RCB-W vs GG-W Live: இறுதிவரை விறுவிறு..! ஹாட்ரிக் தோல்வியை தழுவிய பெங்களூர்..!
RCB-W vs GG-W, WPL 2023 LIVE Score:மகளிர் பிரிமியர் லீக்கில் இன்று ஆர்.சி.பி அணிக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேடுகளை ஏபிபி நாடு பக்கத்தில் காண இணைந்து இருங்கள்.
குஜராத் அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வி அடைந்தது.
இமாலயல இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 18 ரன்களில் அவுட்டாகினார்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது.
19.5 ஓவரில் ரன் எடுக்க ஓடும் போது, ராணா ரன் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
19வது ஓவரின் முதல் பந்தில் 8 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த சதர்லெண்ட் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது.
16வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று பவுண்டரிகளை ஹர்லின் பறக்கவிட்டுள்ளார்.
சிறப்பாக விளையாடி வந்த ஹர்லின் 35 பந்தில் 53 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவர் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார்.
16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
15.3வது ஓவரில் குஜராத அணியின் ஹேமலதா 7 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். தற்போது குஜராத் அணி 157- 4 என்ற நிலையில் உள்ளது.
நிதானமாக விளையாடி வந்த கார்ட்னர் 15 பந்தில் 19 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
12 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
விக்கெட்டுகள் விழுந்தாலும் குஜராத அணி சிறப்பாக விளையாடி 11 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்துள்ளது.
விக்கெட்டுகள் விழுந்தாலும் குஜராத அணி சிறப்பாக விளையாடி 11 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 96- 2 என வலுவான நிலையில் உள்ளது.
9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 8வது ஓவரின் 2வது பந்து நோபாலாக வீசப்பட்டுள்ளது.
8 ஓவர்கள் முடிவில் 82-2 என்ற நிலையில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது.
அதிரடியாக ஆடிவந்த டங்க்லி 27 பந்தில் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகியுள்ளார். அவர் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
18 பந்தில் அரைசதம் கடந்த டங்க்லி தொடர்ந்து வானவேடிக்கை காட்டி வருகிறார்.
7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 71-1 என்ற நிலையில் உள்ளது.
பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் குவித்துள்ளது.
18 பந்தில் 9 பவுண்டரி 2 சிக்ஸர் பறக்கவிட்டு மகளிர் பிரீமியர் லீக்கில் அதிவேக அரைசதம் விளாசியுள்ளார்.
ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸரை டங்க்லி பறக்கவிட்டுள்ளார்.
விக்கெட் விழுந்த பின்னரும் தனது அதிரடியான ஆட்டத்தினை டங்க்லி மாற்றிக் கொள்ளவில்லை. அவர் நான்காவது ஓவரில் மட்டும், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்க விட்டுள்ளார்.
நான்கு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணியின் முதல் சிக்ஸரை நான்காவது ஓவரின் நான்காவது பந்தில் டங்க்லி பறக்கவிட்டுள்ளார்.
மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் பறக்கவிட்ட மேக்னா இந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்துள்ளார். குஜராத் அணி தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்றாவது ஓவரில், முதல் இரண்டு பந்துகளில் மேக்னா பவுண்டரிகளை பறக்கவிட்டு அதகளப்படுத்தி வருகிறார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணி முதல் ரன் பவுண்டரியாக இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் டங்க்லியால் அடிக்கப்பட்டது.
போட்டியின் முதல் ஓவர் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. ஆர்.சி.பி அணியின் ஷூட் சிறப்பாக பந்து வீசி மெய்டன் ஓவராக மாற்றியுள்ளார்.
குஜராத் அணியின் சார்பில் மேக்னா மற்றும் டங்க்லி களமிறங்கியுள்ளனர்.
இரு அணிகளும் இந்த தொடரில் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இன்னும் வெற்றியைப் பதிவு செய்யவில்லை. இந்த போட்டியில் யார் முதல் வெற்றியைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் : ஸ்மிருதி மந்தனா , சோஃபி டிவைன், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ், பூனம் கெம்னார், கனிகா அஹுஜா, ஸ்ரேயங்கா பாட்டீல், மேகன் ஷட், ரேணுகா தாக்கூர் சிங், ப்ரீத்தி போஸ்
குஜராத் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): சப்பினேனி மேகனா, சோபியா டன்க்லி, ஹர்லீன் தியோல், அனாபெல் சதர்லேண்ட், சுஷ்மா வர்மா, ஆஷ்லே கார்ட்னர், தயாளன் ஹேமலதா, சினே ராணா, கிம் கார்த், மான்சி ஜோஷி, தனுஜா கன்வார்
டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
RCB-W vs GG-W Live: முதலாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியானது 5 அணிகளுடன் இந்தாண்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது இந்தியன் பிரீமியர் லீக்கை போன்று, மகளிர் பிரீமியர் லீக் தொடரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 போட்டிகள் என கணக்கிடப்பட்டு மும்பையில் உள்ள இரண்டு மைதானங்களில் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
பங்கேற்றுள்ள அணிகள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), டெல்லி கேபிடல்ஸ் (டிசி), குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜிஜி) மற்றும் யுபி வாரியர்ஸ் (யுபிடபிள்யூ) ஆகிய ஐந்து அணிகள் இந்த முதல் சீசனில் பங்கேற்கின்றன.
மேலும், இன்று நடக்கவுள்ள போட்டியில், பெஙகளூர் அணியும் குஜராத் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி, மும்பை போர்பர்ணி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -