”சந்திரபாபு நாயுடு அல்லது ஜெகன் மோகன் ரெட்டி தோல்வியடைந்தபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி என சொல்கிறார்கள், ஆனால் வெற்றி பெற்றால் எதுவும் பேசுவதில்லை” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. யார் வழக்கு தொடுத்தது, உச்சநீதிமன்றம் தீர்ப்பில் என்ன தெரிவிக்கப்பட்டது என்பது குறித்து பார்ப்போம். 


’மின்னனு வாக்கு இயந்திரத்தில் மோசடி” - மனுதாரர்


டாக்டர் கே.ஏ.பால்  என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணையானது, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்


எலான் மஸ்க் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலின் போது பணப்பட்டுவாடா விநியோகித்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் 


"ஜனநாயகம் இப்படி அழிந்து கொண்டிருந்தால், நாங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனவும் மனுதாரரான பால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Also Read: Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?


”வெற்றி பெற்றால் மோசடியில்லை” 


இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம், சந்திரபாபு நாயுடு அல்லது ஜெகன் மோகன் ரெட்டி தோல்வியடைந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாகச் கூறினார்கள், ஆனால் வெற்றி பெற்றால் , இதுகுறித்து எதுவும் பேசுவதில்லை என  நீதிமன்றம் தெரிவித்தது.
 
நீதிபதி விக்ரம் நாத் தெரிவிக்கையில் " தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிழை இருக்காது. தேர்தலில் தோற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிழையா என கேள்வி எழுப்பினார். சந்திரபாபு நாயுடு தோல்வியடைந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் டேம்பரிங் குறித்து பேசினார். தற்போது  ஜெகன் மோகன் ரெட்டி தோல்வியடைந்த நிலையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் டேம்பரிங் செய்யப்பட்டதாக பேசியுள்ளார் என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.