RCB-W vs UPW-W Live: அதிரடியாக ஆடிய அலீசா ஹீலி.. 4வது தோல்வியைத் தழுவிய ஆர்.சி.பி..!

RCB-W vs UPW-W, WPL 2023 LIVE Score: ஆர்.சி.பி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் போட்டி குறித்த லைவ் அப்டேட்களுக்கு ஏபிபி நாடு தளத்தில் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 10 Mar 2023 09:32 PM
4 ஓவர்களில் 38 ரன்கள்..! வெற்றியை நோக்கி உபி வாரியர்ஸ்...!

139 ரன்கள் இலக்குடன் களமிறங்கியுள்ள உத்தரபிரதேச அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்துள்ளது. 

சரவெடியாய் ஆரம்பித்து.. புஷ்வானாமாய் போன பெங்களூர்..! உத்தரபிரதேசத்திற்கு 139 ரன்கள் டார்கெட்..!

உத்தரபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனால், உத்தரபிரதேச அணிக்கு 139 ரன்கள் இலக்காக அமைந்துள்ளது. 

ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த உ.பி..!

போட்டியின் கடைசி 4 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தினை மொத்தமாக தன்வசப்படுத்தியுள்ளது உ.பி வாரியர்ஸ்

தேவையில்லாத ரன் அவுட்..!

ரிச்சா கோஷ் 18 ஓவரின் முதல் பந்தில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகியுள்ளார். 

மீண்டும் விக்கெட்..!

17வது ஓவரில் பெரி ஆட்டமிழந்த நிலையில், பெர்ன்ஸும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். 

பெரி விக்கெட்..!

சிறப்பாக ஆடிவந்த பெரி 52 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார். 

16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு

16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 124  ரன்கள் சேர்த்துள்ளது.  பெரி 52 ரன்களும் பர்ன்ஸ் இரண்டு ரன்களும் சேர்த்துள்ளனர்

15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு..!

15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 117  ரன்கள் சேர்த்துள்ளது.  பெரி 51 ரன்களும் பர்ன்ஸ் ஒரு ரன்னும் சேர்த்துள்ளனர். 

ஸ்ரேயங்கா விக்கெட்..!

களமிறங்கியது முதல் அடித்து ஆடிவந்த ஸ்ரேயங்கா 14 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில், எக்ளஸ்டோன் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். 14.4 ஓவரில் ஆர்.சி.பி. 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்து உள்ளது. 

14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு

14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு  114 ரன்கள் சேர்த்துள்ளது.  பெரி 50 ரன்களும் ஸ்ரேயங்கா பட்டேல்  14 ரன்களும் சேர்த்துள்ளனர். 

பெரி அரைசதம்..!

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் 35 பந்தில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு 50 ரன்கள் சேர்த்துள்ளார். 

13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி..!

13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்துள்ளது.  பெரி 49 ரன்களும் ஸ்ரேயங்கா பட்டேல் 5  ரன்களும் சேர்த்துள்ளனர். 

ரன் அவுட்..!

12 ஓவரின் முதல் பந்தில் ஹேதர் நைட் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகியுள்ளார்.

12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி

12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 97  ரன்கள் சேர்த்துள்ளது.  பெரி 48 ரன்களும் ஹேதர் நைட் ஒரு ரன்னும் சேர்த்துள்ளனர். 

கனிகா அவுட்..!

பெரிக்கு சப்போர்ட் செய்து வந்த கனிகா 11 ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார். தற்போது பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்துள்ளது. 

10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி..!

10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது.  பெரி 36 ரன்களும் கனிகா 5 ரன்களும் சேர்த்துள்ளனர். 

9 ஓவர்கள் முடிவில்..!

9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்துள்ளது.  பெரி 34 ரன்களும் கனிகா 3 ரன்களும் சேர்த்துள்ளனர். 

விக்கெட்..!

சிறப்பாக ஆடிவந்த டிவைன் 36 ரன்களில் எக்ளஸ்டோன் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார். 

8 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி

8 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்துள்ளது.  டிவைன் 36 ரன்களும் பெரி 32 ரன்களும் சேர்த்துள்ளனர். 

அடுத்தடுத்து பவுண்டரி..!

8வது ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி பெரி அதகளப்படுத்தியுள்ளார். 

பவர்ப்ளே முடிவில்..!

பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது. 

பவுண்டரிகளை பறக்கவிடும் டிவைன்- பெரி..!

போட்டியின் துவக்கம் முதல் டிவைன் மற்றும் பெரி பவுண்டரிகளை பறக்கவிட்டு வருகின்றனர். 

சிறப்பாக பந்து வீசும் உ.பி..!

இந்த போட்டியில் பவர்ப்ளேயில் உ.பி. அணி சிறப்பாக பந்து வீசி வருகிறது. 

5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு..!

5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41  ரன்கள் சேர்த்துள்ளது.  டிவைன் 26 ரன்களும் பெரி 10 ரன்களும் சேர்த்துள்ளனர். 

4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு..!

4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு  30 ரன்கள் சேர்த்துள்ளது.  டிவைன்25  ரன்களும் பெரி 1 ரன்னும் சேர்த்துள்ளனர்.  இந்த ஓவரில் மந்தனா அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மந்தனா அவுட்..!

மந்தமாக ஆடி வாந்த மந்தனா 4 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார். 

3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு..!

3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்துள்ளது. மந்தனா 4 ரன்களும் டிவைன் 25 ரன்களும் சேர்த்துள்ளனர். 

முதல் ஓவர் முடிவில்..!

முதல் ஓவர் முடிவில் பெங்களூரு அணி 13 ரன்கள் குவித்துள்ளது. 

சிக்ஸர்..!

போட்டியின் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டிவைன் சிக்ஸர் பறக்கவிட்டுள்ளார்.  

UP வாரியர்ஸ் அணி..!

அலிசா ஹீலி, ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ், தேவிகா வைத்யா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:  ஸ்மிருதி மந்தனா , சோஃபி டிவைன், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, சஹானா பவார், கோமல் சன்சாத், ரேணுகா தாக்கூர் சிங்

தொடங்கியது போட்டி..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் உத்தரபிரதேச வரியர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி தொடங்கியுள்ளது. 

முதல் வெற்றியை பெறுமா ஆர்.சி.பி..!

தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ள ஆர்.சி.பி அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இன்று களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாஸ் வென்ற பெங்களூரு..!

டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

Background

மகளிர் பிரீமியர் லீக் போட்டி இந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் போட்டி போல் மிகவும் பரபரப்பான சுவாரஸ்யமான ஆட்டங்களால் மகளிர் பிரீமியர் லீக் தொடரரும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறத் துவங்கியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் களமிறங்கியுள்ளது.


மகளிர் ஐ.பி.எல்.:


இதில், உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியை தவிர மற்ற நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் லீக் சுற்றில் தலா எட்டு போட்டிகள் உள்ளது. இதில் அதிக வெற்றிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், அடுத்த இரண்டு இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டரிலும் மோதும். 


இதில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி மூன்றிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இது ஆர்.சி.பி. ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  ஆண்கள் ஐ.பி.எல் போட்டியில் 15 சீசன்கள் விளையாடியுள்ள ஆர்.சி.பி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஆனால் அந்த அணியின் மகளிர் பிரிவு இந்த சீசனில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. 

 

இந்த சீசனில் முதலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில், 2 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்த டெல்லி அணி, பெங்களூரு அணியை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 163 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.  அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய பெங்களூரு அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது. 

 

வாழ்வா? சாவா?

 

அதன் பின்னர், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியுடன் மோதிய ஆர்.சி.பி அணி வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது. இந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக்கில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவிய அணி என்ற மிகவும் மோசமான சாதனையை முதல் சீசனிலேயே பெங்களூரு அணி படைத்துள்ளது. இன்று உத்தர பிரதேச அணிக்கு எதிராக நடக்கும் போட்டி ஆர்.சி.பி அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது. இந்த போட்டியில் ஆர்.சி.பி. தோற்றால் இந்த சீசனில் இருந்து வெளியேறும் முதல் அணியாக மாற 90% வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு  போர்பவுனி மைதானத்தில் நடக்கும் போட்டியின் முடிவு ஆர்.சி.பி அணியின் முடிவா என பொருத்து இருந்தது தான்  பார்க்க வேண்டும்.  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.