ஐபிஎஸ்ஐ விட பெரிய படிப்பு ஒன்று உள்ளதா என்றும் , சீமானுக்கு கல்வி தகுதி என்ன என்றும் டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை அவதூறாக பேசி வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பதிவிட்டதும் சீமான் வருண்குமாரை அவதூறாக பேசியது தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் நான்கில் மனு தாக்கல் செய்தார் வருண்குமார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் ஆஜரானார். மேலும் இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர்.
DiG வருண் குமார் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவரது வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் மீண்டும்
கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசி உள்ளார். சீமானுக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை.
ips என்பது மிகவும் உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது?; இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.
டிஐஜி வருண் குமார் சார்பில் இரண்டு பேர் சாட்சியம் அளித்த போது சாட்சிகளை நீதிபதி பாலாஜி விசாரித்தார். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் மீண்டும் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தொடர்ந்த வழக்கில் வழக்கு விசாரணை வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 4 நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.