T20 Women WC LIVE Score: வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தில் களத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்! வெற்றி பெறுமா இந்தியா?

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உடனடி அப்டேட்களை உடனே தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.

முகேஷ் Last Updated: 15 Feb 2023 09:16 PM
T20 Women WC LIVE Score: நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய மகளிர் அணி!

இந்திய அணியின் ஹர்மன்ப்தீர் கவுர், ரிச்சா இருவரும் சேர்ந்து நிதானமாக விளையாடி வருகின்றன. 

T20 Women WC LIVE Score: சாதனை வாய்ப்பை இழந்த ஸ்மிர்தி மந்தனா!

இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா 10 ரன்களில் வெளியேறினார்.

T20 Women WC LIVE Score: இந்தியாவுக்கு 119 ரன் இலக்கு!

வென்ஸ் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் எடுத்தது!

T20 Women WC LIVE Score: தீப்தி சர்மா 100 விக்கெட் எடுத்து சாதனை!

இந்திய பவுலர் தீப்தி ஷர்மா 20 ஓவர் தர கிரிக்கெடில் 100 விக்கெட்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

T20 Women WC LIVE Score : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 -வது விக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 -வது விக்கெட்.

T20 Women WC LIVE Score : 100 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 100 ரன் எடுத்துள்ளது. 

T20 Women WC LIVE Score : அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துமா வெஸ்ட் இண்டீஸ்?

வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்ஸ் Gajnabi மற்றும் நேசன் இருவரும் களத்தில் நிதான ஆட்டத்த வெளிப்படுத்தி வருகின்றனர்.

T20 Women WC LIVE Score : 16 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்கோர் இதுதான்!

வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 88 ரன் எடுத்துள்ளது. 

T20 Women WC LIVE Score: அடுத்தடுத்த விக்கெட்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ்!

பேட்டர் ஹென்ரி ரன் அவுட். 

T20 Women WC LIVE Score : தீப்தி ஷர்மாவின் அதிரடி பவுலிங்; டெய்லர் அவுட்!

பேட்டர் டெய்லர் தீப்தி ஷர்மாவின் பவுலிங்கில் அவுட் ஆனார். 78 ரன்களுடன் 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது, 

T20 Women WC LIVE Score: 14-வது ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அண்ஞி

வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன் எழுத்துள்ளது. பேட்டர்ஸ் டெய்லர் மற்றும் ஹென்றி களத்தில் உள்ளனர்.

T20 Women WC LIVE Score: வெஸ்ட் இண்டீஸ் வீரர் அவுட்!

தீப்தி சர்மாவைன் பவுலிங்கில் வெஸ்ட் இண்டீஸின் கேம்பெல்லே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

10 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி : 53/1

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்: இந்தியா மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

T20 Women WC LIVE Score : 7 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிதான ஆட்டம்!

வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

T20 Women WC LIVE Score : 5 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் நிலவரம்!

வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

முதல் விக்கெட்டை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ்.. கேப்டன் ஹேலி மேத்யூஸை காலி செய்த பூஜா..!

பூஜா வஸ்த்ரகர் வீசிய 2வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸை 2 ரன்களில் வெளியேற்றினார். 

பேட்டிங்கை கையில் எடுத்த வெஸ்ட் இண்டீஸ்.. பந்துவீச்சில் விரட்டியடிக்குமா இந்தியா..?

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்: இந்தியா மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

போட்டியின் நேரடி ஒளிபரப்பு:

இந்திய பெண்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கு இடையிலான இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஹெய்லி மேத்யூஸ் (கேப்டன்), ஸ்டாபானி டெய்லர், ஷெமைனி கேம்ப்பெல், ஷபிகா கஜானாபி, சின்னெல்லே ஹென்றி, சாய்டன் நேஷன், அஃபி பிளெட்சர், ஜெய்டா ஜேம்ஸ், ஷாமிலியா கானல், ரஷாதா வில்லியம்ஸ் (விக்கெட் கீப்பர்), ஷகேரா செல்மன்.

கணிக்கப்பட்ட இந்திய அணி:

ஸ்மிருதி மந்தனா முழு உடல் தகுதியுடன் இருக்கும்போது, ​​​​ஷெபாலி வர்மாவுடன் தொடக்கம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர, அணியில் வேறு எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை.


ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.

Background

8வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்று 10 அணிகளும் கோப்பைக்காக மோத இருக்கின்றன. 


ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 4 அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். 


இந்தநிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான போட்டி மாலை 6.30 மணிக்கு கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா திரும்புகிறார். காயம் காரணமாக மந்தனா, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவில்லை. 


இன்றைய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஒரு குறிப்பிட்ட ரன்களை மந்தனா எடுத்தால், தனிப்பட்ட சாதனை ஒன்றை படைப்பார். 


புதிய சாதனை :


சர்வதேச மகளிர் டி20 போட்டியில் டீன்ட்ரா டாட்டினின் ரன் சாதனையை முறியடிக்க ஸ்மிருதி மந்தனாவுக்கு 47 ரன்கள் தேவையாக உள்ளது. 47 ரன்கள் மட்டும் ஸ்மிருதி மந்தனா எடுத்தால், சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த உலகின் ஆறாவது கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார். வெஸ்ட் இண்டீஸ் டியான்ட்ரா டாட்டினை பின்னுக்கு தள்ளுவார். அணிக்காக விளையாடி வரும் பெண்களுக்கான டி20 சர்வதேச போட்டியில் டாட்டின் 2697 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 2651 ரன்கள் எடுத்துள்ளார். இன்று நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி 47 ரன்கள் எடுத்தால், அவர் டியாண்ட்ராவை விட்டு வெளியேறுவார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி ஆவார். சர்வதேச மகளிர் டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 2956 ரன்கள் குவித்துள்ளார். 


மந்தனா பார்ம் அவுட்:


சில காலமாக சிறப்பான பார்மில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடந்த முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. முத்தரப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 86 ரன்கள் எடுத்தார். கடைசி ஐந்து டி20 போட்டிகளில் நான்கில், அவர் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஸ்மிருதி மந்தனா சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கணிக்கப்பட்ட இந்திய அணி:


ஸ்மிருதி மந்தனா முழு உடல் தகுதியுடன் இருக்கும்போது, ​​​​ஷெபாலி வர்மாவுடன் தொடக்கம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர, அணியில் வேறு எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை.


ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.


கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி:


ஹெய்லி மேத்யூஸ் (கேப்டன்), ஸ்டாபானி டெய்லர், ஷெமைனி கேம்ப்பெல், ஷபிகா கஜானாபி, சின்னெல்லே ஹென்றி, சாய்டன் நேஷன், அஃபி பிளெட்சர், ஜெய்டா ஜேம்ஸ், ஷாமிலியா கானல், ரஷாதா வில்லியம்ஸ் (விக்கெட் கீப்பர்), ஷகேரா செல்மன்.


போட்டியின் நேரடி ஒளிபரப்பு:


இந்திய பெண்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கு இடையிலான இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.