NZ vs SL LIVE Score: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பினை பிரகாசப்படுத்திய நியூசிலாந்து

NZ vs SL LIVE Score, World Cup 2023: நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையிலான உலகக் கோப்பை போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் ஏபிபி பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 09 Nov 2023 08:04 PM
NZ vs SL LIVE Score: நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியதா?

நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பினை சற்று பிரகாசமாக்கியுள்ளது. நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதா என்பதை பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவைப் பொறுத்துதான் கூறமுடியும். 

NZ vs SL LIVE Score: நியூசிலாந்து வெற்றி..!

நியூசிலாந்து அணி 23.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. 

NZ vs SL LIVE Score: 5வது விக்கெட்டினை கைப்பற்றிய இலங்கை..!

இலங்கை அணி நியூசிலாந்து அணியின் 5வது விக்கெட்டினை கைப்பற்றியுள்ளது. சிறப்பாக விளையாடி வந்த மிட்ஷெல் தனது விக்கெட்டினை அசலங்கா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 43 ரன்கள் சேர்த்திருந்தார். 

NZ vs SL LIVE Score: 150 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 4வது விக்கெட்டினை இழந்தது நியூசிலாந்து..!

21வது ஓவரில் நியூசிலாந்து அணி தனது 4வது விக்கெட்டினை இழந்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 20 ஓவர்கள் முடிந்தது..!

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 144 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது..!

19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டினை இழந்து 132 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: மூன்றாவது விக்கெட்டினை இழந்தது நியூசி..

18.2 வது ஓவரில் நியூசிலாந்து அணி தனது மூன்றாவது விக்கெட்டினை இழந்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

NZ vs SL LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது..!

16 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 108 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 100 ரன்களை எட்டியது நியூசிலாந்து..!

15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் தேவை. 

NZ vs SL LIVE Score: 90 ரன்களைக் கடந்தது நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: ரச்சின் ரவீந்திரா அவுட்..!

நியூசிலாந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 42 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

NZ vs SL LIVE Score: 13 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணி 13 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. நியூசிலாந்து வெற்றி பெற 86 ரன்கள் தேவை. 

NZ vs SL LIVE Score: டெவின் கான்வே அவுட்..!

அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவின் கான்வே தனது விக்கெட்டினை 45 ரன்கள் சேர்த்த நிலையில், துஷ்மந்தா சமீரா பந்தில் இழந்து வெளியேறினார். 

NZ vs SL LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது..!

12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 80 ரன்களை எட்டிய நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணி 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது..!

முதல் 10 ஓவர் பவர்ப்ளேவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 9 ஓவர்களில் நியூசிலாந்து..!

9 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது..!

7 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 50 ரன்களை எட்டியது நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணி 6.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 40 ரன்களைக் கடந்த நியூசிலாந்து..!

6 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 5 ஓவர்கள் முடிவில்..

5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 3 ஓவர்கள் முடிந்தது..!

3 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 12 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து..

நியூசிலாந்து அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இப்பின்றி 12 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: முதல் ஓவரில் நிதான தொடக்கம்..!

நியூசிலாந்து அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: களமிறங்கியது நியூசிலாந்து..!

172 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. 

NZ vs SL LIVE Score: இலங்கை ஆல்-அவுட்..!

46.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 170 ரன்களை எட்டிய இலங்கை

46 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 45 ஓவர்கள் முடிந்தது..!

45 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டினை இழந்து 167 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 44 ஓவர்கள் முடிந்தது..

44 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 169 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 43 ஓவர்கள் முடிந்தது..

43 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 42 ஓவர்கள் முடிந்தது..!

42 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 160 ரன்களை எட்டியது இலங்கை

இலங்கை அணி 41.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எட்டியுள்ளது. 

NZ vs SL LIVE Score: 41 ஓவர்கள் முடிந்தது..

41 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 40 ஓவர்கள் முடிந்தது..

40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 150 ரன்களை எட்டிய இலங்கை

9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் இலங்கை அணி 38 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 35 ஓவர்கள் காலி..!

35 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை எட்டியுள்ளது. 

NZ vs SL LIVE Score: 34 ஓவர்கள் முடிந்த நிலையில்..

9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் இலங்கை அணி 34 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 9வது விக்கெட்டினை இழந்த இலங்கை..!

இலங்கை அணி தனது 9வது விக்கெட்டினை இழந்துள்ளது. போட்டியின் 33வது ஓவரின் முதல் பந்தில் துஷ்மந்தா சமீரா தனது விக்கெட்டினை இழந்தார். 

NZ vs SL LIVE Score: 32 ஓவர்களில் இலங்கை..

832 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 30 ஓவர்களில் இலங்கை..

30 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டினை இழந்து 125 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: நிதான ஆட்டத்தில் இலங்கை

27 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே சேர்த்து மிகவும் நெருக்கடியான நிலையில் விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 26 ஓவர்கள் முடிந்தது..!

26 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: பாதி ஆட்டம் முடிந்தது... 25 ஓவர்கள் காலி..

25 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

NZ vs SL LIVE Score: 8வது விக்கெட்டும் காலி..!

போட்டியின் 23.3வது ஓவரில் இலங்கை அணியின் சமீக கருணாரத்னே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இலங்கை அணி தற்போது 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

NZ vs SL LIVE Score: ஒரு ஒரு ரன்களாக சேர்க்கும் இலங்கை

23 வது ஓவரில் இலங்கை அணி மேற்கொண்டு ஒரு ரன் மட்டும் எடுத்ததால் அந்த அணியின் ஸ்கோர் 113ஆக உள்ளது. இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

NZ vs SL LIVE Score: 22 ஓவர்கள் முடிந்தது..

22 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டினை இழந்து 112 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இந்த ஓவரில் ஒரு ரன் கூட அடிக்கப்படவில்லை. 

NZ vs SL LIVE Score: 21 ஓவர்கள் முடிவில் இலங்கை

21 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score:ன் 20 ஓவர்கள் முடிந்தது..

20 ஓவர்கள் முடிந்த நிலையில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது..!

19 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டினை இழந்து 105 ரன்கள் சேர்த்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

NZ vs SL LIVE Score: 7வது விக்கெட்டும் காலி..!

ஏற்கனவே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் இலங்கை அணி 19வது ஓவரில் தனது 7 வது விக்கெட்டினையும் இழந்து பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 

NZ vs SL LIVE Score: 100 ரன்களைக் கடந்த இலங்கை.. மந்தமாக ரன் சேர்ப்பு

18 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்து மிகவும் மந்தமாக ரன்கள் சேர்த்து வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 6 விக்கெட்டினை இழந்தது இலங்கை...

5 விக்கெட்டுகளை இழந்து ஏற்கனவே தடுமாறி  வரும் இலங்கை அணி 6 விக்கெட்டினை இழந்து மேலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

NZ vs SL LIVE Score: 15 ஓவர்கள் முடிவில் ஆட்டம்

முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 95 ரன்கள் குவித்து  விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 90 ரன்களை எட்டிய இலங்கை

5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இலங்கை அணி 14 ஓவர்கள் முடிவில் 91 ரன்கள் சேர்த்து நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 13 ஓவர்கள் முடிவில் நிதான ஆட்டத்தில் இலங்கை

5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இலங்கை அணி 13 ஓவர்கள் முடிவில் 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 12 ஓவர்களில் இலங்கை

12 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டினை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது..

11 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டினை இழந்து 78 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: குஷால் பெராராவும் அவுட்..!

இலங்கை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிரடியாக விளையாடி வந்த குஷால் பெராரா தனது விக்கெட்டினை 10வது ஓவரில் ஃபெர்குஷன் பந்தில் இழந்து வெளியேறினார். 

NZ vs SL LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது..

9 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score:4 விக்கெட்டினை இழந்தது இலங்கை

ஒருபுறம் குஷால் பெராரா அதிரடியாக விளையாடி வந்தாலும், மறுபுறம் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வருவதும் போவதுமாக உள்ளனர். 

NZ vs SL LIVE Score: 70 ரன்களை எட்டியது இலங்கை..

8 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: அதிவேக அரைசதம்..!

22 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் விளாசி அதிவேகமாக அரைசதம் விளாசியுள்ளார் குஷால் பெராரா

NZ vs SL LIVE Score: அரைசதத்தினை நெருங்கும் குஷால்

21 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றார் தொடக்க வீரர் குஷால் பெராரா

NZ vs SL LIVE Score: 50 ரன்களைக் கடந்தது இலங்கை..!

7 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

NZ vs SL LIVE Score: சௌதியை தண்டித்த குஷால் பெராரா

போட்டியின் 6வது ஓவரை வீசிய டிம் சௌதியின் ஓவரில் குஷால் பெராரா 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார்.  

NZ vs SL LIVE Score: இரண்டு விக்கெட்டுகளை கொத்தாக தூக்கிய போல்ட்..

போட்டியின் 5வது ஓவரின் முதல் பந்து மற்றும் 4வது பந்தில் இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான குஷால் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்ரமா ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். 

NZ vs SL LIVE Score: 5 ஓவர்தான் முடிந்தது.. அதற்குள் மூன்று விக்கெட்டுகள் காலி

5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டினை இழந்து 34 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: மூன்றாவது விக்கெட்டினை இழந்தது இலங்கை

5வது ஓவரின் 4வது பந்தில் சதீரா சமரவிக்ரமா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

NZ vs SL LIVE Score: இரண்டாவது விக்கெட்டினை இழந்தது இலங்கை

போட்டியின் 5வது ஓவரில் இலங்கை அணி தனது 2வது விக்கெட்டினை இழந்துள்ளது. கேப்டன் குஷால் மெண்டிஸ் தனது விக்கெட்டினை இழந்தார். 

NZ vs SL LIVE Score: பவுண்டரி மழை.!

போட்டியின் 4வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் குஷால் பெராரா இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். 

NZ vs SL LIVE Score: முதல் சிக்ஸரை விளாசிய குஷால் பெராரா

போட்டியின் நான்வது ஓவரின் 5வது பந்தில் குஷால் பெராரா போட்டியின் முதல் சிக்ஸரை விளாசினார். 

NZ vs SL LIVE Score: 3 ஓவர்கள் காலி..!

3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 15 ரன்கள் சேர்த்துள்ளது. 

NZ vs SL LIVE Score: பதும் நிஷ்கண்ணா அவுட்..!

இலங்கை அணியின் தொடக்க வீரரான பதும் நிஷ்கண்ணா தனது விக்கெட்டினை போட்டியின் இரண்டாவது ஓவரில் டிம் சௌதி பந்தில் இழந்து வெளியேறினார். 

NZ vs SL LIVE Score: முதல் ஓவரில் மிரட்டும் ட்ரெண்ட் போல்ட்

போட்டியின் முதல் ஓவரை வீசிய போல்ட் அந்த ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். 

NZ vs SL LIVE Score: களமிறங்கியது இலங்கை..!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி களமிறங்கியுள்ளது. இலங்கை அணியின் இன்னிங்ஸை பதும் நிஷ்கண்ணா மற்றும் குஷால் பெராரா தொடங்கியுள்ளனர். 

NZ vs SL LIVE Score: இலங்கை அணியின் ப்ளேயிங் 11..!

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன, மஹேஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க

NZ vs SL LIVE Score: நியூசிலாந்து அணியின் ப்ளேயிங் 11..!

டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், லாக்கி பெர்குசன்

NZ vs SL LIVE Score: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச முடிவு.. அதிரடியாக ஆடுமா இலங்கை அணி..!

இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

Background

பெங்களூருவில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள்  மோதுகின்றன.


உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 40 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பௌ உறுதி செய்துள்ளன.   மீதமுள்ள ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, 9வது இடத்தில் உள்ள இலங்கை உடன் மோத உள்ளது.


நியூசிலாந்து - இலங்கை மோதல்:
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.  கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வியுற்றுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். இதனால், அந்த அணிக்கு இன்றைய போட்டி வாழ்வா? சாவா? எனும் சூழலில் அமைந்துள்ளது.


பலம் & பலவீனங்கள்:
தொடர்ந்து நான்கு வெற்றிகளை பதிவு செய்து வந்த நியூசிலாந்து அணி, திடீரென பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டுபோயுள்ளது. ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே மற்றும் வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இருப்பினும் கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் பந்துவீச்சு என்பது மோசமாக உள்ளது. கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழலில் நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் களமிறங்கும் சூழலில், அவர்களின் செயல்பாடு களத்தில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங் சரியாக அமைந்தால் பந்துவீச்சில் சொதப்புகின்றனர். பந்துவீச்சு சரியாக அமைந்தால் பேட்டிங்கில் சோபிக்க தவறுகின்றனர்.



நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி 51 முறையும், இலங்கை அணி 41 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிய, 8 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.


மைதானம் எப்படி?
இந்தியாவில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான மைதானங்களில் பெங்களூரு சின்னசாமி மைதானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறிய பவுண்டரிகள் மற்றும் அதிவேகமான அவுட்-பீல்ட் காரணமாக இங்கு பேட்டிங் செய்ய வீரர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், போட்டி செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் களத்தில் சிறிது ஆதரவு கிடைக்கும்.


உத்தேச அணி விவரங்கள்:
நியூசிலாந்து:


டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் 


இலங்கை:


பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க 


வெற்றி வாய்ப்பு: நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.