IND vs SL, Asia Cup LIVE: 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி..! போராடி தோற்ற இந்தியா..!
Asia Cup 2022, Match 9, IND vs SL: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்,
சனகா - பனுகா ராஜபக்சேவின் மிரட்டலான பேட்டிங்கால் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 33 ரன்களை விட்டுக்கொடுக்காமல் தடுத்தால் இந்திய அணி வெற்றி பெறும்.
இலங்கை அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த இலங்கையின் தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில் சஹல் பந்தில் ஆட்டமிழந்தார்.
அஸ்வின் பந்தில் இலங்கை வீரர் குணதிலகா 1 ரன்களில் அவுட்டானார். இதனால், இலங்கை அணி 110 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்துள்ளது.
இந்திய அணிக்கு குடைச்சல் அளித்த நிசங்காவை 52 ரன்னிலும், அசலங்காவை 0 ரன்னிலும் சஹால் ஒரே ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார்.
நிசங்காவும், மெண்டிசும் மாறி, மாறி அதிரடி காட்டி வருவதால் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
அர்ஷ்தீப் வீசிய ஒரே ஓவரில் இலங்கை வீரர்கள் 20 ரன்கள் விளாசினர்.இலங்கை அணி 5.2வது ஓவரிலே 50 ரன்களை எட்டியது
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை விளாசியது. இதனால், இலங்கைக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுஷனகா வீசிய 19வது ஓவரில் தீபக்ஹூடா, ரிஷப்பண்ட் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 158 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
சனாகா வீசிய 18வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்த பிறகு, ஹூடா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த பந்து மிகவும் உயரமாக சென்றதால் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் விளாசிய விராட்கோலியின் சாதனையை ரோகித்சர்மா சமன் செய்தார்.
இந்திய அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்துள்ளது. இதனால், கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி அதிரடி காட்டுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா 41 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 71 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இந்திய கேப்டன் ரேகித் சர்மாவின் அதிரடியால் இந்தியாவின் ஸ்கோர் 12 ஓவர்களில் 109 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அணி 7.1 ஓவர்களில் 51 ரன்களை எட்டியது. களத்தில் ரோகித்- சூர்யகுமார் யாதவ் ