மேலும் அறிய

Rohit Sharma: முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் இல்லை.. அப்போ யார்தான் கேப்டன்? வெளியான தகவல்!

ரோகித் சர்மா இல்லாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டிக்க் பிறகு இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த முதல் போட்டியானது வருகின்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 17ம் தேதி) தொடங்க இருக்கிறது. 

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில முக்கிய காரணங்களால் ரோகித் விளையாட மாட்டார் என  தகவல் வெளியாகியுள்ளது. இந்த முதல் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. 

காரணம்:

ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவின் சகோதரர் குணால் ரித்திகா சஜ்தேவின்  திருமணத்தில் கலந்துகொள்வதால் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என தெரிகிறது. 

யார் கேப்டன்? 

ரோகித் சர்மா இல்லாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார். ஹர்திக் பாண்டியா முதல் முறையாக ஒருநாள் அணிக்கு கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

ஹர்திக் பாண்டியா இதற்கு முன்பு டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார். மார்ச் 19ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இணைகிறார். இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வருகின்ற மார்ச் 22ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்திய அணிக்கு இந்த ஒருநாள் தொடரானது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. 

அணி விவரம்:

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி : பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி , முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

ஒருநாள் தொடர்:

மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி (மும்பை வான்கடே மைதானம்)
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி (டாக்டர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம்)
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி (எம்ஏ சிதம்பரம் மைதானம் - சென்னை)

 

தலைப்பு செய்திகள்

IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
Embed widget