KKR vs DC LIVE: டெல்லியை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ள கொல்கத்தா
ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும், டெல்லி அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
கார்த்திகா ராஜேந்திரன்
Last Updated:
28 Sep 2021 07:18 PM
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 41வது போட்டியில் ஷார்ஜா மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இரு அணிகளும் தற்போது வலுவாக உள்ளதால் இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும், டெல்லி அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒருமுறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -