DC vs PBKS, IPL 2023 LIVE: பஞ்சாபிடம் சரணடைந்த டெல்லி; சிறப்பான ஆட்டத்தால் 6வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்..!

IPL 2023, Match 59, DC vs PBKS: பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 13 May 2023 11:17 PM
DC vs PBKS Live: தொடரில் இருந்து வெளியேறிய டெல்லி..!

டெல்லி அணி இந்த தோல்வி மூலம் ப்ளேஆஃப் வாய்ப்பை  முற்றிலும் இழந்தது. டெல்லி அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் உள்ளது. 

DC vs PBKS Live: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்..!

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.

DC vs PBKS Live: பஞ்சாப் வெற்றி..!

டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெடுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

DC vs PBKS Live: 16 ஓவர்கள் முடிவில்..!

16 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs PBKS Live: விக்கெட்..!

இக்கட்டான சூழலில் பொறுப்புடன் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அமன் கான் 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை எல்லீஸ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.  

DC vs PBKS Live: 100 ரன்களை எட்டிய டெல்லி..!

14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 66 ரன்கள் தேவை. 

DC vs PBKS Live: இம்பேக்ட் ப்ளேயரும் அவுட்..!

டெல்லி அணியின் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய மனீஷ் பாண்டே ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

DC vs PBKS Live: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்துள்ளது. 

DC vs PBKS Live: அக்‌ஷ்ர் பட்டேல் அவுட்..!

10வது ஓவரின் முதல் பந்தில் அக்‌ஷ்ர் பட்டேல் தந்து விக்கெட்டை வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

DC vs PBKS Live: ஆட்டத்தை மாற்றிய 19 பந்துகள்..!

ஏழாவது ஓவரின் முதல் பந்தில் இருந்து 10வது ஓவரின் முதல் பந்து வரை டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

DC vs PBKS Live: வார்னரும் அவுட்..!

9வது ஓவரின் கடைசிப் பந்தில் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த டெல்லி அணியின் கேப்டன் வார்னர் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

DC vs PBKS Live: ரூஸோ அவுட்..!

டெல்லி அண்இயின் ரூஸோ 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

DC vs PBKS Live: மார்ஷ் அவுட்..!

சால்ட் தனது விக்கெட்டை இழந்த பின்னர் வந்த மிட்ஷெல் மார்ஷ் தனது விக்கெட்டை ராகுல் சஹாரிடம் இழந்து வெளியேறினார். இவர் வெறும் 3 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். 

DC vs PBKS Live: வார்னர் 60வது அரைசதம்..!

டெல்லி அணியின் கேப்டன் வார்னர் இந்த போட்டியில் 23 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இது அவருடைய 60வது ஐபிஎல் அரைசதமாகும். 

DC vs PBKS Live: பவர்ப்ளே முடிவில்..!

168 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள டெல்லி அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs PBKS Live: 168 ரன்கள் இலக்கு..!

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 7 அணி விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியின் சார்பில் ப்ரப்சிம்ரன் 103 ரன்கள் குவித்திருந்தார்.

DC vs PBKS Live: நங்கூர ஆட்டம் முடிவுக்கு வந்தது..!

65 பந்தில் 103 ரன்கள் சேர்த்த நிலையில் ப்ரப்சிம்ரன் டெல்லி அணியின் முகேஷ் குமார் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

DC vs PBKS Live: 150 ரன்களைக் கடந்த பஞ்சாப்..!

18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs PBKS Live: ப்ரப்சிம்ரன் சதம்..!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ப்ரப்சிம்ரன் 61 பந்தில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை எட்டியுள்ளார். 

DC vs PBKS Live: 100 ரன்களை எட்டிய பஞ்சாப்..!

13.1 ஓவரில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது. 

DC vs PBKS Live: அரைசதம் எட்டிய ப்ரப்சிம்ரன்..!

சிறப்பாக ஆடி வரும் ப்ரப்சிம்ரன் 42 பந்தில் அரைசதம் விளாசிள்ளார். 

DC vs PBKS Live: கியரை மாற்றிய ப்ராப்சிம்ரன்..!

போட்டியின் 11வது ஓவரில் ப்ராப்சிம்ரன் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த ஓவரை மிட்ஷெல் மார்ஷ் வீசினார். 

DC vs PBKS Live: பாதி ஆட்டம் முடிந்தது..!

10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்துள்ளது. 

DC vs PBKS Live: 50 ரன்களை எட்டிய பஞ்சாப்..!

7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs PBKS Live: பவர்ப்ளே முடிவில்..!

பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs PBKS Live: மூன்றாவது விக்கெட்டை இழந்த பஞ்சாப்..!

ஜிதேஷ் சர்மா 5 பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை அக்‌ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். 

DC vs PBKS Live: 5 ஓவர்கள் முடிவில்..!

5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்து 38 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs PBKS Live: 100வது போட்டியில் அசத்தும் இஷாந்த்..!

டெல்லி அணியின் இஷாந்த் சர்மாவின் 100வது ஐபிஎல் போட்டி இது. இதுவரை இரண்டு ஓவர்களை வீசியுள்ள அவர் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

DC vs PBKS Live: டாஸ்..!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. 

Background

PBKS vs DC IPL 2023: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


ஐபிஎல் சீசன்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.


பஞ்சாப் - டெல்லி மோதல்:


இந்த சூழலில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ள, 59வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடலஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலும் இழந்துள்ள டெல்லி அணிக்கு இந்த போட்டி புள்ளிப்பட்டியலில் தங்களை நல்ல நிலைக்கு முன்னேற்ற உதவும். ஆனால் பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பஞ்சாப் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க முடியும். 


பஞ்சாப் அணி நிலவரம்:


நடப்பு தொடரை அடுத்தடுத்து வெற்றிகளால் தொடங்கினாலும், கடந்த சில போட்டிகளாக பஞ்சாப் அணி பெரிதாக சோபிக்கவில்லை. வெற்றி, தோல்வி என மாறி மாறி முடிவுகளை பெற்று வருகிறது. கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் பஞ்சாப் அணி 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால், 10 புள்ளிகளுடன்  8வது இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே இந்த அணி, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த சூழலில் இன்றை போட்டியில் வென்று பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் அணி முனைப்பு காட்டி வருகிறது.


டெல்லி அணி நிலவரம்:


வார்னர் தலைமையிலான டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டும் வென்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் மூலம், நடப்பு தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. அதேநேரம்,  கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், பார்ட்டி ஸ்பாய்லர் என குறிப்பிடும் வகையில், கடைசி நேரதில் பல அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பை டெல்லி அணி பறிக்கக்கூடும் என கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் கொல்கத்தா அணியிடம் டெல்லி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.