CSK vs RCB Live: தோனி, ரெய்னா களத்தில்... முடித்து வைக்கப்போவது யாரு?

ஐபிஎல் தொடரில், இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 26 போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 24 Sep 2021 11:07 PM
ருதுராஜை தொடர்ந்து டு ப்ளஸியும் காலி...முதல் பாலிலேயே கலக்கிய மேக்ஸ்வெல்

ருதுராஜை தொடர்ந்து டு ப்ளஸியும் வெளியேறினார். மேக்ஸ்வெல் பந்துவீச்சில் சைனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

முதல் விக்கெட்டை இழந்த சிஎஸ்கே - கோலி கலக்கல் கேட்ச்

சிஎஸ்கே தனது முதல் விக்கெட்டை இழந்தது. சஹால் பந்துவீச்சில் ருதுராஜ் (38) அடித்த பந்தை கோலி சூப்பராக டைவ் அடித்து பிடித்தார். அடுத்து மொயின் அலி வந்துள்ளார்.

8 ஓவர் முடிவில் 67 ரன்கள்

8 ஓவர் முடிவில் சிஎஸ்கே 67 ரன்கள் எடுத்தது. ஸ்பின்னர்களை கொண்டு அட்டாக் செய்யும் கோலி படை.

ரன் அவுட்டில் இருந்து தப்பித்த டு ப்ளஸி

7 ஓவர் முடிவில் 62 ரன்கள் - ரன் அவுட்டில் இருந்து தப்பித்த டு ப்ளஸி

பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) 59 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, சைனியை பொளந்து கட்டிய டு ப்ளஸி..!

பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) சிஎஸ்கே 59 ரன்கள் எடுத்தது.  சைனியின் இந்த ஓவரில் இரண்டு 4, ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார் டு ப்ளஸி. ருதுராஜ் 28 , டு ப்ளஸி 29 ரன்கள். 





நோ பால் போட்ட ஹர்ஷல் படேல், ஃப்ரீ இட்-ல் ஃபோர் அடித்த ருதுராஜ்

நோ பால் போட்ட ஹர்ஷல் படேல், ஃப்ரீ இட்-ல் ஃபோர் அடித்த ருதுராஜ். 5 ஓவர் முடிவில் 43 ரன்கள். ருது 27, டு ப்ளஸி 14 ரன்கள்.

ஹசரங்கா பாலில் சிக்ஸ், போர் அடித்த ருதுராஜ்

ஹசரங்கா பாலில் சிக்ஸ், போர் அடித்த ருதுராஜ், 4 ஓவர்கள் முடிவில் 35 ரன்கள்

இரண்டு பேரும் 11, 11 ரன்கள்

3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி  23 ரன்கள் அடித்த சிஎஸ்கே, இரண்டு பேரும் 11, 11 ரன்கள்

சைனி பாலில் பின்னாடி சிக்ஸரை பறக்கவிட்ட  டு ப்ளஸி..!

சைனி பாலில் பின்னாடி சிக்ஸரை பறக்கவிட்ட  டு ப்ளஸி, இரண்டாவது ஓவர் முடிவில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் 7, டு ப்ளஸி 10

முதல் ஓவரில் 8 ரன்கள் அடித்த சிஎஸ்கே - பவுண்டரி அடித்த ருதுராஜ்

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடும் சென்னை அணி முதல் ஓவர் முடிவில் 8 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கலக்கலாக பவுண்டரி அடித்தார்.

Background

2021 ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் 35வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த சீசனின் முதல் பாதி சிறப்பாக அமைந்திருந்ததால், இரண்டாம் பாதியிலும் சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இரு அணிகளும் திட்டமிடும். 


இரண்டாம் பாதியில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது சென்னை அணி. முதல் போட்டியில், கொல்கத்தாவை எதிர்கொண்ட பெங்களூரு அணி, 92 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் எளிதாக சேஸ் செய்த கொல்கத்தா, 10 ஓவர்களில் போட்டியை முடித்தது. 


ஐபிஎல் தொடரில், இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 26 போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இரு அணிகளும் மோதி கொண்டபோது, 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அதிரடி வெற்றி பெற்றது. ஒரு சீசன் சிறப்பாகவே அமைந்திருந்தாலும், சென்னை அணியுடனான போட்டியில் மட்டும் பெங்களூரு சொதப்புவது வழக்கமாகிவிட்டது. இதை மாற்றி அமைக்க, இன்று பெங்களூரு திட்டமிடும். சென்னையை பொருத்தவரை, பெங்களூரு அணியுடனான ஆட்டம் என்பது எப்போதும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. மும்பையைப் போலவே, சென்னை, பெங்களூரு மோதும் போட்டிகளும் பெரிது எதிர்ப்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று!

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.