GT vs SRH Score LIVE: பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்..வெளியேறிய ஐதராபாத்..

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 15 May 2023 11:23 PM
குஜராத் உள்ளே.. ஐதராபாத் வெளியே

ஐதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பாண்டின் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத். நடப்பு தொடரிலிருந்து வெளியேறியது ஐதராபாத்


 


 

150 ரன்களை எட்டிய ஐதராபாத்..

19.4  ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 150 ரன்களை எட்டியது


 




போராட்டம் முடிந்தது..

சிறப்பாக விளையாடி வந்த புவனேஷ்வர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்

18 ஓவர்கள் முடிந்தது..

18 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 136 ரன்களை சேர்த்துள்ளது

கடைசி நம்பிக்கையும் போனது..

தனி ஒரு ஆளாக போராடிய கிளாசென் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்

22 பந்துகளே மிச்சம்..

16.2 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 125 ரன்களை சேர்த்துள்ளது

மைதானத்தை விட்டு வெளியேறிய நூர் அகமது..

கிளாசென் அடித்த பந்து காலில் பட்டதில் ஏற்பட்ட காயத்தால், நூர் அகமது மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அரைசதம் விளாசிய கிளாசென்

தனிநபராக போராடும் கிளாசென் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்

100 ரன்களை கடந்த ஐதராபாத்..

13.2 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 100 ரன்களை கடந்தது

12 ஓவர்கள் முடிந்தது..

ஐதராபாத் வெற்றிக்கு 48 பந்துகளில் 105 ரன்கள் தேவை

முடிந்தது 10 ஓவர்கள்..

10 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 66 ரன்களை சேர்த்துள்ளது..

மீண்டும் ஒரு விக்கெட்..

3 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜான்சென்

மீண்டும் ஒரு விக்கெட்..

3 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜான்சென்

மீண்டும் ஒரு விக்கெட்..

3 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜான்சென்

மீண்டும் ஒரு விக்கெட்..

3 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜான்சென்

முடிந்தது 8 ஓவர்கள்..

8 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 54 ரன்களை சேர்த்துள்ளது

முடிந்தது 8 ஓவர்கள்..

8 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 54 ரன்களை சேர்த்துள்ளது

6வது விக்கெட்டும் காலி..

அப்துல் சமாத் 4 ரன்களில் அவுட்

6வது விக்கெட்டும் காலி..

அப்துல் சமாத் 4 ரன்களில் அவுட்

பாதி அணியை இழந்த ஐதராபாத்

7 ரன்களுக்கு நடையை கட்டினார் சன்விர் சிங்

முடிந்தது பவர்பிளே

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 45 ரன்களை சேர்த்துள்ளது

அறிமுகமே சிக்சர்..

இன்றைய போட்டியின் மூலம் அறிமுகமான சன்விர், ஐபில் தொடரில் தனது முதல் ரன்னையே சிக்சர் உடன் தொடங்கியுள்ளார்


 

கேப்டனை இழந்த ஐதராபாத்..

10 ரன்களில் பெவிலியன் திரும்பினார் கேப்டன் மார்க்ரம்

96 பந்துகள் மிச்சம்..

4 ஓவர்கள் முடிவில் 29 ரன்களை சேர்த்த ஐதராபாத்

முடிந்தது 3 ஓவர்கள்..

3 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 17 ரன்களை சேர்த்துள்ளது

3வது விக்கெட்டும் காலி...

ஓப்பனிங் வீரர்களான அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிஷேக் சர்மாவை  அகியோர் தலா 5 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார் கிளாசென்

கம்பேக் கொடுத்த ஐதராபாத் அணி

இறுதியில் சிறப்பாக பந்துவீசிய ஐதராபாத் அணி, குஜராத்தை 188 ரன்களுக்கு சுருட்டியது

புவனேஷ்வர் மிரட்டல்..

5 விக்கெடுட்களை வீழ்த்தி அசத்தினார் புவனேஷ்வர் குமார்.

சரிந்த குஜராத்..

நூர் அகமது ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

அடுத்தடுத்து விக்கெட்..

சுப்மன் கில் 101 ரன்களிலும், ரஷீத் கான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

200 ரன்களை எட்டுமா குஜராத்

19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 186 ரன்கலை குவித்துள்ளது.

200 ரன்களை எட்டுமா குஜராத்

19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 186 ரன்கலை குவித்துள்ளது.

200 ரன்களை எட்டுமா குஜராத்

19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 186 ரன்கலை குவித்துள்ளது.

சதம் விளாசிய கில்..

56 பந்துகளில் சதம் விளாசினார் சுப்மன் கில்

மீண்டும் மீண்டும் விக்கெட்

3 ரன்களில் பெவிலியன் திரும்பினார் திவேதியா

நடையை கட்டினார் மில்லர்

7 ரன்களில் பெவிலியன் திரும்பினார் மில்லர்

சதத்தை நெருங்கும் சுப்மன் கில்..

51 பந்துகளில் 95 ரன்களை குவித்துள்ளார் சுப்மன் கில்

கேப்டன் அவுட்..

வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்ட்யா

150 ரன்களை கடந்த குஜராத்..

15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 154 ரன்களை குவித்துள்ளது.

தவறிய அரைசதம்..

