IND-W vs AUS-W LIVE: இறுதி வரை போராடிய இந்தியா..! திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
மகளிர் டி-உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோத உள்ளன.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
14 ரன்கள் எடுத்து இருந்தபோது ரிச்சா கோஷ் கேட்ச் முறையில் அவுட்டானார்
இந்திய அணிக்காக அபாரமாக ஆடி அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்த ஹர்மன்பிரீத்கவுர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடல்நிலை முடியாத சூழலிலும் இந்திய அணிக்காக அபாரமாக ஆடி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
11.1 ஓவர் முடிவில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது
அதிரடியாக விளையாடிய ஜெமிமா 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்
10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 93 ரன்களை எடுத்தது
4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா - கேப்டன் ஹர்மன் 50 ரன்களை சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்
5 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை எடுத்துள்ளது
4 ரன்கள் எடுத்திருந்த யஸ்திகா பாட்டியா ரன் - அவுட் முறையில் அவுட்டானார்.
ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 9 ரன்களில் அவுட்டானார்.
அரையிறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 172 ரன்களை குவித்தது. இதனால், இந்தியாவிற்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
14.1 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி பவுண்டரியுன் 100 ரன்களை எட்டியது
14.1 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி பவுண்டரியுன் 100 ரன்களை எட்டியது
14.1 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி பவுண்டரியுன் 100 ரன்களை எட்டியது
அரைசதம் விளாசிய பெத் மூனி 54 ரன்கள் எடுத்து இருந்தபோது, ஷிகா பண்டே பந்துவீச்சில் அவுட்டானார்
34 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார் பெத் மூனி
அரையிறுதிப்போட்டியின் முதல் 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒருவிக்கெட்டை இழந்து 69 ரன்கள் எடுத்துள்ளது.
அரையிறுதிப்போட்டியின் முதல் 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒருவிக்கெட்டை இழந்து 69 ரன்கள் எடுத்துள்ளது.
அரையிறுதிப்போட்டியின் முதல் 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒருவிக்கெட்டை இழந்து 69 ரன்கள் எடுத்துள்ளது.
பெர்த் மூனி அடித்த பந்து நேராக காற்றில் பறந்து ஷபாலி வர்மாவிடம் செல்ல, பவுண்டரி லைனில் எளிதான கேட்சை அவர் தவறவிட்டார். இந்த போட்டியில் இரண்டு கேட்ச்களை இந்திய அணி தவறவிட்டுள்ளது.
25 ரன்கள் எடுத்த தொடக்க வீராங்கனையான அலீசா ஹீலி, ராதா யாதவ் பந்துவீச்சில் அவுட்டானார்.
ஹீலி-க்கு எதிராக எல்பிடபள்யு முறையில் விக்கெட் கோரி, இந்திய அணி தனது ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை இழந்தது.
டாஸ் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக, இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் விளையாடமாட்டார் என கூறப்பட்டது. ஆனால், இன்றைய போட்டியில் அவர் களமிறங்கியுள்ளார்.
ம்களிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Background
தென்னாப்ரிக்காவில் நடைபெறும் மகளிர் டி-உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோத உள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தையும், குரூப் பி பிரிவில் இந்திய அணி இரண்டாவது இடத்தையும் பிடித்து, தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளன. ஆஸ்திரேலிய அணி மெக் லானிங் தலைமையில் களமிறங்க, இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்பது சந்தேகமாக உள்ளது.
போட்டி நேரம்:
தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நியூலேண்டில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் நேரலையாக பார்க்கலாம்.
நேருக்கு நேர்:
இந்தியா மகளிர் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் இடையே இதுவரை 30 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், ஆஸ்திரேலிய அணி 22 முறை வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்தது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு அணிகளும் நேரடி டி20 போட்டிகளில் மோதியது. அதில், இந்திய அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையே நடந்த கடைசி ஐந்து டி20 போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி 4 முறையும், இந்திய அணி ஒருமுறையுமே வெற்றிபெற்றுள்ளது.
ஹர்மன் பிரீத் விளையாடுவாரா?
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கான அனைத்து போட்டிகளிலும் விளையாடிய ஆல்-ரவுண்டரான பூஜா வஸ்த்ரகர் திடீர் உடல்நலக்குறைவால் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக ஸ்னே ரானா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதோடு, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரும் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இறுதி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை ஹர்மன் பிரீத் கவுர் விளையாடவிட்டால், துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய அணி:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, ஸ்னே ரானா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
உத்தேச ஆஸ்திரேலியா அணி:
பெத் மூனி (விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -