மேலும் அறிய

Virat Kohli: "இப்படி நடந்தா விளையாடமாட்டேன்.." 2027 உலகக்கோப்பையில் விராட் கோலி விளையாடமாட்டாரா?

2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவது குறித்து விராட் கோலி அளித்துள்ள பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உலக கிரிக்கெட்டின் அரசன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரராகவும், கேப்டனாகவும் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.

உலகக்கோப்பையில் விராட் கோலி ஆடுவாரா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் விராட் கோலி அடுத்தாண்டு நடக்கும் 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில், அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, 

நான் உடற்பயிற்சி செய்கிறேன். சத்தான உணவையே சாப்பிடுகிறேன். அதுவே எனது அன்றாட வாழ்க்கை. நான் அந்த வாழ்க்கையையே விரும்புவதால் அவ்வாறு வாழவே விரும்புகிறேன். இது கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டும் அல்ல. 

2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் நீங்கள் விளையாட விரும்புகிறீர்களா? என்ற கேள்வி என்னிடம் பல முறை கேட்கப்பட்டுள்ளது. எனக்கு அதற்கான பதில் தெரியும். நான் என் வீட்டை விட்டு எனது உடைமைகளுடன் வந்து எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை என்றா சொல்லப்போகிறேன்? நான் விளையாட வந்தால் நிச்சயமாக விளையாடவே விரும்புகிறேன். கண்டிப்பாக நான் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால் நான் விளையாடுவேன். இந்திய அணிக்காக உலகக்கோப்பை விளையாடுவது ஒரு அற்புதமான தருணம். ஆனால், அந்த மதிப்பு இரண்டு தரப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும்.

மரியாதை இருந்தால் இருப்பேன்:

நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அந்த சூழலுக்கு என்னால்  மதிப்பு கூடும் என்றால், நான் அங்கம் வகிப்பதால் மதிப்பு உயரும் என்று அந்த சூழலும் கருதினால் நான் அங்கு இருப்பேன். ஒருவேளை, நான் எனது திறமையையும், தகுதியையும் நிரூபிக்க வேண்டும் என்று கருதினால் அங்கு நான் இருக்க மாட்டேன்.

நான் பயிற்சியில் நேர்மையாக இருக்கிறேன். ஆட்டத்தை அணுகும் விதத்திலும் நான் நேர்மையை கடைபிடிக்கிறேன். கடினமாக உழைக்கிறேன். களத்தில் விளையாடும்போது மற்றவர்களைப் போல அல்லது அவர்களை விட கூடுதலாக உழைக்கிறேன். ஆட்டத்தை சரியான முறையில் விளையாடுகிறேன்.

அற்புதம்:

விஜய் ஹசாரே தொடரில் சென்று விளையாடி நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கப் போவதில்லை என்பதில் எனது மனம் தெளிவாக இருந்தது. நான் அங்கே செல்வது விளையாடுவதற்காக மட்டுமே. ஏனென்றால், எனக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும். விஜய் ஹசாரே தொடரில் அப்படித்தான் விளையாடினேன். அது மிகவும் அற்புதமாக இருந்தது.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

கம்பீர் - அகர்கர் அழுத்தம்:

ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்தாண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆடுவார்களா? என்பதே ஆகும். அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அணித் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் நீடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. 

விராட் கோலி முழு உடற்தகுதியுடன், ஆட்டத்திறனுடனும் இருக்கும்போதும் அவரை டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டதாகவே குற்றச்சாட்டு உள்ளது. 

பேட்டிங் தூண்கள்:

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் அணியின் கடந்த கால செயல்பாட்டின் தரவுகளை எடுத்துப் பார்த்தால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவர் மட்டுமே அணியின் பேட்டிங் ஆர்டரை தாங்கும் தூணாக தொடர்ச்சியாக உள்ளனர். மற்ற வீரர்களிடம் நிலையான மற்றும் ஸ்திரத்தன்மையான பேட்டிங் காணப்படவில்லை. இதனால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆட வேண்டும் என்று ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
Embed widget