DC vs SRH Live: முதல் இடத்தைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ்... ஹைதராபாத்துக்கு தொடரும் கடைசி இட சோகம்!
கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், நடராஜனுக்கு தொற்றுக்கான அறிகுறி இல்லை என மருத்துவ குழு தெரிவித்துள்ளது. மேலும், நடராஜனுடன் தொடர்பில் இருந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பாக விளையாடி வந்த தவான் ரஷித் கான் பந்துவீச்சீல் அவுட் ஆனார். ஒரு சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் (37 பந்துகள் )42 ரன்கள் அடித்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்தது 69 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 40, ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்கள் எடுத்துள்ளனர்.
டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை அடித்தது. 8 ஓவரின் முடிவில் அந்த அணி 51 ரன்கள் எடுத்துள்ளது. 32 ரன்களுடன் களத்தில் இருக்கும் தவான் நடப்பு தொடரில் 400 ரன்கள் அடித்து அசத்தினார்.
6 ஓவர் முடிவில் 39 ரன்கள் டெல்லி அணியில், ரஷித் கான் பந்தில் தவான் சிக்ஸ் அடித்து அசத்தினார்.
5 ஓவர்களின் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 14, ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
டெல்லி அணி முதல் விக்கெட்டை இழந்த்து. கலீல் அகமது பந்துவீச்சில் பிரித்வி ஷா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வரும் டெல்லி அணி இரண்டு ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 3, ஷிகார் தவான் 9 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். தவான் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.
Background
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐ.பி.எல். தொடரின் 33வது ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்நிலையில், ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஆர்டி.பிசிஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தமிழக வீரர் நடராஜன் என்பது உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், நடராஜனுக்கு தொற்றுக்கான அறிகுறி இல்லை என மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
மேலும், நடராஜனுடன் தொடர்பில் இருந்த ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர், நெட் பவுலர் பெரியசாமி, அணி மேலாளர் விஜய் குமார், பிஸியோதெரபிஸ்ட் ஷியாம் சுந்தர், மருத்துவர் அஞ்சனா, லாஜிஸ்டிக்ஸ் மேலாளர் துஷார் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர மற்ற வீரர்களுக்கு இன்று காலை எடுக்கப்பட்ட ஆர்டி.பிசிஆர் பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதியானதால் திட்டமிட்டபடி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டி நடைபெறுக் என ஐபிஎல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -