் பார்ட்ன்ரஷிப் 50 ரன்களை கடந்துள்ளது.

பந்தை மீண்டும் மீண்டும் தொலைத்த மேக்ஸ்வேல்..! சாலைக்கு சென்ற சிக்ஸர்...!

பஞ்சாப் வீரர் பிஷ்னோய் வீசிய பந்தில் மேக்ஸ்வேல் அடித்த சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. 97 மீட்டர் தூரம் சென்ற அந்த சிக்சால் பந்து மைதானத்திற்கு வெளியே சாலைக்கு சென்றது.

மைதானத்தை விட்டு வெளியே சென்ற மேக்ஸ்வேல்லின் சிக்ஸ்...!

பெங்களூர் அணி வீரர் மேக்ஸ்வேல் பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் வீசிய பந்தில் அடித்த சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியே பறந்தது.

இரண்டாவது ஓவரில் மூன்றாவது விக்கெட்டை வீழ்த்திய ஹென்ரிக்ஸ்...!

பஞ்சாபின் வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரிக்சின் இரண்டாவது ஓவரில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சந்தித்த முதல் பந்திலே அவுட்டாகிய கிறிஸ்டின்...!

விராட்கோலி அவுட்டானவுடன் களமிறங்கிய டேன் கிறிஸ்டியன் வந்த வேகத்தில் சந்தித்த முதல் பந்திலே அவுட்டாகி பெங்களூர் ரசிகர்களை ஏமாற்றினார்.

கிங் கோலியை காலி செய்த பஞ்சாப் ஹென்ரிக்ஸ்...!

பஞ்சாப் வீரர் ஹென்ரிக்ஸ் வீசிய 10வது ஓவரில் விராட்கோலி 25 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார்.

சர்ச்சையை ஏற்படுத்திய தேவ்தத் படிக்கல்லிற்கு பிடித்த கேட்ச்...!

பிஷ்னோய் வீசிய 8வது ஓவரில் பந்தை திரும்பி அனுப்பி அடிக்க முயன்ற தேவ்தத் படிக்கல்லில் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச்சானது. கள நடுவர் நாட் அவுட் என்று கூறியதால் மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்டபோது பந்து கிளவுசில் பட்டிருப்பது தெரிந்தும் மூன்றாவது நடுவர் சீனிவாஸ் அவுட் தரவில்லை. இதனால், பஞ்சாப் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பவர்ப்ளேவில் 55 ரன்களை எடுத்த பெங்களூர்

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 55 ரன்களை எடுத்துள்ளது. கோலி 18 ரன்களுடனும், படிக்கல் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பஞ்சாப் பவுலிங் : அரைசதத்தை கடந்த பெங்களூர் அணி...!

பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 5.4 ஓவர்களில் 50 ரன்களை கடந்துள்ளது. தேவ்தத் படிக்கல் 30 ரன்களுடனும், கேப்டன் விராட்கோலி 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரு முறை விராட்கோலி விக்கெட்டை தவறவிட்ட பஞ்சாப்...!

விராட்கோலியை அவுட்டாக்குவதற்கு 3வது ஓவரில் கிடைத்த ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலும், 4வது ஓவரில் கிடைத்த கேட்ச் வாய்ப்பையும் பஞ்சாப் அணி தவறவிட்டது.

பெங்களூர் அணி நிதான ஆட்டம் : 3 ஓவர்களுக்கு 24 ரன்கள்

பெங்களூர் அணி தற்போது வரை 3 ஓவர்கள் முடிவில் 24 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 9 ரன்களுடனும், படிக்கல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் ஓவரை சுழற்பந்துவீச்சுடன் ஆரம்பித்த பஞ்சாப் - பவுண்டரியுடன் தொடங்கிய கோலி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் பேட்டிங்கை கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் தொடங்கியுள்ளனர். பஞ்சாப் அணி முதல் ஓவரிலே சுழற்பந்து வீச்சாளர் மார்க்ரமை பயன்படுத்தியுள்ளது.  பெங்களூர் ரன் கணக்கை பவுண்டரியுடன் கோலி தொடங்கியுள்ளார்.

Background

பஞ்சாப் அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றுள்ளார். அவர் முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.