IND vs BAN 1st Test LIVE: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி..!
India vs Bangladesh 1st Test Score Live: இந்தியா - வங்கதேசத்திற்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிகளின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்..
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
260 - 6 என்ற மோசமான நிலையில் வங்கதேசம் போராட்டம் நடத்தி வருகிறது.
வங்காளதேச அணிக்காக நங்கூரமாக நின்று சதமடித்த ஜாகீர் ஹாசன் அஸ்வின் சுழலில் அவுட்டாகி வெளியேறினார். அவர் 100 ரன்களில் விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி நிர்ணயித்த 513 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் வங்காளதேச அணியின் தொடக்க வீரர் ஜாகீர் உசேன் சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 219 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 2 சிக்ஸர்களுடன் சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 3வது விக்கெட்டை இழந்தது. அக்ஸர் படேல் பந்துவீச்சில் யாசிர் அலி விக்கெட்டை பறிகொடுத்தார். 71 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் வங்கதேச அணி 2 விக்கெட்கள் இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ஜகிர் ஷசன் மட்டும் 138 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் அணி அபார பேட்டிங் - விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்துள்ள நிலையில் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்துள்ளனர்.
சுப்மன்கில் மற்றும் புஜாரா அபார சதத்தால் வங்காளதேசத்திற்கு 512 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அபாரமாக ஆடி சதமடித்த இந்திய தொடக்க வீரர் சுப்மன்கில் 110 ரன்களை அவுட்டாகி வெளியேறினார்.
இந்திய தொடக்க வீரர் சுப்மன்கில் சதமடித்து அசத்தியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை கடந்தது. இதன்மூலம் 350 கடந்து முன்னிலை பெற்றுள்ளது. சுப்மன் கில் அரை சதம் அடித்துள்ளார். விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் வங்கதேசம் அணி திணறி வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் அரைசதம் கடந்தார். இந்திய அணி இமாலய இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் அரைசதம் கடந்தார். இந்திய அணி இமாலய இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 300 ரன்கள் முன்னிலை பெற்றது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் வங்கதேச பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி நிதான ஆட்டம் - முதல் செஷனில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 290 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 254 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
102 ரன்கள் எடுத்த வங்காள தேச அணிக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்து, மேலும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது அந்த அணி 102 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. குல்தீப் யாதாவ் இதுவரை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காள தேச அணி 97 ரன்களுக்குள் 6வது விக்கெட்டையும் இழந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
தனது மிரட்டலான பந்து வீச்சில் மூன்று விக்கெட்டுகளை முகமது சிராஜ் கைப்பற்றி அசத்திவருகிறார்.
இந்திய அணி 133.5 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
களமிறங்கியது முதலே நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் அஷ்வின் 110 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். தற்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது நாளில் இந்திய அணி 116 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 335 ரன்கள் குவித்துள்ளது. அஷ்வின் 76 பந்துகளில் 37 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார்.
இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.
203 பந்துகளை எதிர்கொண்டு மிகவும், நிதானமாக விளையாடிவந்த புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் 11 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இந்திய அணி தற்போது, 265 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.
அரைசதம் கடந்து, 135 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து மிகவும் நிதானமாக ஸ்ரேயஸ் ஐயர் விளையாடிவருகிறார். தற்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிறகு 237 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 52 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
45 பந்துகளில் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) 46 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட், மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய 32 வது ஓவரில் க்ளீன் போல்டானார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 26 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 1 ரன்களில் வெளியேறினார்.
தைஜுல் இஸ்லாம் வீசிய 13 வது ஓவரில் 40 பந்துகளில் 20 ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில், யாசிர் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 12 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கேஎல் ராகுலும், சுப்மன் கில்லும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), யாசிர் அலி, என் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, எபாடோட் ஹொசைன்
கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்சார் பட்டேல், ரவிசந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ்,உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
Background
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இன்று தொடங்க இருக்கும் முதல் டெஸ்டானது சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் டிசம்பர் 14-18 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் ஷேரே பங்களாவில் நடைபெறும். டிசம்பர் 22 முதல் 26 வரை தேசிய மைதானத்திலும் நடைபெறுகிறது.
இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஹெட் டூ ஹெட் :
இந்தியா - வங்கதேச அணிகள் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இந்தியா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக ஒருமுறை கூட தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.
விளையாடிய போட்டிகள்: 11
- இந்தியா -9
- வங்கதேசம் - 0
- டிரா - 2
அதிக ரன்கள்:
பேட்ஸ்மேன் | போட்டிகள் | ரன்கள் | ஆவ்ரேஜ் | அதிகபட்ச ரன்கள் | 50s/100s |
சச்சின் டெண்டுல்கர் (IND) | 7 | 820 | 136.66 | 248* | 0/5 |
ராகுல் டிராவிட் (IND) | 7 | 560 | 70.00 | 160 | 1/3 |
முஷ்பிகுர் ரஹீம் (BAN) | 6 | 518 | 51.80 | 127 | 2/2 |
விராட் கோலி (IND) | 4 | 392 | 78.40 | 204 | 0/2 |
முகம்மது அஷ்ரப் (BAN) | 6 | 386 | 42.88 | 158* | 2/1 |
அதிக விக்கெட்கள்:
பந்து வீச்சாளர்கள் | போட்டிகள் | விக்கெட்கள் | ஆவ்ரேஜ் | சிறந்த பந்துவீச்சு | ஸ்ட்ரைக் ரேட் |
ஜாகீர் கான் (IND) | 7 | 31 | 24.25 | 7/87 | 38.2 |
இஷாந்த் சர்மா (IND) | 7 | 25 | 20.88 | 5/22 | 38.8 |
இர்பான் பதான் (IND) | 2 | 18 | 11.88 | 6/51 | 21.0 |
அஷ்வின் (IND) | 4 | 16 | 23.12 | 5/87 | 47.1 |
அனில் கும்ப்ளே (IND) | 4 | 15 | 16.53 | 4/55 | 32.4 |
இந்திய அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்சார் பட்டேல், ரவிசந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ்,உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
வங்கதேச அணி:
ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), யாசிர் அலி, என் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, எபாடோட் ஹொசைன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -