CSK vs MI Live: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்

IPL 2021, Match 31, CSK Vs MI: ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ABP NADU Last Updated: 19 Sep 2021 07:20 PM
ஒரே வெற்றி.. டெபிள் டாப்க்கு முன்னேறிய சென்னை!

மீண்டும் தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது!

கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை

ட்வேய்ன் ப்ராவோ கடைசி ஓவரை வீச சவுரவ் திவாரி எதிர்கொள்கிறார்!

மும்பைக்கு தேவை 2 ஓவரில் 39 ரன்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சவுரவ் திவாரி ஒரு முனையில் போராடி வருகிறார்

4 ஓவர்களில் 53 ரன்கள் தேவை

திவாரி - 33 (30)


மில்னே - 3 (4)

5 ஓவர்களில் 60 தேவை...

கடைசி 5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 60 ரன் தேவை. களத்தில் நிற்கும் சவுரவ் திவாரி & மில்னே!

க்ருனல் பாண்டியா ரன் அவுட் - 94/6

குயிக் சிங்கிள் எடுக்க முயன்று ரன் அவுட் ஆன க்ருனல் பாண்டியா. 15 ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 97/6.

பொல்லார்ட் காலி - 87/5

ஹாசில்வுட் வீசிய பந்தில் LBW முறையில் அவுட் ஆகி வெளியேரினார் பொல்லார்ட். இன்னும் மும்பை அணியின் வெற்றிக்கு 41 பந்துகளில் 70 ரன்கள் தேவை!

பவர் பிளே ஓவர் - 41/3

6 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 41/3. இதே நிலையில் சென்னை அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது!

நடையை கட்டிய சூர்யகுமார் யாதவ் - சிக்கலில் மும்பை!

ஷர்துல் தாகூர் வீசிய பந்தை கவர் திசையில் அடிக்க முயன்று, டூ ப்லிசிஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆன சூர்ய குமார் யாதவ்!

சிதறியது அன்மொலின் ஸ்டிக்!

2வது விக்கெட்டை இழந்த மும்பை. தீபக் சாஹர் வீசிய பந்தில் க்ளீன் பொல்ட் ஆன அன்மொல் ப்ரித் சிங்! 5 ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 35/2

ஆட்டம் காட்டும் அன்மொல் - 34/1

4வது ஓவரில் 1 சிக்ஸர், 2 பவுண்ட்ரி அடித்த அன்மொல் ப்ரித் சிங். 4 ஓவர் முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 34/1

3 ஓவரில் மும்பை அணி 20/1
சூர்யகுமார் யாதவ் - 1(2)

அன்மொல் ப்ரித் சிங் - 2(4)
தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் - முதல் விக்கெட்டை இழந்த மும்பை

17 ரன்களுக்கு அவுட் ஆன டி காக். சாஹர் வீசிய பந்தை லெக் சைட் திசையில் அடிக்க முயன்ற டி காக் பந்தை தவறவிட்டார். ஆனால் நடுவர் LBW முறையில் அவுட் கொடுக்க மறுப்பு தெரிவிக்க, DRS எடுத்தார் தோனி. ஸ்டம்பை பதம் பார்த்த பந்து, சிறப்பாக விளையாடி வந்த டி காக் அவுட் ஆகி வெளியேரினார்.

2 ஓவர் - 14/0

ஒரே ஓவரில் 12 ரன்கள் விளாசிய மும்பை அணி. 2 ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 14/0.

கேட்சை விட்ட ருதுராஜ் - தப்பித்த டி காக்

ஹாசில்வுட் வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் மிட் விக்கெட் திசையில் டி காக் அடித்த பந்தை தவற விட்ட ருதுராஜ்!

மும்பை 2/0

முதல் ஓவர் முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 2/0

சேஸிங்கை தொடங்கிய மும்பை!

டி காக் மற்றும் அன்மோல் ப்ரித் சிங் மும்பை அணியின் ஓப்பனர்களாக களமிறங்கியுள்ளனர்! 157 ரன்களை துரத்தும் மும்பை..

”பெருமையாக இருக்கிறது” - ருதுராஜ் கைக்வாத்

88 ரன்களை விளாசிய ருதுராஜ் கைக்வாத் : நான் சோர்வாக உணர்கிறேன், ஆனால் நான் என்னுடைய அணிக்காக விளையாடிய விதம் பெருமையாக உள்ளது. விக்கெட் இழப்பால் ஒரு நீண்ட இன்னிங்ஸ் ஆட வேண்டிய தேவை இருந்தது. இது ஒரு இரட்டை தன்மை வாய்ந்த மைதானமாக இருக்கிறது, சுழற்பந்து வீச்சில் லேசாக பந்துகள் திரும்புகிறது.

ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ்

ஒரு முனையில் சென்னை அணி விக்கெட் இழந்து தடுமாற.. மறு முனையில் ருத்ர தாண்டவம் ஆடினார் சென்னை ஓப்பனர் ருதுராஜ். 58 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்ட்ரிகளுடன் 88 ரன்களை விளாசிய ருதுராஜ்!

மும்பை அணிக்கு 157 ரன்கள் இலக்கு!

சென்னை vs மும்பை இடையேயான போட்டியில் 157 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை. துபாய் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி 144 ரன்கள் தான். அந்த வகையில் சவாலான ஸ்கோரை பதிவு செய்தது சென்னை!

இறுதி பந்தை சிக்ஸர் அடித்த ருத்துராஜ்

தல தோனியின் பாணியில் ஆட்டத்தின் இறுதி பந்தை சிக்ஸர் அடித்த ருதுராஜ். 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை விளாசிய சென்னை அணி!

150 ரன்களை கடந்த சென்னை

19.5 ஓவர் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 150/6

19.3 - 148/6

கடைசி ஓவரின் 3வது பந்தை பவுண்ட்ரி அடித்த ருதுராஜ்!

கடைசி 4 பந்துகள்.. ப்ராவோ அவுட்..

19.2 ஓவர் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 144/6. பும்ராஹ் பந்தில் ஆட்டமிழந்த ப்ராவோ!

19 ஓவர்கள்.. 142/5

ப்ராவோ - 21 (6)


ருதுராஜ் - 78 (55)

3 சிக்ஸ்.. 1 பவுண்ட்ரி.. இது ப்ராவோ அதிரடி!

போல்ட் வீசிய 19வது ஓவரில் 24 ரன்கள் விளாசிய சென்னை.. 3 சிக்ஸர் விளாசிய ப்ராவோ!

தொடர்ந்து 2 சிக்ஸர்

ப்ராவோ ON FIRE.. போல்டை பதம் பார்த்த ப்ராவோ... தொடர்ந்து 2 சிக்ஸர்கள்!

122/5 - ருதுராஜ் பவுண்ட்ரி

19வது ஓவர் முதல் பந்தில் போல்ட்டை பவுண்ட்ரி அடித்த ருதுராஜ்!

சிக்ஸர் அடித்த ப்ராவோ

மில்னே வீசிய பந்தை கவர் திசையில் சிக்ஸ் அடித்த ப்ராவோ. 18 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 117/5

உள்ளே வந்த பிராவோ - கடைசி 3 ஓவர்கள்

17 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 107/5

ஜடேஜா அவுட் - முடிவுக்கு வந்த 83 ரன் பார்ட்னர்ஷிப்!

பெரிய ஷாட் அடிக்க முயன்று ஆட்டம் இழந்த ஜடேஜா.. பும்ராஹ் வீசிய பந்தில் பொல்லார்ட் வசம் பிடிப்பட்டார்.


ரவீந்திர ஜடேஜா 26 (33)

100 ரன்களை கடந்த சென்னை!

பும்ராஹ் வீசிய பந்தை சிக்ஸர் விளாசிய ருத்துராஜ். 16.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 104/4

அரைசதம் அடித்த ருத்துராஜ்!

சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர் ருத்துராஜ் கைக்வாத் மும்பை அணிக்கு எதிராக அரைசதம். 41 பந்துகளில் 51 ரன்களை அடித்து விளையாடி வரும் ருத்துராஜ். ஐபிஎல் 2021 தொடரில் தொடர்ச்சியாக இவர் விளாசும் 3வது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது!

டைம் அவுட் - சரிவிலிருந்து மீண்ட சென்னை

6 ஓவர்கள் முடிவில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய சென்னை அணி அடுத்த 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகின்றனர்..

இறுதி 5 ஓவர்கள்...

15 ஓவர் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் - 87/4


ருத்துராஜ் கைக்வாத் - 46 (39)


ரவீந்திர ஜடேஜா - 25 (31)

பும்ராஹ் வீசிய 14வது ஓவரில் 7 ரன்கள்

14 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 81/4

சுழற்பந்து வீச்சை அடித்த சென்னை - பும்ராவை அழைத்து வந்த பொல்லார்ட்!

சுழற்பந்து வீச்சை சென்னை அணி விளாச, கடைசி 2 ஓவர்களில் 26 ரன்களை அடித்தது சென்னை. அதனால் சுழற்பந்து வீச்சை நிறுத்துவிட்டு, மீண்டும் பும்ராவை அழைத்து வந்தார் பொல்லார்ட்!

ஆட்டத்தின் Gear-ஐ ஷிப்ட் செய்யும் சென்னை

13 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 74/4. கடைசி 2 ஓவர்களில் 26 ரன்களை விளாசிய சென்னை!

ஒரே ஓவரில் 18 ரன்கள்

க்ருனல் பாண்டியா வீசிய 12வது ஓவரில் - 1 சிக்ஸர், 2 பவுண்ட்ரி.. 18 ரன்கள் விளாசல்!

ஆட்டத்தின் முதல் ”6”

க்ருனல் பாண்டியா வீசிய பந்தை 85 மீட்டர் தூர சிக்ஸ் அடித்த ருத்துராஜ்..

10 ஓவர் முடிந்தது - 50 ரன்கள் கூட தாண்டல...
10 ஓவர் - 44/4

 

ரவீந்திர ஜடேஜா - 7(13)

ருத்துராஜ் கைக்வாத் - 23(27)
முதல் டைம் அவுட் - 9 ஓவர் 35/4
ருத்துராஜ் கைக்வாத் - 19 (24)

ரவீந்திர ஜடேஜா - 6 (10)
2020 vs 2021 - அதே பவர் பிளே.. அதே அடி..

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளேயின் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 24/5. இந்தாண்டு பவர் பிளே முடிவில் 24/4..

கேட்சை விட்ட டி காக் - ப்ளீஸ் ருத்து..

ராகுல் சாஹர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்த ருத்துராஜ்... தவறவிட்ட டி காக்... 9 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 35/4.

மிரட்டும் மில்னே...

தோனியை காலி செய்த மில்னே, 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களை சாய்த்தார். இவருடைய பந்தில் அம்பாதி ராயுடுவும் காயமடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது!

களத்தில் ருத்துராஜ் - ரவீந்திர ஜடேஜா!

7 ஓவர்கள் முடிவில் 27/4


ருத்துராஜ் 16 (17)


ரவீந்திர ஜடேஜா 2 (5)

மோசமான பவர் பிளே - 6 ஓவர் முடிவில் 24/4

6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து வெறும் 24 ரன்களை அடித்த சென்னை அணி. நடையை கட்டிய தோனி, ரெய்னா, டூப்லிஸிஸ், மொயின் அலி..

மீண்டும் தொடங்கிய ஐபிஎல் - ஏமாற்றிய தல தோனி!

மில்னே வீசிய 6வது ஓவரின் கடைசி பந்து.. ஷாட் பந்தை ஸ்குயர் லேக் திசையில் அடிக்க முயன்ற தோனி போல்ட் வசம் பிடிப்பட்டார். 3 ரன்களில் ஆட்டமிழந்து தோனி ஏமாற்றம்..

தல அவுட்

பவர் பிளேயின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த தோனி!

வேகப்பந்து வீச்சில் மிரட்டும் மும்பை அணி!

போல்ட் - 3 ஓவர்களில் 11 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்களை சாய்த்தார் போல்ட்!

5 ஓவர் முடிவில் : சென்னை அணி - 18/3

ஒரு முனையில் தோனி.. மறு முனையில் ருத்துராஜ்.. 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் - 18/3

மீளும் சென்னை - 5வது ஓவர் அப்டேட்

ரன் – 18/3


ஓவர் - 5


களத்தில் இருப்போர் – தோனி, ருதுராஜ்

பாசிட்டிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தும் ருத்து!

3 விக்கெட்களை இழந்து சென்னை அணி தடுமாறிக்கொண்டிருக்க, மறுமுனையில் 2 பவுண்ட்ரிகளை விளாசிய ருத்துராஜ் கைக்வாத்!

ஆட்டத்தை தொடங்கிய தோனி!

போல்ட் வீசிய முதல் பந்தில் சிங்கிள் அடித்த தோனி. 4.1 ஓவர் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 12/3.

தொடர்ந்து திணறும் சென்னை.. 4வது ஓவர் அப்டேட்

ரன் – 11/3


ஓவர் - 4


களத்தில் இருப்போர் – தோனி, ருதுராஜ்

4வது ஓவரே களமிரங்கிய தோனி!

ஃபாப் டூப்லிசிஸ், மொயின் அலி, ரெய்னா அவுட்... Entry கொடுத்த ’தல’ தோனி... சரிவிலிருந்து சென்னை அணியை மீட்பாரா, ஆட்டத்தில் பரபரப்பு!

சின்ன தல ரெய்னா ஏமாற்றம்..

வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார் ரெய்னா. போல்ட் வீசிய பந்தில் பவுண்டிரி அடித்த ரெய்னா, மீண்டும் ஷாட் அடிக்க முயன்று, பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சென்னை அணி 7/3

வந்த வேகத்தில் அவுட் ஆகி திரும்பிய சின்ன தல!

சரிந்த சென்னை... 3வது ஓவர் முடிவில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த சென்னை!