சிறப்பாக விளையாடி வந்த சுதர்ஷன் 36 பந்துகளில் 47 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்

150-ஐ நெருங்கும் குஜராத்..

14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 147 ரன்களை குவித்துள்ளது.

13 ஓவர்கள்..

13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 139 ரன்களை குவித்துள்ளது

முடிந்தது 12 ஒவர்கள்..

12 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 131 ரன்களை குவித்துள்ளது

தவிக்கும் ஐதராபாத்..

11 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளது

கூட்டணி

57 பந்துகளில் 100 ரன்களை சேர்த்த சுப்மன் கில் - சுதர்ஷன் கூட்டணி

முடிந்தது 10 ஓவர்கள்..

10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை சேர்த்துள்ளது.

100 ரன்களை நெருங்கும் குஜராத்..

8 ஓவர்கள் முடிவில் 89 ரன்களை குவித்துள்ள குஜராத் அணி

மீண்டும் ஒரு அரைசதம்..

வெறும் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார் சுப்மன் கில் 

முடிந்தது பவர்பிளே

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை குவித்த குஜராத்

5 ஓவர்களுக்கு இவ்வளவு ரன்களா?

5 ஓவர்களில் 55 ரன்களை குவித்த குஜராத்

ஒரே ஓவரில் 18 ரன்கள்..

4 ஓவரில் 50 ரன்களை கடந்தது குஜராத் அணி.. ஃபரூக்கி வீசிய முதல் ஓவரிலேயே 18 ரன்களை வாரிக்கொடுத்தார்

விடாமல் அடிக்கும் குஜராத்..

பவுண்டரிகள் மூலம் ரன்களை குவித்து வருகிறது கில் - சுதர்சன் கூட்டணி

3 ஓவர்கள் முடிந்தது..

3 ஓவர்கள் முடிவில் 32 ரன்களை குவித்தது குஜராத்

குவியும் ரன்கள்..

2.3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 28 ரன்களை குவித்துள்ளது

முடியாத ஓவர்..

2வது ஓவரை முடிக்க 3 வைட்கள் உட்பட 10 பந்துகளை வீசினார் ஜான்சென்


 

வாய்ப்புகளை விட்ட ஐதராபாத்

2 ரன் அவுட் வாய்ப்புகளை நழுவவிட்டது ஐதராபாத் அணி

முடிந்தது முதல் ஓவர்..

முதல் ஓவர் முடிவில் 4 ரன்களை சேர்த்தது குஜராத் அணி

வந்தது முதல் விக்கெட்..

ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் விரிதிமான் சாஹா

புள்ளிப்பட்டியலில் ஐதராபாத் அணி

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி, நான்கில் மட்டும் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது

புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விவரம்

அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம் (கேப்டன்),அப்துல் சமத், சன்விர் சிங், ஜான்சென், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


அன்மோல்ப்ரீத் சிங், கிளென் பிலிப்ஸ், ஹுசைன், மயங்க் தாகர், னிதிஷ் குமார் ரெட்டி

குஜராத் டைட்டன்ஸ் அணி விவரம்

விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், சாய் சுதர்ஷன், தசும் ஷனகா, ராகுல் திவேதியா, ரஷித் கான், மோகித் சர்மா, முகமது ஷமி, நூர் அகமது


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


யாஷ் தயாள், கே. எஸ். பாரத், தர்ஷன், சாய் கிஷோர், சிவம் மாவி

குஜராத் பேட்டிங்..

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


ஐபிஎல் சீசன்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 61 லீக் போட்டிகள் முடிந்த பிறகும் இதுவரை எந்தவொரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. முன்னணியில் இருந்த குஜராத் மற்றும் சென்னை அணிகள் கூட தோல்வியை சந்தித்து தனக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


குஜராத் - ஐதராபாத் மோதல்:


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம். 


குஜராத் அணி நிலவரம்:


நடப்பு சாம்பியனான குஜராத் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக குஜராத் இருக்கும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரியான கலவையாக உள்ள இந்த அணி, எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. சுப்மன் கில், பாண்ட்யா, டேவிட் மில்லர், ரஷித் கான் போன்ற பல மேட்ச் வின்னர்கள் இருப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. இருப்பினும் கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப குஜராத் அணி ஆர்வம் காட்டி வருகிறது.


ஐதராபாத் அணி நிலவரம்:


முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியோ 11 போட்டிகளில் விளையாடி, வெறும் நான்கில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஐதராபாத் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதன் காரணமாக வாழ்வா, சாவா எனும் சூழலில் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. அதேநேரம், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எந்தவொரு வீரரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது, அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


நரேந்திர மோடி ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை:


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளும் ரன் குவிக்க அதிக வாய்ப்புண்டு. மேலும், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுக்கலாம். 


 


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் குஜராத் அணியும் ஒரு போட்டியில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன.  முதல் போட்டியில் ஐதராபாத் அணியும், இரண்டாவது போட்டியில் குஜராத் அணியும் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறை ஆகும்.


கணிக்கப்பட்ட இரு அணிகள்:


குஜராத் டைட்டன்ஸ் :


விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, முகமது ஷமி, அல்சாரி ஜோசப், நூர் அகமது


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :


அபிஷேக் சர்மா, அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.