DC vs CSK Live Updates:3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது
IPL 2021, Match 50, DC vs CSK: துபாயில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
கடைசி ஓவரில் 6 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு விக்கெட்டை இழந்தாலும் டெல்லி அணி 2 பந்து மீதம் வைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 28 ரன்களை எடுத்தார்.
டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற விறுவிறுப்பான சூழல் உருவாகியுள்ளது.
ஆட்டத்தின் முக்கியமான விக்கெட்டான ஷிம்ரன் ஹெட்மயர் கைக்கே அளித்த கேட்ச்சை சென்னை வீரர் கிருஷ்ணப்ப கவுதம் கோட்டை விட்டதுடன் பந்தை பவுண்டரிக்கும் தவறவிட்டார்.
டெல்லி அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் ஷர்துல் தாக்கூர் வீசிய 15வது ஓவரில் போல்டாகி வெளிறேினார். அவர் 2 ரன்கள் எடுத்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்தில் 500 ரன்களை கடந்தார். ஏற்கனவே ருதுராஜ், கே.எல்.ராகுல் 500 ரன்களை கடந்துள்ளனர்.
136 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் டெல்லி அணி தனது 4வது விக்கெட்டை சற்றுமுன் இழந்தது. ரிப்பல் படேல் 18 ரன்னில் வெளியேறினார்.
சென்னை அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிவரும் டெல்லி அணி 12 ஓவர்கள் முடிவில் 88 ரன்களை எடுத்துள்ளது. ரிப்பல் படேல் 15 ரன்களுடனும், ஷிகர் தவான் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டெல்லி அணிக்காக அதிரடியாக ஆட முயன்ற டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட் ஜடேஜா பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை அணி நிர்ணயித்த 136 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தோனியின் ஸ்டம்பிங் வாய்ப்பில் இருந்து தப்பித்து மீண்டும் பேட்டிங் வாய்ப்பை பெற்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் டெல்லி அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியுள்ள டெல்லி அணி தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. தீபக் சாஹர் வீசிய பந்தில் 12 பந்தில் 3 பவுண்டரிகளுடன் பிரித்விஷா ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களே மட்டும் எடுத்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பொறுப்புடன் ஆடிய அம்பத்தி ராயுடு 40 பந்தில் அரைசதத்தை கடந்தார். சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 132 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18வது ஓவரில்தான் தனது முதல் சிக்ஸரை அடித்தது. ஆவேஷ்கான் வீசிய பந்தில் அம்பத்தி ராயுடு சிக்ஸர் அடித்தார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. தோனியும், அம்பத்தி ராயுடுவும் களத்தில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் தோனி 14 ரன்களுடனும், அம்பத்தி ராயுடு 19 ரன்களுடனும் உள்ளனர். இதனால் கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் தோனி 14 ரன்களுடனும், அம்பத்தி ராயுடு 19 ரன்களுடனும் உள்ளனர். இதனால் கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை எடுத்துள்ளனர்.
சென்னை அணி கடந்த 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோரை தோனி நல்ல நிலைக்கு கொண்டு செல்வாரா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொயின் அலி ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலே ராபின் உத்தப்பா தூக்கி அடிக்க முயன்று பந்துவீசிய அஸ்வினிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பாப் டுப்ளிசிசை வெளியேற்றிய அக்ஷர் படேலின் சுழலில் சிக்கி மொயின் அலி 5 ரன்னில் வெளியேறினார். இதனால், சென்னை அணி 59 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.
சென்னை அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களை எடுத்துள்ளனர். உத்தப்பா 12 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் உள்ளனர்.
நோர்ட்ஜே வீசிய பவுன்சர் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த ருதுராஜ் அவுட்டாகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்சின் அதிரடி தொடக்க வீரர் பாப் டுப்ளிசிஸ் அக்ஷர் படேல் பந்தில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் சென்னை அணி முதல் ஓவரிலே 16 ரன்களை அதிரடியாக சேர்த்துள்ளது.
டெல்லி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நோர்ட்ஜே வீசிய முதல் ஓவரிலே ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கள நடுவர் எல்.பி.டபுள்யூ வழங்கினார். ருதுராஜ் ரிவியூ கேட்டதன் பலனாக மூன்றாவது நடுவரால் நாட் அவுட் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள சென்னை அணியில் மூன்று மாற்றங்களாக ப்ராவோ, தீபக் சாஹர், உத்தப்பா சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக ரிப்பல் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா ஆடவில்லை.
Background
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -