IND vs WI 1st T20 LIVE: வெற்றி இலக்கை அடைந்தது.....முதல் டி20 போட்டியை வென்றது இந்தியா....!
IND vs WI 1st T20I LIVE Updates: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டியின் ஸ்கோர் அப்டேட்களை லைவ்வாக தெரிந்துகொள்ளலாம்.
முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யரின் பொறுப்பான ஆட்டத்தால் 18.5 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.
சூர்யா குமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர் சூப்பர் ஆட்டம்...வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி
4ஆவது விக்கெட்டை இழந்து திணறி வரும் இந்திய அணி. ரிஷப் பண்ட் அவுட்
கிஷானை தொடர்ந்து கோலியும் காலி...17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
100 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ரோகித்தின் விக்கெட்டை எடுத்த சேஸ் தான் இஷானின் விக்கெட்டையும் தூக்கினார். ஸ்கோர் விவரம்: 93-2 (12 ஓவர்கள்)
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் 19 பந்தில் 40 ரன்கள் ஆட்டமிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி 6 ஓவர்களில் 50 ரன்களை எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக விளையாடி வருகிறார். 6 ஓவர் முடிவில் 58/0 ரோகித் 38, இஷான் கிசான் 18 ரன்கள்
முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பூரான் 61 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் 6ஆவது விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல். அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பூரானின் விக்கெட்டை சாய்த்தார். 18 ஓவர்கள் முடிவில் 135/6
வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 16 ஓவர் முடிவில் 108/5 ரன்கள் எடுத்துள்ளது.
ரன்களை வாரிக்கொடுத்த வந்த தீபக் சாஹர் இந்தப் போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். ஷூசைனை காட்டன் போல்ட் முறையில் சாய்த்தார்.
அறிமுக டி20 போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய ரவி பிஷ்னோய். சேஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் தனது இரண்டாவது விக்கெட்டையும் அவர் எடுத்தார். 11 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அதிரடியாக ஆடி வந்த கைல் மேயர்ஸ் (31 ரன்கள்) விக்கெட்டை சாஹல் எடுத்தார். 7 ஓவர் முடிந்துள்ளது.
6 ஓவரில் 50 ரன்களை தொட்ட வெஸ்ட் இண்டீஸ், மேயர்ஸ், பூரான் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை அடித்து நொருக்குகின்றனர்.
அதிரடியாக ஆடி வரும் கைல் மேயர்ஸ் 5 பவுண்டரிகள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு ஓவர் முடிவில் 12 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டு ஓவர் வீசிய தீபக் சாஹர் இரண்டு பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார்.
முதல் ஓவரிலேயே இந்திய அணி விக்கெட் எடுத்தது. ப்ரெண்டன் கிங் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் விவரம்:
ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர்,ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், சாஹல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
வெஸ்டி இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுக வீரராக ரவி பிஷ்னோய் களமிறங்குகிறார். அவருக்கு இந்திய அணியின் தொப்பி வழங்கி வீரர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டிக்கான டாஸ் இன்னும் சற்று நேரத்தில் போடப்படவுள்ளது.
Background
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி இன்று மாலை கொல்கத்தாவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் முதல் டி20 தொடரில் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி20 தொடரில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக விலகினர். கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் அணியில் இல்லாததால் ரோகித் சர்மாவுடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து மீண்டும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தெரிகிறது.
அதேபோல் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. சுழற்பந்துவீச்சாளராக சாஹல் இடம்பெறுவார் என்று தெரிகிறது. இவர்களுடன் சேர்ந்து தீபக் ஹூடாவும் இந்திய அணியில் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல் டி20 போட்டிக்கான உத்தேச அணி:
ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா/ வெங்கடேஷ் ஐயர், சாஹல், ஷர்துல் தாகூர்,புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், தீபக் சாஹர் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவும், ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் அல்லது தீபக் ஹூடா ஆகிய இருவரில் ஒருவர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -