ஆசிய கோப்பை போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் லீக் போட்டிகளில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் வெளியேறிய நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் முன்னேறின.




இந்த நிலையில், இன்றைய சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியுடன் துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில்  இந்திய அணி பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூப்பர் 4 சுற்று போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.






இதில், முதல் இரு இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்ததால் அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று துபாய் மைதானத்தில் இலங்கை அணியுடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


மேலும், ஒரே புள்ளிகளை அணிகள் பெற்றால் ரன் ரேட் அடிப்படையிலே இறுதிப்போட்டிக்கு அணிகள் தேர்வாகும். இதனால், இந்திய அணி நல்ல ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவு கலைந்துவிடும் என்பதே உண்மை.  அதேபோல, கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற உற்சாகத்தில் இலங்கை அணி உள்ளது.




இதனால், இலங்கை அணியினர் இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்களது ரன் ரேட்டை உயர்த்தவும், இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்தவும் முயற்சிக்கும். இந்திய அணி கடந்த போட்டியில் செய்த தவறுகளை இன்றைய போட்டியில் செய்யாமல் இருந்தாலே இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும்.


போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தை பொறுத்தவரை இந்த மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் டி20 போட்டிகளில் டாஸ் வெல்லும் அணிகள் பந்துவீச்சைத் தேர்வு செய்து அதிக முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் மோசமான பீல்டிங், பந்துவீச்சால் வெற்றி பறிபோனது.


மேலும் படிக்க : Asia Cup 2022, IND vs SL: ஆசிய கோப்பை: இலங்கை போட்டியில் களமிறங்குகிறாரா தினேஷ் கார்த்திக்? அதிரடி மாற்றங்கள்..


மேலும் படிக்க : IND vs SL: இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் குறியீட்டை பயன்படுத்துவோம்.. இலங்கை அணியின் பயிற்சியாளர்