IPL MI vs DC : முதல் பந்திலே சிக்ஸ்...! டெல்லியை வெற்றி பெற வைத்த அஸ்வின்..!

மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதும் போட்டியின் அடுத்தடுத்த அப்டேட்களை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளுங்கள்

சுகுமாறன் Last Updated: 02 Oct 2021 07:17 PM
முதல் பந்திலே சிக்ஸ்...! டெல்லியை வெற்றி பெற வைத்த அஸ்வின்..!

6 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் குருணால் பாண்ட்யா வீசிய முதல் பந்திலே அஸ்வின் சிக்ஸர் அடித்த டெல்லி அணியை வெற்றி பெறவைத்தார். இதன்மூலம், மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

டெல்லி வெற்றிக்கு 6 பந்துகளில் 4 ரன்கள் தேவை...! சீட்டின் நுனியில் ரசிகர்கள்...!

மும்பை அணியின் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 4 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும், ரவிச்சந்திரன் அஸ்வினும் உள்ளனர்.

வெற்றி பெறப்போவது யார்? 18 பந்தில் 19 ரன்கள் தேவை

மும்பை அணிக்கு எதிராக டெல்லி அணி வெற்றி பெற 18 பந்தில் 19 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் டெல்லி வெற்றிக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், அஸ்வினும் களத்தில் உள்ளனர்.

வெற்றி பெறப்போவது யார்? 18 பந்தில் 19 ரன்கள் தேவை

மும்பை அணிக்கு எதிராக டெல்லி அணி வெற்றி பெற 18 பந்தில் 19 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் டெல்லி வெற்றிக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், அஸ்வினும் களத்தில் உள்ளனர்.

பரபரப்பான கட்டத்தில் டெல்லி - மும்பை ஆட்டம்

டெல்லி அணியின் வெற்றிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்படுகிறது களத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும், அஸ்வினும் உள்ளனர். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான கட்டத்தில் டெல்லி - மும்பை ஆட்டம்

டெல்லி அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக ஆடிய ஹெட்மயர் பும்ரா பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அக்‌ஷரும் அவுட்...! 5வது விக்கெட்டை இழந்தது டெல்லி..!

டெல்லி அணிக்காக ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவந்த அக்‌ஷர் படேல் போல்ட் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். டி.வி.ரீப்ளேயில் ஆட்டமிழந்தது உறுதி செய்யப்பட்டது. 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது டெல்லி அணி.

டெல்லி பேட்டிங் : எடுத்தது 60 பந்தில் 65...! தேவை 60 பந்தில் 65 ரன்கள்...!

டெல்லி அணி தற்போது வரை 10 ஓவர்கள் முடிவில் 4விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்துள்ளது. டெல்லி வெற்றிக்கு 10 ஓவர்களில் 65 ரன்கள் தேவைப்படுகிறது.

டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அவுட்...! நெருக்கடியில் டெல்லி கேபிடல்ஸ்..!

டெல்லி அணியின் வெற்றிக்காக போராடிய அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஜெயந்த் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

டெல்லி அணிக்கு 73 பந்துகளில் 76 ரன்கள் தேவை...!

மும்பை அணி நிர்ணயித்த 130 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் டெல்லி அணியின் வெற்றிக்கு 73 பந்துகளில் 76 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ரிஷப் பண்ட் 24 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 7 ரன்களுடனும் உள்ளனர்.

பவர்ப்ளே முடிவில் டெல்லி 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள்

மும்பை அணியின் மிரட்டலான பந்துவீச்சில்  3 விக்கெட்டுகளை டெல்லி அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 46 ரன்களை எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 21 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

5 ஓவரில் 3 விக்கெட் - மிரட்டும் மும்பை பந்துவீச்சு

130 ரன்களை இலக்கை நோக்கி ஆடிவரும் டெல்லி அணி, மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித் கூல்டர் நைல் பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகி வெளியேறியுள்ளார்.

4 ஓவர்கள் முடிவில் 30 ரன்கள் - நிதானமாக ஆடும் டெல்லி

மும்பைக்கு எதிராக சேஸ் செய்து வரும் டெல்லி அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை எடுத்துள்ளது.

ஷிகர் தவான் சென்ற சிறிது நேரத்தில் குருணால் பாண்ட்யா - 2வது விக்கெட்டையும் இழந்த டெல்லி

ஷிகர் தவான் அவுட்டாகிய அடுத்த நேரத்தில் டெல்லி அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர்தவான் குருணால் பாண்ட்யா பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.

ஷிகர் தவானை ரன் அவுட்டாக்கிய பொல்லார்ட் - விக்கெட் வேட்டையை தொடங்கிய மும்பை

மும்பை அணி நிர்ணயித்த 130 ரன்களை நோக்கி ஆடிவரும் டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர்தவானை பொல்லார்ட் ரன் அவுட் செய்தார். டெல்லி அணி 2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்களை எடுத்துள்ளது.

இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி வீரர்கள்...!

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 130 ரன்களை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஷிகர்தவான் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கியுள்ளனர்.

டெல்லி அணிக்கு 130 ரன்கள் இலக்கு

ஷார்ஜாவில் டெல்லிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்களை எடுத்துள்ளது. கடைசி ஓவரில் மும்பை அணி 13 ரன்களை எடுத்துள்ளது.

ஒரே ஓவரில் அடுத்தடுத்து போல்ட் - ஆவேசமான ஆவேஸ்கான்...!

ஹர்திக் பாண்ட்யாவை போல்டாக்கிய அதே ஓவரில் ஆவேஸ்கான் புதியதாக களமிறங்கிய கூல்டர் நைல் சந்தித்த முதல் பந்திலே அவரை போல்டாக்கி வெளியேற்றினார்.

ஹர்திக் பாண்ட்யா ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஆவேஸ்கான்

டெல்லி அணியின் நம்பிக்கை வீரர் ஆவேஷ் கான் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை யார்க்கராக வீசிய ஆவேஸ்கானின் பந்தில் ஹர்திக் பாண்ட்யா போல்டாகி வெளியேறினார். அவர் 17 ரன்களுக்கு வெளியேறினார்.

17வது ஓவரில் 100 ரன்களை கடந்த மும்பை...!

டெல்லி அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் மும்பை அணி நிதான ஆட்டத்திற்கு பிறகு 17வது ஓவரின் முடிவில் 100 ரன்களை எடுத்தது.

ப்ரீ-ஹிட்டை வீணடித்த குருணல் பாண்ட்யா

17வது ஓவரில் ரபாடா வீசிய முதல் பந்து நோ பாலாக அமைந்ததால், நடுவர் ப்ரீஹிட் அளித்தார். ஆனால், அந்த பந்தில் குருணல் பாண்ட்யா ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

5 ஓவர்களில் அதிசயம் நடக்குமா? - 15 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள்...!

நோர்ட்ஜே வீசிய 15வது ஓவரில் மும்பையின் நட்சத்திர வீரர் பொல்லார்ட் ஆட்டமிழந்ததுடன், 15வது ஓவரை நோர்ட்ஜே மெய்டனாக வீசினார். இதனால், 15 ஓவர் முடிவில் மும்பை அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

டேஞ்சர் பேட்ஸ்மேன் பொல்லார்ட் போல்ட் : அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்...!

டெல்லி அணி சூர்யகுமார் யாதவ் தவிர பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ள நிலையில், மும்பை அணியின் நட்சத்தர வீரர் பொல்லார்ட் நோர்ட்ஜே போல்டாகி வெளியேறினார். இதனால், மும்பை வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பரிதாப நிலையில் மும்பை - அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றும் அக்‌ஷர் படேல்

மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி வரும் அக்‌ஷர் படேல் சவுரப் திவாரியையும் தனது சுழற்பந்து வீச்சால் வெளியேற்றியுள்ளார். திவாரி 18 பந்தில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியுள்ளார்.

மீண்டு வருமா மும்பை ? - 12 ஓவர்களில் 76 ரன்கள்

மும்பை அணி ரோகித்சர்மா, குயின்டின் டி காக், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூன்று பேரின் விக்கெட்டுகளை இழந்து 12 ஓவர்கள் முடிவில் 76 ரன்களை எடுத்துள்ளது.

மும்பை அணிக்கு நம்பிக்கை அளித்த சூர்யகுமார் யாதவை காலி செய்த அக்ஷர் படேல்...!

மும்பை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் அக்‌ஷர் படேலின் பந்துவீச்சில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 26 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

அஸ்வினை குறிவைத்து தாக்கும் மும்பை பேட்ஸ்மேன்கள்..!

ஷார்ஜா மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சை குறிவைத்து தாக்குதல் ஆட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 2 ஓவர்கள் மட்டும் வீசியுள்ள அஸ்வினின் ஓவரில் 21 ரன்களை மும்பை அணி எடுத்துள்ளனர்.

8வது ஓவரில் அரைசதத்தை கடந்தது மும்பை அணி

ரோகித் சர்மா, குயின்டின் டி காக் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்த மும்பை அணி சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் 7.5 ஓவர்களில் 51 ரன்களை எடுத்தது. இதனால், 8வது ஓவரில் மும்பை அணி அரைசதத்தை கடந்துள்ளது.

2வது விக்கெட்டையும் இழந்தது மும்பை - குயின்டின் டி காக் அவுட்

பவர்ப்ளே முடிவிற்கு பிறகு 7வது ஓவரை வீசிய அக்‌ஷர் படேலின் இரண்டாவது பந்தில் 18 பந்தில் 19 ரன்களை எடுத்திருந்த குயின்டின் டி காக் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மும்பை பேட்டிங் : பவர்ப்ளே முடிவில் 35 ரன்களுக்கு 1 விக்கெட்

டெல்லி அணிக்கு எதிரான ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை எடுத்துள்ளனர். டி காக் 17 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மும்பை அணி நிதான ஆட்டம் : 4 ஓவர்களுக்கு 23 ரன்கள்

டெல்லி அணிக்கு எதிராக போட்டியில் சற்றுமுன்வரை மும்பை அணி 4 ஓவர்கள் முடிவில் 23 ரன்களை எடுத்துள்ளது. குயின்டின் டி காக் 6 ரன்களும், சூர்யகுமார் 9 ரன்களும் எடுத்துள்ளனர்.

மும்பை அணிக்கு முதல் விக்கெட் : ஹிட் மேனை வெளியேற்றினார் ஆவேஸ்கான்

டெல்லி வீரர் ஆவேஷ் கான் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்தை சிக்ஸருக்கு அடிக்க  முயன்ற ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

மும்பை அணிக்கு முதல் விக்கெட் : ஹிட் மேனை வெளியேற்றினார் ஆவேஸ்கான்

டெல்லி வீரர் ஆவேஷ் கான் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்தை சிக்ஸருக்கு அடிக்க  முயன்ற ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

மும்பைக்கு எதிராக புதிய சீருடையுடன் களமிறங்கிய டெல்லி

மும்பை அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி புதிய சீருடையுடன் களமிறங்கியுள்ளது.

முதல் பந்திலே பவுண்டரியுடன் தொடங்கிய ரோகித் சர்மா

டெல்லி வீரர் நோர்ட்ஜே வீசிய முதல் பந்திலே பவுண்டரி அடித்து மும்பையின் ஸ்கோரை தொடங்கினார் கேப்டன் ரோகித் சர்மா

ஆட்டத்தை தொடங்கிய ரோகித் சர்மா - குயின்டின் டி காக்

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக டாசை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டின் டி காக்கும் களமிறங்கியுள்ளனர்

Background

ஷார்ஜாவில் இன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.