CSK vs DC LIVE Score: டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி

CSK vs DC IPL 2023 LIVE Score Updates: சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியின் நிலவரத்தை உடனுக்குடன் இங்கே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 10 May 2023 11:28 PM
CSK vs DC LIVE Score: டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி - 168 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

CSK vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகள்.. எழ முடியாமல் தவித்த டெல்லி அணி

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின்  விக்கெட்ட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் அந்த அணியில் ரசிகர்கள் சோகம்

CSK vs DC LIVE Score: 6 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி - அக்ஸர் படேல் அவுட்

டெல்லி அணி வீரர்  அக்ஸர் படேல் 21 ரன்களில் அவுட்டானார். அணியின் ஸ்கோர் 17.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களாக உள்ளது. 

CSK vs DC LIVE Score: 5 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி - வெற்றியை நோக்கி சென்னை அணி

டெல்லி அணி வீரர் ரூஸோ கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. 

CSK vs DC LIVE Score: 8 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது டெல்லி அணி

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை கடந்தது. மணிஷ் பாண்டே, ரூஸோ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

CSK vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி திணறல்

சென்னை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 3வது விக்கெட்டை இழந்தது - மிட்செல் மார்ஷ் 5 ரன்களில் ரன் அவுட்டானார்.

CSK vs DC LIVE Score: 2வது விக்கெட்டை இழந்தது டெல்லி அணி - தீபக் சாஹர் அசத்தல் பந்துவீச்சு

சென்னை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 20 ரன்களுக்கு  2வது விக்கெட்டை இழந்தது. சால்ட் விக்கெட்டை தீபக் சாஹர் கைப்பற்றினார். 

CSK vs DC LIVE Score: இரண்டாவது ஓவரில் 12 ரன்கள் எடுத்த டெல்லி

இரண்டாவது ஓவரை சென்னை அணியின் தேஷ் பாண்டே வீசினார். இதில் டெல்லி அணி 12 எடுத்ததன் மூலம் 13 ரன்கள் எடுத்தது. 

CSK vs DC LIVE Score: முதல் ஓவரில் ஒரு விக்கெட்

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது

CSK vs DC LIVE Score: தோனி, ஜடேஜா அதிரடியில் ரன்களை குவித்த சென்னை அணி - டெல்லி அணிக்கு 168 ரன்கள் இலக்கு

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167  ரன்கள் எடுத்துள்ளது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. 

CSK vs DC LIVE Score: 150 ரன்களை தாண்டிய சென்னை அணி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சென்னை அணி 18.4 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது . அந்த அணி இதுவரை 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

CSK vs DC LIVE Score: 6வது விக்கெட்டை இழந்தது சென்னை அணி - களமிறங்கினார் கேப்டன் தோனி

சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு அவுட்டானார். கேப்டன் தோனி அடுத்த வீரராக களமிறங்கியுள்ளார். 

CSK vs DC LIVE Score: ஷிவம் துபே விக்கெட்டை தட்டி தூக்கிய மிட்செல் மார்ஷ்

சென்னை அணி வீரர் ஷிவம் துபே மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்களை அவர் எடுத்தார். 

CSK vs DC LIVE Score: 100 ரன்களை கடந்தது சென்னை அணி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி  13.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது

CSK vs DC LIVE Score: 21 ரன்களில் அவுட்டான ரஹானே - ரன் குவிக்க முடியாமல் திணறும் சென்னை அணி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் ரஹானே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

CSK vs DC LIVE Score: 21 ரன்களில் அவுட்டான ரஹானே - ரன் குவிக்க முடியாமல் திணறும் சென்னை அணி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் ரஹானே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

CSK vs DC LIVE Score: 3வது விக்கெட்டை இழந்த சென்னை - கெத்து காட்டும் டெல்லி சுழற்பந்துவீச்சாளர்கள்

சென்னை அணி வீரர்  மொயீன் அலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார் - இதுவரை எடுக்கப்பட்ட 3 விக்கெட்டுகளையும் டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். 

CSK vs DC LIVE Score: கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த ருத்துராஜ் கெய்க்வாட்

சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சென்னை அணியின் முதல் 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் படேல் எடுத்துள்ளார். 

CSK vs DC LIVE Score: பவர்பிளேவில் 49 ரன்களை குவித்த சென்னை அணி

சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. கெய்க்வாட் 24 ரன்களும், ரஹானே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

CSK vs DC LIVE Score: முதல் விக்கெட்டை இழந்தது சென்னை அணி - கான்வே அவுட்..!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டை இழந்தது சென்னை அணி - அக்ஸர் படேல் பந்துவீச்சில் டெவன் கான்வே விக்கெட்டை இழந்தார்.

CSK vs DC LIVE Score: சென்னை அணி நிதான ஆட்டம் - விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி அணி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி நிதான ஆட்டம் - 4 ஓவர்கள் முடிவில் அந்த அணி 32 விக்கெட் இழப்பின்றி  ரன்கள் எடுத்துள்ளது. 

CSK vs DC LIVE Score: சென்னை - டெல்லி அணிகள் மோதல்.. பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள்..!

சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா


டெல்லி அணி: டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா

CSK vs DC LIVE Score: டாஸ் வென்றது சென்னை அணி - பேட்டிங்கை தேர்வு செய்தார் கேப்டன் தோனி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

CSK vs DC LIVE Score: புள்ளிப்பட்டியலில் சென்னை, டெல்லி அணிகளின் நிலவரம்

சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 13 புள்ளுகளுடன் 2வது இடத்திலும், டெல்லி அணி 6 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளது. 

Background

ஐபிஎல் 16வது சீசனின் 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே சமயம் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது. அதேபோல், டெல்லி அணியானது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறது. இரு அணிகளும் சிறந்த ஃபார்மில் வருவதால், இந்த போட்டி அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 


CSK vs DC போட்டி விவரங்கள்:


சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், மேட்ச் 55
இடம் - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
தேதி & நேரம்: செவ்வாய், மே 10, மாலை 7:30 மணி
டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா


பிட்ச் அறிக்கை: 


ஐபிஎல் 2023ல் இதுவரை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் மூன்றில் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்த சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 173 ஆகும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் திணற அதிகம் வாய்ப்புள்ளது. நடப்பு சீசனில் பெரிய ஸ்கோரைத் துரத்துவது கடினமாக இருப்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும்.


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்: 


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே):


ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா


டெல்லி தலைநகரங்கள் (டிசி):


டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது


சிறந்த வீரர்களாக யார் இருப்பார்கள்? 


டெவோன் கான்வே: 


இந்த சீசனில் டெவோன் கான்வே சிறந்த பார்மில் இருக்கிறார். ஏற்கனவே இவர் சென்னை அணிக்கான 57.25 சராசரியுடன் 458 ரன்களுடன் தனது பெயருக்கு ஐந்து அரைசதங்களுடன் அசத்தி வருகிறார் . இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


துஷார் தேஷ்பாண்டே:


சென்னை அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 20.84 சராசரியில் 19 விக்கெட்டுகளுடன் சீசனின் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். கடைசியாக நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 


இன்றைய போட்டி கணிப்பு : இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.