SA Vs IND T20 LIVE: 5 விக்கெட்டுகளை அள்ளிய குல்தீப் யாதவ்; 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
SA Vs IND LIVE Score Updates: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
இந்த வெற்றி மூலம் இந்த தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
17 பந்து வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை தனது பிறந்தநாள் பரிசாக அள்ளினார் குல்தீப் யாதவ்.
தென்னாப்பிரிக்கா அணி இறுதியில் 13.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணி 13.2 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி தனது 8வது விக்கெட்டினை இழந்துள்ளது. பர்கர் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்தில் ஒரு ரன் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
தென்னாப்பிரிக்கா அணி 13 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் கேசவ் மஹராஜ் போட்டியின் 12வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
தென்னாப்பிரிக்கா அணியின் ஆண்டிலே பிலகுவாயோ தனது விக்கெட்டினை ஜடேஜா வீசிய 11வது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் ஃபெரேரா தனது விக்கெட்டினை 11 பந்தில் 12 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
9 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடி வந்த மார்க்ரம் தனது விக்கெட்டினை 7வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 14 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.
தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்றிச் க்ளாசன் தனது விக்கெட்டினை அர்ஷ்தீப் சிங் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 5 பந்தில் 5 ரன்கள் சேர்த்தார்.
5 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் சேர்த்துள்ளது.
ஃபில்டிங் செய்யும்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹென்றிக்ஸ் தனது விக்கெட்டினை 13 பந்தில் 8 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் அவரை ரன் அவுட் செய்தார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 14 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தினை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அமர்க்களப்படுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ப்ரீட்ஸ்கா தனது விக்கெட்டினை தான் எதிர்கொண்ட மூன்றாவது பந்தில் இழந்து வெளியேறினார். இவர் ஒரு பவுண்டரி மட்டும் அடித்திருந்தார்.
தென்னாப்பிரிக்கா அணியின் முதல் ரன்னினை 2வது ஓவரின் 2வது பந்தில் பவுண்டரி அடித்து தொடக்கி வைத்துள்ளார் மேத்யூ.
போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய சிராஜ் அந்த ஓவரை மெய்டனாக வீசியுள்ளார். இந்த ஓவரை எதிர்கொண்ட ஹெண்ட்ரிக்ஸ் ஒரு பந்தைக் கூட தொடவில்லை.
202 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்தது.
56 பந்தில் தனது விக்கெட்டினை 7 பவுண்டரி 8 சிக்ஸர்கள் விளாசி 100 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் தனது சதத்தினை 55 பந்தில் எட்டினார்.
அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை 10 பந்தில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவர் தனது விக்கெட்டினை அறிமுக வீரர் பர்கர் பந்தில் ஆட்டமிழந்தார்.
18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை ஷம்ஷி பந்தில் இழந்து வெளியேறினார்.
32 பந்தில் சூர்யகுமார் யாதவ் தனது அரைசதம் விளாசியுள்ளார்.
11. 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்தது.
தொடக்க வீரராக களமிறங்கி 34 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி 50 ரன்கள் எட்டினார் ஜெய்ஸ்வால்
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் 6 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
களமிறங்கிய முதல் பந்திலேயே திலக் வர்மா பந்தினை அடித்து ஆட நினைத்து தனது விக்கெட்டினை கோல்டன் டக் முறையில் இழந்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் கில் தனது விக்கெட்டினை 12 ரன்கள் சேர்த்த நிலையில் கேசவ் மஹராஜ் வீசிய 3வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
இரண்டாவது ஓவரை வீசிய மார்க்ரம் 15 ரன்கள் வாரி வழங்கினார்.
போட்டியின் முதல் ஓவரில் கில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த ஓவரி நாண்ட்ரே பர்ஹர் வீசினார்.
முதல் ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் முதல் பவுண்டரியை கில் முதல் ஓவரின் 4வது பந்தில் அடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் தொடங்கினர்.
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்
தென்னாப்பிரிக்கா ப்ளேயிங் லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, நான்ட்ரே பர்கர்
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் ஆரம்பமே இந்திய அணிக்கு சிறப்பாக அமையவில்லை. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்தநிலையில் இன்றைய வாழ்வா? சாவா? போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்ய விரும்பும். அதே சமயம் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது.
ஜோஹன்னஸ்பர்க் ஆடுகளம் எப்படி..?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வாண்டரஸ் மைதானம் எப்போது பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த மைதானத்தில் நிறைய பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் வந்து குவியும். எனவே இன்றைய போட்டியில் வானவேடிக்கையை நாம் கண்டுகளிக்கலாம். நல்ல பவுன்ஸ் காரணமாக, பந்து எளிதாக பேட்டுக்கு வரும். ஆனால், போட்டியின் தொடக்கத்தில் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உண்டு.
புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது..?
நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இதுவரை மொத்தம் 26 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில், 13 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 171 ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 145 ஆகவும் உள்ளது. எனவே, முதலில் டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வார்.
ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு திரும்புவாரா?
ருதுராஜ் கெய்க்வாட் இரண்டாவது டி20 போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக விளையாடும் பதினொன்றில் பங்கேற்கவில்லை. ருதுராஜூக்கு பதிலாக சுப்மன் கில் 2வது டி20 போட்டியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், கடந்த போட்டியில் கில், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
இவ்வாறான சூழ்நிலையில், கடைசி டி20 போட்டியில் ருதுராஜ் மீண்டும் அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. ஆனால், ருதுராஜ் விளையாடும் 11க்கு திரும்பினால் கில் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலில் யார் உட்காருகிறார்கள் என்பதை பார்ப்பது சுவார்ஸ்யமாக இருக்கும். அதேநேரத்தில், இரண்டாவது டி20 போட்டியில் ஜிதேஷ் சர்மா சிறப்பாக செயல்படவில்லை, அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் இஷான் கிஷன் களமிறங்கலாம்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 போட்டியில் நேருக்கு நேர்:
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இந்திய அணி:
சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.
தென்னாப்பிரிக்கா அணி:
மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகராஜ், அண்டில் பெஹ்லுக்வாயோ, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -