நாளை உருவாகும் புயல்:


தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை 5.30 மணிநேரப்படி நிலை கொண்டுள்ளது. நவம்பர் 26, 2024 அன்று அட்சரேகை 7.0°N மற்றும் தீர்க்கரேகை 82.7°E, சுமார் 240 கிமீ  திருகோணமலைக்கு தென்கிழக்கே, நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 520 கிமீ, புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 640 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 720 கி.மீ தொலைவிலும் உள்ளது. 



இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


பள்ளி - கல்லூரிகள் விடுமுறை:


மழை எதிரொலியொட்டி, நாளை சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி - காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வானிலை: 


தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் இன்று விடுக்கப்பட்டுள்ளது. 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


28-11-2024:


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


29-11-2024:


தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


30-11:2024


தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


திருவள்ளூர். காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01-12-2024 மற்றும் 02-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும்.