Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!

Schools Colleges Holiday (27-11-2024): கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Schools Colleges Holiday (27-11-2024): கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஃபெங்கல் புயல் எதிரொலி:

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறக்கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஃபெங்கல் எனப்படும் இந்த புயலால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

எங்கெங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

இதுவரை வெளியாகியுள்ள அறிவிப்புகளின்படி, 

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை: கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி மற்றும் தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலியாக சிதம்பரம் பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement