மேலும் அறிய

Sachin on ODI Cricket: ”ஒருநாள் கிரிக்கெட் போரடிக்குது, இதையெல்லாம் மாத்துனாதான் சரியா வரும்” - சச்சின்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் பேட்டி:

தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நவீன கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 3 நாட்களுக்கு எல்லாம் முடிந்து விடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விரிவான பதில்களையும் வழங்கியுள்ளார்.

”நாட்களை பார்க்காதீர்கள்”

 அதன்படி “டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எத்தனை நாட்கள் நீடிக்kiRathu. ஐந்து நாட்கள் அல்லது வேறு எத்தனை நாட்களில் போட்டி முடிகிறது என்பதல்ல இங்கு விஷயம். டெஸ்ட் கிரிக்கெட் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும்  புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் வெவ்வேறு விதமான மைதானங்களில் விளையாட வேண்டி உள்ளது.  அது பவுன்சர் டிராக், வேகமான டிராக், மெதுவான டிராக், டர்னிங் டிராக் மற்றும் ஸ்விங்கிங் டிராக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் தங்களுக்கு சாதகமான சூழல் கிடைக்கும் என கருதுவதை விட, அனைத்து சூழலுக்கும் தயார் ஆவதே சிறந்த முடிவாக இருக்கும். என்னை பொருத்தவரை எந்த மாதிரியான மைதானங்களில் விளையாடுகிறோம் என்பதே முக்கியம். அதுவே கிரிக்கெட்டின் இதயமும் கூட என சச்சின் கூறினார். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நம்பர் ஒன் விளையாட்டாக மாற்ற முயற்சிக்கும்போது போட்டிகள் 3 நாட்களில் முடிவடைவதில் எந்த பாதிப்பும் இல்லை. 

”பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் வேண்டும்”

ஐ.சி.சி., எம்.சி.சி. உள்ளிட்ட கிரிக்கெட் சம்மேளனங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி நம்பர்-1 வடிவமாக தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்கின்றன. அதற்கு முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் ஏதாவது இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதனை பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். இல்லாவிட்டால் எப்படி பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.

”சலிப்பை ஏற்படுத்தும் ஒருநாள் கிரிக்கெட்”

தற்போது விளையாடப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவமானது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் ஒரு புதிய பந்தை பயன்படுத்துவதால், போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதையே நீக்கிவிட்டோம்.போட்டியில் 40வது ஓவரை வீசினலும், அந்த பந்திற்கு அது 20வது ஓவர் தான். ஆனால், பந்து 30வது ஓவரில் தான் ஸ்விங் ஆகவே தொடங்கும். ஆனால், இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை. இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது. 15வது ஓவர் முதல் 40 ஓவர் வரையில் ஆட்டம் தனது போக்கையே இழந்து சலிப்பை ஏற்படுத்துகிறது.

சச்சின் பரிந்துரை:

50 ஓவர் போட்டியை  தக்கவைத்துக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், ஒவ்வொரு 25 ஓவர்களுக்குப் பிறகும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாட வேண்டும். அதன்மூலம் டாஸ், பனி காரணி மற்றும் பிற நிலைமைகளில் எதிரணிக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். .

அதன்படி, முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணி அடுத்த 25 ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதைதொடர்ந்து, மீண்டும் 25 ஓவர்கள் பேட்டிங் செய்து விட்டு மீண்டும் எதிரணிக்கு பேட்டிங் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம்,  இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது பாதியில் பந்து வீசுகின்றன. வணிக ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது, ஏனெனில் இரண்டு இன்னிங்ஸ் இடைவெளிகளுக்கு பதிலாக மூன்று இன்னிங்ஸ் இடைவெளிகள் இருக்கும்" என சச்சின் வலியுறுத்தியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
சொதப்புறீங்களே சாம்சன்! ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க! உங்க இடத்துக்கு செம போட்டி இருக்கு!
சொதப்புறீங்களே சாம்சன்! ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க! உங்க இடத்துக்கு செம போட்டி இருக்கு!
IND vs IRE T20: இந்தியாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்த அயர்லாந்து! அலட்சியத்தால் அடி வாங்கிய டி20 சாம்பியன்!
IND vs IRE T20: இந்தியாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்த அயர்லாந்து! அலட்சியத்தால் அடி வாங்கிய டி20 சாம்பியன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget