தற்போது ஆசிய கோப்பையில் ஆடி வரும் இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் தென்னாப்பிரிக்க அணியுடன் டி20 போட்டியில் ஆட உள்ளது. இதற்கு பிறகு, இந்திய அணியுடன் ஒருநாள் போட்டியில் ஆட உள்ளது. இந்திய அணிக்கு எதிராக 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையில் நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.






தெம்பா பவுமா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை தற்போது அந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. தெம்பா பவுமா தலைமையிலான அணியில் குயின்டின் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிக்ஸ் கிளாசென், மலான், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, நோர்ட்ஜே, வெய்ன் பர்னெல், பெலுக்வாவே, கசிகோ ரபாடா, ஷாம்சி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


மேலும் படிக்க :IND vs SL Asia Cup: கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்தியா! இன்றைய போட்டியில் தோற்றால் என்னவாகும்..?


இந்த தொடருக்கு மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலககோப்பை டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியையும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உலககோப்பைத் தொடரில் காயம் காரணமாக அந்த அணியின் முக்கிய வீரர் வான்டர் டுசென் இடம்பெறவில்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.






உலககோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் தெம்பா பவுமா தலைமையில் குயின்டின் டி காக், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், கிளாசென், மகாராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, நோர்ட்ஜே, பர்னெல், டிவெய்ன் ப்ரெடோரியஸ், ரபாடா, ரோசோவ், ஷாம்சி, ஸ்டப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணிக்கு அந்த நாட்டு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். உலககோப்பைத் தொடரில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அறிமுக வீரராக களமிறங்குகிறார். 


மேலும் படிக்க : Asia Cup 2022, IND vs SL: ஆசிய கோப்பை: இலங்கை போட்டியில் களமிறங்குகிறாரா தினேஷ் கார்த்திக்? அதிரடி மாற்றங்கள்..


மேலும் படிக்க : IND vs SL: இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் குறியீட்டை பயன்படுத்துவோம்.. இலங்கை அணியின் பயிற்சியாளர்