மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ராணுவ போர் கல்லூரி (AWC), காலாட்படை பள்ளி, தொலைத்தொடர்பு மற்றும் பொறியியல் ராணுவக் கல்லூரிக்கு (MCTE) சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.


அண்ணல் அம்பேத்கர் பிறந்த மத்தியப் பிரதேசம் மாநிலம் mhow என்ற பகுதிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அங்கு, அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவிடமான பீம் ஜன்ம் பூமியில் மத்திய அமைச்சர் மரியாதை செலுத்தினார்.



துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங்:


பின்னர், ராணுவ போர் கல்லூரிக்கு சென்று, ராணுவ வீரர்களிடம் அவர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையை தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், எப்பொழுதும் எச்சரிக்கையாகவும் எந்த வகையான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆயுதப் படைகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.


எல்லைகளை பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் விழிப்புணர்வை பாராட்டுகிறேன். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடமையில் உள்ள பக்தி எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறது.


உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நமது நாடும் அதன் எல்லைகளும் அதிக அளவில் பாதுகாப்பாகவும் வலுவாகவும் மாறி வருகின்றன. 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்றுவது மோடி அரசாங்கத்தின் நோக்கமாகும்.


அசந்து போன ராணுவ வீரர்கள்:


மேலும் இந்த இலக்கை அடைவதில் ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கும். நீங்கள் எங்கள் எல்லைகளின் பாதுகாவலர்கள், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னோடிகள். நீங்கள் தைரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் எங்கள் எல்லைகளை தொடர்ந்து பாதுகாப்பீர்கள். மேலும், 2047க்குள் விக்சித் பாரதத்தின் பார்வையை நனவாக்குவதில் பங்களிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.


 






இதையடுத்து, மேம்பட்ட ஆராய்ச்சி மையம் மற்றும் காலாட்படை அருங்காட்சியகத்தில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். குறிபார்த்து சுட்ட அவரை பார்த்து ராணுவ வீரர்கள் வியந்து போனார்கள்.


இதையும் படிக்க: வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!