சேலம் மாமாங்கம் பகுதியில் சிப்காட் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 120 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேற்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளிடம் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் உள்ள டைட்டில் நீயோ தொழிற் பூங்காவினை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு என அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு சிறப்பாக கிடைத்து வருகிறது. சேலத்திற்கு அடுத்த கட்ட வளர்ச்சியை கொண்டு வரப்பதற்காக ஆய்வு நடத்திய உள்ளேன். தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மிகப்பெரிய வளர்ச்சி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது. அது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என கூறினார்.
சேலத்தில் ஜவுளி பூங்கா என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதற்கு நிலம் எடுப்பதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது. இதனை ஜவுளி சங்கம் சார்பில் இடத்தை கேட்டுள்ளனர். அதேபோன்று அரசாங்கத்தின் இடம் இருந்து சில சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். அதற்கான ஆலோசனை நடத்தி வெகுவிரைவில் அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார்.
ஜவுளி பூங்கா ஒவ்வொரு முறையும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது என்ற கேள்விக்கு, திமுக அமைச்சர்கள் கூறினால் அது கண்டிப்பாக நடக்கும். நீண்ட நாட்களாக ஜவுளி கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதாக சென்று அசுத்தம் ஏற்படுகிறது. இதற்கான நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் 2021 ஆம் ஆண்டு ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பணியினை தொடங்கினார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இதற்கான அறிவிப்பு இருந்தது. அது இன்று நினைவாகிறது.
தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அதிகாரிகளின் ஆய்விற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் ஜவுளி பூங்காவில் வேலை செய்ய உள்ளனர். கட்டிடங்கள் மிகப் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். மேலும், அங்கு ஒரு நீர் நிலை உள்ளது அதில் கழிவு நீர் கலக்காமல் இருப்பது போன்ற பல்வேறு சவால்கள் இருப்பதாக கூறினார். மற்ற இடத்தில் மாசு படுகின்றது என்பதற்காக இந்த ஒரு இடத்தை மாசு படுத்த முடியாது. முழுமையாக எவ்வாறு மாசுபடுவதை தவிர்த்து பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு புதிய தொழில்நுட்பம் மூலமாக ஜவுளி பூங்கா அமைக்கப்படவுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நல்ல செய்தி வந்து சேரும் என கூறினார்.
தமிழக அரசு சார்பில் ஒரு கோரிக்கை உள்ளது. தொழிற்சாலையைச் சார்ந்தவர்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேலம் மாநகர பகுதியில் மாசு படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். அதுபோன்று இல்லாமல் நீர் நிலைகள் மாசுபடாத வகையில் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தொழிற்சாலை உரிமையாளர்களுடன் கேட்டுக் கொண்டுள்ளோம், அவர்கள் முழுமையாக ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர் என்றார்.
இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.