ராயுடு கையில் அடி.. மீண்டும் டிரஸிங் ரூம் திரும்பினார்

மில்னே வீசிய பந்தில் கையில் அடி வாங்கிய ராயுடு. வலி தாங்க முடியாமல் மீண்டும் டிரஸிங் ரூம் திரும்பினார். அதை தொடர்ந்து உள்ளே எண்ட்ரி கொடுத்த சின்ன தல!

பூஜ்யத்தில் நடையை கட்டும் சென்னை பேட்ஸ்மேன்கள்!

ஃபாப் டூப்லிசிஸை தொடர்ந்து டக் அவுட்டில் நடையை கட்டிய மொயின் அலி... மீண்டும் திரும்பும் 2020 ஐபிஎல் தொடரின் நினைவுகள்..

2வது விக்கெட்டை இழந்த சென்னை - 2/2

மொயின் அலியும் டக் அவுட். மில்னே வீசிய ஷாட் பந்தை அடிக்க முயன்ற மொயின் அலி, டைவ் அடித்து கேட்ச் பிடித்த திவாரி. 2 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து சென்னை தடுமாற்றம்..

முதல் விக்கெட்டை இழந்த சென்னை - 1/1

டக் அவுட் ஆன டூப்லிசிஸ். போல்ட் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் அவுட்!

துபாய் பிட்ச் ரிப்போர்ட்!

துபாய் ஆடுகளம் கடுமையான தன்மையுடன் காணப்படுகிறது, வெப்பமான சூழல் நிலவுகிறது. பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என முன்னாள் வீரர் கேவின் பீட்டர்சன் கருத்து. 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது ஆடுகளம். இந்நிலையில் சேஸிங் செய்வது சிறந்த முடிவு என பீட்டர்சன் கருத்து!

முந்தும் மும்பை.. புள்ளி விபரம் சொல்வது என்ன?

இதுவரை மோதியுள்ள 31 ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி 12 போட்டிகளிலும் மும்பை அணி 19 போட்டிகளிலும் வென்றுள்ளன. புள்ளி விபரம் அடிப்படையில் பல முக்கிய போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது

மும்பை அணிக்கு பின்னடைவு - ரோஹித், ஹர்திக் ஆடவில்லை!

காயம் காரணமாக ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் களமிரங்காத நிலையில், அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவும் இன்றைய போட்டியில் களமிரங்கவில்லை..

இரண்டாம் இடத்தில் CSK.. நான்காம் இடத்தில் Mumbai Indians

முதல் பாதி நடந்த ஐபிஎல் போட்டி வெற்றிகளின் அடிப்படையில் சிஎஸ்கே அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நான்காம் இடத்தில் உள்ளது. 

ரோஹித் பதிலாக கேப்டன்ஷிப் செய்யும் பொல்லார்ட்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் 11


1) டி காக்


2) இஷான் கிஷான்


3) சூர்யகுமார் யாதவ்


4) அன்மோல்ப்ரித் சிங்


5) கைரன் பொல்லார்ட் (கேப்டன்)


6) சவுரவ் திவாரி


7) க்ருனல் பாண்டியா


8) அடாம் மில்னே


9) ராகுல் சாஹர்


10) ஜஸ்பிரித் பும்ராஹ்


11) ட்ரெண்ட் பொல்ட்

100 வது ஆட்டத்தில் பும்ரா

இன்றைய ஐபிஎல் போட்டி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் 100வது ஐபிஎல் போட்டியாகும். இதனால் பும்ரா மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது





சென்னை அணியின் பிளேயிங் 11

1) ஃபாப் டூப்லிசிஸ்


2) ருத்துராஜ்


3) மொயின் அலி


4) சுரேஷ் ரெய்னா


5) அம்பாதி ராயுடு


6) தோனி (கேப்டன்)


7) ரவீந்திர ஜடேஜா


8) பிராவோ


9) ஷர்துல் தாகூர்


10) தீபக் சாஹர்


11) ஜோஷ் ஹாசில்வுட்

சி.எஸ்.கே.,வும் பொல்லாதவன் பொல்லார்டும்.

ரோஹித் ஷர்மா இன்றைய போட்டியில் ஆடவில்லை

ரோஹித் ஷர்மா இன்றைய போட்டியில் ஆடவில்லை என்பதால் பொல்லார்டு மும்பை அணியின் கேப்டனாக செயல்படுகிறார். சென்னை அணியில் சாம் கரண் ஆடவில்லை 





டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு...

சென்னை - மும்பை முதல் போட்டி இன்று

இன்று நடைபெறும் முதல் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது

Background

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் தள்ளி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் அந்தத் தொடரின் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்குகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.