குஷ்பு
அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்க தமிழக பாஜக மகளின் அணி சார்பாக மதுரையில் நடைபெற்ற பேரணியில் நடிகை குஷ்பு கலந்துகொண்டார்..பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் கொடுத்தாகிவிட்டது ஆனால் அவருக்கு நடந்த இந்த பாதிப்பு அந்த பெண் சாகும்வரை அவரால் மறக்க முடியாது என பாஜக மகளிர் அணி தரப்பில் இருந்து நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருந்தார். தடையை மீறி பேரணி நடத்தியதால் காவல் துறை குஷ்புவை கைது செய்தது.
மேலும் பழைய நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பு தனது சொந்த தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குஷ்பு
" என் தந்தை எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமில்லை என் சகோதரர்களையும் என் அம்மாவையும் அடிக்கவும் செய்தார். பெல்டின் பக்கிளை வைத்து ஷூவின் ஹீல்ஸை வைத்து எங்களை அடித்திருக்கிறார். என் அம்மாவை குத்தியிருக்கிறார். மேலும் அவரை சுவற்றில் மோதவைத்திருக்கிறார். இதை எல்லாம் பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம் . இதை எல்லாம் வெளியே யாரிடமாவது சொன்னால் அவர் எங்களை இன்னும் அதிகமாக அடித்து துன்புறுத்துவார் என்கிற பயம் இருந்தது. அதனால் இதைப் பற்றி நான் யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருக்க வேண்டியதாக இருந்தது. என்னுடைய 14 வயதில் நான் சென்னைக்கு குடிபெயர்ந்தேன். படங்களில் எனக்கு முடி அலங்காரம் செய்த உபின் என் தந்தை என்னிடம் நடந்துகொள்ளும் விதத்தை கவனித்து என்னிடம் பேசினார். அவரிடம் நான் எல்லாவற்றையும் சொன்னபிறகு தான் என் வாழ்க்கை மாறியது" என குஷ்பு தெரிவித்துள்ளார். "
மேலும் படிக்க : Madhagajaraja: மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?