GT vs SRH LIVE Score: வீணாய்ப்போன கம்மின்ஸ் ப்ளான்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

GT vs SRH LIVE Score Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 31 Mar 2024 06:57 PM
GT vs SRH LIVE Score: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய குஜராத்!

குஜராத் அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

GT vs SRH LIVE Score: வீணாய்ப்போன கம்மின்ஸ் ப்ளான்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

19.1 ஓவரில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

GT vs SRH LIVE Score: ஒரு ரன் எடுத்தால் குஜராத் வெற்றி!

19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்துள்ளது. குஜராத் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்க வேண்டும். 

GT vs SRH LIVE Score: வெற்றியை நோக்கி முன்னேறும் குஜராத்!

குஜராத் அணி 16 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டினை இழந்து 138 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்து இலக்கைத் துரத்தி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: 100 ரன்களைக் கடந்த குஜராத்!

13.1 ஓவரில் குஜராத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: 100 ரன்களை நெருங்கும் குஜராத்!

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வரும் குஜராத் அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது. குஜராத் அணி வெற்றி பெற 7 ஓவரில் 65 ரன்கள் தேவைப்படுகின்றது. 

GT vs SRH LIVE Score: 90 ரன்களை எட்டிய குஜராத்!

குஜராத் அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து இலக்கை நோக்கி சீராக முன்னேறி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது. அடுத்த 10 ஓவர்களில் குஜராத் அணிக்கு 85 ரன்கள் தேவைப்படுகின்றது. 

GT vs SRH LIVE Score: கில் அவுட்!

போட்டியின் 10வது ஓவரின் முதல் பந்தில் குஜராத் அணியின் கேப்டன் கில் தனது விக்கெட்டினை மயாங்க் மார்கண்டே பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

GT vs SRH LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

GT vs SRH LIVE Score: கில்லுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன்!

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில்லுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

GT vs SRH LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.

GT vs SRH LIVE Score: இம்பேக்ட் ப்ளேயர் சாய் சுதர்சன்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் களம் இறங்கி உள்ளார்.

GT vs SRH LIVE Score: 5 ஓவர்கள் முடிவில்!

5 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

GT vs SRH LIVE Score: விருத்திமான் சாஹா அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 25 ரன்கள் எடுத்தார்.

GT vs SRH LIVE Score: 4 ஓவர்கள் முடிவில்!

4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

GT vs SRH LIVE Score: அட்டகாசமான சிக்ஸரை விரட்டிய சாஹா!

போட்டியின் இரண்டாவது ஓவரில் விரத்திமான் சாஹா குஜராத் அணிக்கான முதல் சிக்ஸ்ரை விளாசினார். 

GT vs SRH LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவரில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: முதல் பவுண்டரியை விளாசிய கில் !

போட்டியின் முதல் ஓவரில் கில் குஜராத் அணியின் சார்பில் முதல் பவுண்டரியை விளாசியுள்ளார். 

GT vs SRH LIVE Score: களமிறங்கியது குஜராத்!

குஜராத் அணி 163 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது. கில் மற்றும் சாஹா ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். 

GT vs SRH LIVE Score: இறுதியில் தடுமாறிய ஹைதராபாத்; குஜராத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 162 ரன்கள் சேர்த்தது. 

GT vs SRH LIVE Score: வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்!

வாஷிங்டன் சுந்தர் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

GT vs SRH LIVE Score: 6வது விக்கெட்டினை இழந்த ஹைதராபாத்!

ஹைதராபாத் அணி தனது 6வது விக்கெட்டினை போட்டியின் 20வது ஓவரில் இழந்தது. சமத் தனது விக்கெட்டினை 20 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

GT vs SRH LIVE Score: 150 ரன்களை நெருங்கும் ஹைதராபாத்!

ஹைதராபாத் அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score:16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: மார்க்ரம் அவுட் !

19 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க்ரம் தனது விக்கெட்டினை உமேஷ் யாதவ் பந்தில் இழந்து வெளியேறினார். 

GT vs SRH LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: ஹென்றிச் க்ளாசன் அவுட்!

அதிரடி ஆட்டக்காரர் ஹென்றிச் க்ளாசன் தனது விக்கெட்டினை ரஷித் கான் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 13 பந்தில் 24 ரன்கள் சேர்த்தார். 

IPL 2024 GT vs SRH LIVE Score: அதிரடிக்கு கியரை மாற்றும் ஹைதராபாத்!

ஹைதராபாத் அணி 13 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: 100 ரன்களைக் கடந்த ஹைதராபாத்!

ஹைதராபாத் அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: நிதான ஆட்டத்தில் ஹைதராபாத்!

ஹைதராபாத் அணி 12 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs SRH LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: அபிஷேக் சர்மா அவுட்!

10வது ஓவரின் கடைசிப் பந்தில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டினை 20 பந்தில் 29 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். 

IPL 2024 GT vs SRH LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: ஹெட் அவுட்!

சிறப்பாக விளையாடி வந்த ஹெட் தனது விக்கெட்டினை நூர் அகமது பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 14 பந்தில் 19 ரன்கள் சேர்த்திருந்தார். 

IPL 2024 GT vs SRH LIVE Score: 50 ரன்களைக் கடந்த ஹைதராபாத்!

ஹைதராபாத அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: அடுத்தடுத்து சிக்ஸர் விளாசும் அபிஷேக் சர்மா!

போட்டியின் 6வது ஓவரில் அபிஷேக் சர்மா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் விளாசி மிரட்டியுள்ளார்.

IPL 2024 GT vs SRH LIVE Score: 40 ரன்களை எட்டிய ஹைதராபாத்!

5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 41 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: மயாங்க் அகர்வால் அவுட்!

மயாங்க் அகர்வால் தனது விக்கெட்டினை 16 ரன்கள் சேர்த்த நிலையில் ஒமர்சாய் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

GT vs SRH LIVE Score: நையப்புடைக்கும் ஹைதராபாத்; பரிதாப பவுலிங்கில் தடுமாறும் குஜராத்!

ஹைதராபாத் அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: மூன்று ஓவர்கள் முடிந்தது!

மூன்று ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி  27 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 GT vs SRH LIVE Score: 2 ஓவர்கள் முடிந்தது!

இரண்டு ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார். 

GT vs SRH LIVE Score: அதிரடி முதல் ஓவர்!

ஹைதராபாத் அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது. ட்ராவிஸ் ஹெட் இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 

GT vs SRH LIVE Score: தொடங்கியது ஆட்டம்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி களமிறங்கியது. 

GT vs SRH LIVE Score: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவன்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): மயங்க் அகர்வால், டிராவிஸ் தலைவர், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்

GT vs SRH LIVE Score: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்!

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில்(கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், நூர் அகமது, மோகித் சர்மா, தர்ஷன் நல்கண்டே

GT vs SRH LIVE Score: ஹைதராபாத் அணியின் சரவெடி தொடருமா? டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

Background

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மார்ச் 31ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் 2024ல் இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி இதுவாகும். 


குஜராத் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஹைதராபாத் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று, நிகர ரன் டேட் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது.


கடந்த மார்ச் 24ம் தேதி நடந்த போட்டியின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேசமயம் மார்ச் 26 அன்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் (சிஎஸ்கே) தோல்வியடைந்தது.


ஹைதராபாத் தனது இரண்டாவது ஆட்டத்தில் மார்ச் 27 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியையும் தோற்கடித்தது. இருப்பினும், முன்னதாக மார்ச் 23 அன்று, குஜராத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:


ஐபிஎல் 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அறிமுகமானதிலிருந்து (சாம்பியனான) குஜராத் மற்றும் ஹைதராபாத் இதுவரை 3 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன. இதில் 2ல் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 1ல் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத்-க்கு எதிராக குஜராத்தின் அதிகபட்ச ஸ்கோர் 199 ஆகவும், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 195 ஆகவும் உள்ளது.


அகமதாபாத் பிட்ச் எப்படி இருக்கும்..?


இந்த சீசனில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரே ஒரு போட்டி மட்டும் நடந்துள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்த மும்பை அணியால் 169 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. இருப்பினும், ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பார்மில் உள்ளதால் இன்றைய போட்டியில் அதிக ஸ்கோரிங் மேட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை, இன்னும் சிறப்பாக பேட்டிங்கை ஆடவில்லை. இந்த போட்டியில் மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். 


சுப்மன் கில் - அகமதாபாத் பந்தம்:


சும்பன் கில் அகமதாபாத்தில் விளையாடிய 13 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 63.6 சராசரியில் 700 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட ஸ்டேடியத்தில் குறைந்தது 500 ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்களில் இது நான்காவது சிறந்த சராசரியாகும்.


ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக எதையும் செய்யவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் 31 மற்றும் 8 ரன்கள் முறையே இத்தகைய ரன்கள் எடுத்தார். சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் மெதுவாக பேட்டிங் செய்கிறார்கள். மிடில் ஆர்டரில் டேவில் மில்லரும் ரன் அடிக்க திணறுகிறார்.


அதிரடி காட்டும் கிளாசன்:


ஹென்ரிச் கிளாசன் இந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி 15 சிக்சர்களை அடித்துள்ளார். 2024ல், டி20யில் கிளாசன் 53 சிக்சர்களை அடித்துள்ளார். எனவே இந்த போட்டியிலும் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


குஜராத் டைட்டன்ஸ் ( ஜிடி ): விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா உமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், ஆர்.சாய் கிஷோர்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) : மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.