தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ ஓஎம்ஆர் விடைத்தாளில்‌ ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.  இனிவரும்‌ தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR என்ற தலைப்பின்கீழ்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டு விடைத்தாளின்‌ மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


காண்பது எப்படி?


புதிய OMR விடைத்தாளின்‌ மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.


குறிப்பாக, https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் உள்ள “OMR Answer Sheet - Sample” என்ற தலைப்பின்கீழ்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.


வினாத் தொகுப்பு எண்‌ வட்டங்கள்‌ கருப்புநிற பேனாவினால்‌ (ball point pen) நிரப்புவது தொடர்பாகவும்‌, மேலும்‌, பக்கம்‌ 1ல்‌ பகுதி 1-ன் கீழ்‌ உள்ள கண்காணிப்பாளரின்‌ கையொப்பம்‌ பக்கம்‌-2ல்‌ பகுதி 2-ன்‌ கீழ்‌ மாற்றப்பட்டுள்ளதும்‌ மாதிரி விடைத்தாளில்‌ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.


OMR விடைத் தாளின்‌ மாதிரி


எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தினால்‌ நடத்தப்படும்‌ இனிவரும்‌ தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத் தாளின்‌ மாதிரியைப் பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்‌ கட்‌டுப்பாட்‌டு அலுவலர்‌ ஜான் லூயிஸ்‌ தெரிவித்துள்ளார்.


டிஎன்பிஎஸ்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள்


டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அவர் பதவிக்கு வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வர்களின் விவரங்களை வெளிப்படைத் தன்மையுடன் பதிவேற்றம் செய்தது, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவது ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில் தற்போது ஓஎம்ஆர் விடைத்தாளில்‌ ஒரு சில புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனிவரும்‌ தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR என்ற தலைப்பின்கீழ்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டு விடைத்தாளின்‌ மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.