அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரனை விசாரிக்க 7 நாட்கள் அனுமதி அளித்து போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அடுத்த நாள் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அண்ணா பல்கலை வளாகத்தில் இருந்த சிசிடிவி அடிப்படையில் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.