KKR vs SRH Live :ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

IPL 2021, Match 49, KKR vs SRH: துபாய் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். கொல்கத்தா அணியின் ப்ளே ஆப் சுற்றை நிர்ணயிக்கும் போட்டி இதுவாகும்.

சுகுமாறன் Last Updated: 03 Oct 2021 10:59 PM
ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஹைதராபாத் நிர்ணயித்த 116 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து கொல்கத்தா அணி எட்டியது. இதன்மூலம் இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றது.

கேமராவை உடைத்த ராணா..! அவுட்டாக்கிய ஹோல்டர்..!

ஹோல்டர் வீசிய பந்தில் நிதிஷ் ராணா அடித்த பவுண்டரி போட்டியை படம்பிடித்த கேமரா மீது பட்டதில் கேமராவின் லென்ஸ் உடைந்தது. அந்த ஓவரிலே நிதிஷ் ராணாவை ஹோல்டர் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த தினேஷ்கார்த்திக்

கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய அந்த அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் 5 ரன்கள் எடுத்தபோது ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை குவித்த புதிய சாதனையை படைத்தார்.

ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த தினேஷ்கார்த்திக்

கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய அந்த அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் 5 ரன்கள் எடுத்தபோது ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை குவித்த புதிய சாதனையை படைத்தார்.

கொல்கத்தா நம்பிக்கை நட்சத்திரம் : சுப்மன் கில் அவுட்

கொல்கத்தாவின் வெற்றிக்காக போராடிய சுப்மன்கில் சித்தார்த் கவுல் வீசிய பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா நம்பிக்கை நட்சத்திரம் : சுப்மன் கில் அவுட்

கொல்கத்தாவின் வெற்றிக்காக போராடிய சுப்மன்கில் சித்தார்த் கவுல் வீசிய பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அரைசதம் அடித்தார் சுப்மன்கில் - வெற்றியின் அருகில் கொல்கத்தா

கொல்கத்தா அணியின் வெற்றிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 44 பந்தில் 53 ரன்களை எடுத்து ஆடி வருகிறார்.

ஹோல்டர் ஓவரில் 3 பவுண்டரிகள்...! அதிரடியில் இறங்கிய சுப்மன்கில்..!

ஜேசன் ஹோல்டர் வீசிய ஆட்டத்தின் 12வது ஓவரில் தொடக்க வீரர் சுப்மன் கில் 3 பவுண்டரிகளை அடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

10 ஓவர்களுக்கு 44 ரன்கள் : கொல்கத்தா படுநிதானம்

116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள கொல்கத்தா அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கடந்த 4 ஓவர்களில் கொல்கத்தா 1 விக்கெட்டை இழந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ரஷீத்கானிடம் விக்கெட்டை பறிகொடுத்த ராகுல்திரிபாதி

ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத்கான் பந்துவீச்சில் கொல்கத்தா பேட்ஸ்மேன் திரிபாதி ஆட்டமிழந்தார்.

பவர்ப்ளேவில் 36 ரன்கள்: களத்தில் சுப்மன்கில் - ராகுல் திரிபாதி

கொல்கத்தா அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் சுப்மன் கில்லும், ராகுல் திரிபாதியும் உள்ளனர்.

முதல் விக்கெட்டை இழந்தது கொல்கத்தா

கொல்கத்தா அணியின் வளரும் இளம் நட்சத்திரர் வெங்கடேஷ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஹோல்டர் பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

4 ஓவர்களில் 21 ரன்கள் - கொல்கத்தா அணி நிதான தொடக்கம்

ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ள 116 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடி வரும் கொல்கத்தா அணி 4 ஓவர்கள் முடிவில் 21 ரன்களை எடுத்துள்ளது.  தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 14 ரன்களுடனும், வெங்கடேஷ் அய்யர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் இலக்கு

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்தது.

ஹைதராபாத்திற்காக போராடிய அப்துல் சமத் காலி

ஹைதராபாத் அணிக்காக தனி ஆளாக போராடிய அப்துல் சமத் 18 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

ஹைதராபாத் 15 ஓவர் முடிவில் 79 ரன்கள்

கொல்கத்தாவின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வரும் ஹைதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை எடுத்துள்ளது.

5வது விக்கெட்டையும் இழந்தது ஹைதராபாத் - கொல்கத்தா அபார பந்துவீச்சு

ஹைதராபாத் அணிக்காக ஓரிரு ரன்களாக சேர்த்து வந்த பிரியம் கார்க் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், ஹைதராபாத் அணி 5வது விக்கெட்டையும் இழந்தது.

13வது ஓவரில் முதல் சிக்ஸரை அடித்த ஹைதராபாத்

ஹைதராபாத் அணி தனது 13வது ஓவரில் முதல் சிக்ஸரை அடித்துள்ளது. அந்த அணியின் கார்க் ஷகிப்அல் ஹசன் பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டார்.

10 ஓவர்களில் 51 ரன்கள் : தடுமாறும் ஹைதராபாத்

கொல்கத்தா அணிக்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை எடுத்துள்ளது. அபிஷேக் 6 ரன்களுடனும், கார்க் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கேப்டன் வில்லியம்சன் ரன் அவுட் - ஹைதராபாத் தடுமாற்றம்

ஹைதராபாத் அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் வில்லியம்சன் எதிர்பாராதவிதமாக ஷகிப் அல் ஹசனால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

6வது ஓவரில் 4 பவுண்டரிகள - வில்லியம்சன் அசத்தல்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. 6வது ஓவரில் மட்டும் வில்லியம்சன் 4 பவுண்டரிகளை அடித்தார்.

தினேஷ் கார்த்திக் - வருண் சக்கரவர்த்தி தமிழில் உரையாடல்

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் நன்றாக பந்துவீசுமாறு 5வது ஓவர் முழுவதும் அறிவுரை வழங்கினார்.

தினேஷ் கார்த்திக் - வருண் சக்கரவர்த்தி தமிழில் உரையாடல்

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் நன்றாக பந்துவீசுமாறு 5வது ஓவர் முழுவதும் அறிவுரை வழங்கினார்.

4 ஓவர்களுக்குள் 2 விக்கெட் - கொல்கத்தா அபார பந்துவீச்சு

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் கொல்கத்தா பந்துவீச்சாளர் மாவியின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் இழந்ததால் ஹைதராபாத் அணி தடுமாறி வருகிறது.

3 ஓவர்களில் 14 ரன்களுக்கு ஒரு விக்கெட் - ஹைதராபாத் நிதானம்

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் 3 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 14 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

Background

ஐ.பி.எல். தொடரில் துபாய் மைதானத்தில் நடைபெறும் 49வது போட்டியில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். கொல்கத்தா அணியின் ப்ளே ஆப் சுற்றை நிர்ணயிக்கும் போட்டி இதுவாகும்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.