Tamil Nadu Govt Public Holidays 2025: 2025ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொதுவிடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் என 5 நாட்கள் அரசு பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை .
பிப்ரவரி மாதம் தை பூசம் 11 ஆம் தேதி வருகிறது. அதற்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் தெலுங்கு வருட பிறப்புக்கும், ரம்ஜானுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒன்றாம் தேதியும், மஹாவீர் ஜெயந்தி, தமிழ் வருட பிறப்பு, புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் ஒன்றாம் தேதி மட்டும் உழைப்பாளிகள் தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் பக்ரித்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் மொகரம் பண்டிகை ஒருநாளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் மிலாடி நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் ஆயுதபூஜை, விஜய தசமி, காந்தி ஜெயந்தி, தீபாவளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் கிரிஸ்துமஸ்க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.