Chennai Power Cut: சென்னையில் நாளை (21.01.2025) செவ்வாய் கிழமை அன்று எங்கெல்லாம் மின் தடை என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என மின்சார வாரிய ஊழியர்கள் அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதில் மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
இந்நிலையில், நாளை ஜனவரி 21 ஆம் தேதி செவ்வாய்கிழமை சென்னையில் எங்கெல்லாம் மின் தடை செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாளை 21-01-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தொண்டியார்பேட்டை: கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. சாலை, டி.எச். சாலை I பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி. கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கமல் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு I பகுதி, மன்னப்பன் தெரு I பகுதி, தங்கவேல் தெரு, வீரகுட்டி தெரு, பெரும்கோவில் தெரு, நைனியப்பன் தெரு கே.ஜி.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.
பள்ளிக்கரணை : பள்ளிக்கரணை பகுதிகள், அசாம் பவன், ஒடிசா பவன், HLL HT சேவை, காமாட்சி மருத்துவமனை, மயிலைபாலாஜி நகர்- பகுதி 1 முதல் பகுதி 4 வரை, தந்தைபெரியார் நகர், சீனிவாசா நகர், சிலிக்கான் டவர், ஜாஸ்மின் இன்போடெக், CTS, NIWE HT, கார்ப்பரேஷன் டம்ப் யார்டு, தோஷி பிளாட் யார்டு , வேளச்சேரி மெயின் ரோடு, RV டவர்கள்.
கே.கே.நகர்: கன்னிகாபுரம் 1வது, 2வது, 3வது தெரு, விஜயராகவபுரம் 1வது, 2வது, 3வது, 4வது, 5வது தெரு & குறுக்குத் தெரு, மீரான் ஷாஹிப் தெரு ராஜா மன்னார் சாலை பகுதி, ஏவிஎம் அஸ்டா, ஏவிஎம் ஸ்டுடியோ, ஆற்காடு காலனி ரோட்டின் கேபெல்லா பகுதி, மா குமரன் காலனி சாலை, சாலிகிராமம், 80 அடி சாலையின் ஒரு பகுதி, ராணி அண்ணாநகர், பி.டி.ராஜன் சாலையின் ஒரு பகுதி, 14 & 15வது செக்டார் கே.கே.நகர் 94வது தெரு முதல் 104வது தெரு, எஸ்எஸ்பி நகர், எஸ்.வி.லிங்கம் சாலை, அழகர் பெருமாள் கோயில் தெரு, விஜயா தெரு, ஒட்டகபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி.
பணிகள் முடிந்தால், பிற்பகல் 02.00 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் தொடங்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.