Bang Vs Afg LIVE Score: உலகக் கோப்பை கிரிக்கெட்... வங்கதேச அணி வெற்றி!

ODI World Cup 2023 bang vs afg LIVE Score: உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 07 Oct 2023 04:38 PM
வங்கதேச அணி அபரா வெற்றி பெற்றது.

6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது.

33 ஓவர்கள் முடிவில் 141 ரன்களுடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

வெற்றி முனைப்புடன் விளையாடி வரும் வங்கதேச அணி தற்போது 33 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்துள்ளது.

33 ஓவர்கள் முடிவில் 141 ரன்களுடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

வெற்றி முனைப்புடன் விளையாடி வரும் வங்கதேச அணி தற்போது 33 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்டமிழந்தார் மெஹிதி ஹசன் மிராஸ்!

அதிரடியாக விளையாடி அரைசதம் (57) அடித்த மெஹிதி ஹசன் மிராஸ் ஆட்டமிழந்தார்.

வெற்றி முனைப்பில் வங்கதேசம் அணி!

26 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 109 ரன்கள் எடுத்து வெற்றி முனைப்புடன் விளையாடிவருகிறது. மெஹிதி ஹசன் மிராஸ் 52 ரன்களும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 32 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.


 

 
மெஹிதி ஹசன் மிராஸ் அதிரடி!

அதிரடியாக விளையாடி வரும் மெஹிதி ஹசன் மிராஸ் 61 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடுத்துள்ளார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வரும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 29 ரன்கள் எடுத்துள்ளார்.

100 ரன்களை கடந்தது வங்கதேச அணி!

23 ஓவர்கள் முடிவின் படி வங்கதேச அணி 103 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. அந்த அணியின். மெஹிதி ஹசன் மிராஸ் அரைசதம் அடித்து விளையாடிவருகிறார்.

அதிரடியாக விளையாடும் வங்கதேச அணி!

வங்கதேச அணி அதிரடியாக விளையாடி வருகிறது. அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.

அரைசதம் அடித்த மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஜோடி!
அரைசதம் அடித்த மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஜோடி. அதன்படி, 56 பந்துகளில் அந்த ஜோடி 51 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.
2 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி!

12 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெடுகள் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணி 156 ரன்களுக்கு ஆல்-அவுட்

வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அண், 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 1546 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேசம் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹாசன் ஆகியோர் தல 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஒரு விக்கெட் மட்டுமே மிச்சம்..

9வது விக்கெட்டாக முஜீப் உர் ரஹ்மான் வெறும் ஒரு ரன்னில் நடையை கட்டினார்

8வது விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான்

அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்

ரஷித் கான் அவுட்

ஆப்கானிஸ்தானை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான் 9 ரன்களில் நடையை கட்டினார்

ஈரானை ஆல்-அவுட் செய்தது இந்தியா

இறுதிப்போட்டியில் ஈரானை ஆல்-அவுட் செய்த இந்திய அணி, 17-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

தடுமாறும் ஆப்கானிஸ்தான்..

32 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை சேர்த்துள்ளது 

ஆடவர் கபடி இறுதிப்போட்டி

ஆடவர் கபடி இறுதிப் போட்டியில் இந்திய - ஈரான் அணிகள் கடுமையாக மோத் வருகின்றன. இரு அணிகளும் மாற் மாறி புள்ளிகளை எடுத்து வருவதால் வெற்றி யாருக்கு என்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது

6வது விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் கடைசி நம்பிக்கையாக இருந்த மொகமது நபி 6 ரன்களில் ஆட்டமிழந்தார் 

5வது விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான்

வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நஜிபுல்லா ஜாத்ரன். இந்த விக்கெட் உடன் சேர்த்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன்.

முக்கிய விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான்

நிலைத்து நின்று ஆடி வந்த தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 47 ரன்களை சேர்த்து இருந்தபோது, முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்தார். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 27 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை சேர்த்து தடுமாறி வருகிறது. 

அடுத்தடுத்து விக்கெட்..!

ஹஸ்மதுல்லா ஷாஹிதி 18 ரன்கள் சேர்த்து இருந்த போது, மெஹிதி ஹாசன் பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்

100 ரன்களை கடந்த வங்கதேசம்..

23 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்த்துள்ளது.

முடிந்தது 20 ஓவர்கள்...

20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை சேர்த்துள்ளது.

இரண்டாவது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்

ரஹ்மத் ஷா 18 ரன்கள் சேர்த்து இருந்த போது, ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்

50 ரன்களை எட்டிய ஆப்கானிஸ்தான்

10 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை சேர்த்துள்ளது.

முதல் விக்கெட்டை இழந்தை ஆப்கானிஸ்தான்

பொறுப்பாக விளையாடி வந்த இப்ராஹிம் ஜார்தன், ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் 25 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்களை சேர்த்தார்.

ஆப்கானிஸ்தான் நிதானமான ஆட்டம்

பேட்டிங்கை தொடங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக விளையாடி வருகிறது. 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்களை சேர்த்துள்ளது.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 9 முறை வங்கதேச அணியும், 6 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

வங்கதேச அணி விவரம்

தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிபுல் ரஹ்மத், ஷோரிபுல் இஸ்லாம்

ஆப்கானிஸ்தான் அணி விவரம்

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-எச். ஃபசல்ஹக் பாரூக்கி

ஆபானிஸ்தான் பேட்டிங்

உலகக்கோப்பையின் மூன்றாவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Background

ODI World Cup 2023 bang vs afg LIVE Score: உலகக் கோப்பையில் தர்மாசாலாவில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.


வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதல்:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி உற்சாகமாக தொடங்கியது.  நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில் இன்று உலகக் கோப்பையில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, காலை 10.30 மணியளவில் தர்மசாலாவில் நடைபெறும் முதல் போட்டியில், ஆசியாவை சேர்ந்த வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு, வங்கதேசத்தை பழிதீர்க்க ஆப்கானிஸ்தான் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.


பலம் & பலவீனங்கள்:


ஆப்கானிஸ்தான் அணி வழக்கம்போல் தனது வெற்றிக்கு சுழற்பந்து வீச்சையே பெரும்பாலும் நம்பியுள்ளது. அதேநேரம், அணியின் முன்கள வீரர்களின் அதிரடியான ஆட்டமும், நல்ல ஃபார்மும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தால், அணியை மீட்பதற்கான சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அணியின் பின்னடைவாக கருதப்படுகிறது. வங்கதேச அணியை பொருத்தவரையில் தொடக்க வீரர் தமிம் இக்பால் விளையாடாதது முதல் பின்னடைவாகும். இருப்பினும் கேப்டன் ஷகிப் அல் ஹசன், துணை கேப்டன் லிட்டன் தாஸ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன், ஹிரிடோய் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் முகமதுல்லா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பது கூடுதல் வலுவாக உள்ளது. வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவிச்சு என இரண்டு யூனிட்டும் சரியான கலவையில் வங்கதேசத்திற்கு அமைந்துள்ளது.


நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 9 முறை வங்கதேச அணியும், 6 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.


மைதானம் எப்படி?


போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானம் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. மீடியம் பேசர்கள் விக்கெட் வேட்டை நடத்த ஏதுவாக இருக்கும். இதுவரை அங்கு நான்கு சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. வானிலையை பொருத்தவரையில் தர்மசாலாவில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 30° C ஆக இருக்கும், ஆனால் மாலையில் 22° C ஆகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி பாதிக்கப்பட வாய்ப்பில்லை.


உத்தேச அணிகள்:


வங்கதேசம்:


மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன்/நாசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்


ஆப்கானிஸ்தான்:


ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, நஜிபுல்லா சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி


வெற்றி வாய்ப்பு: வங்கதேச அணி வெற்றி பெறவே கூடுதல் வாய்ப்பு

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.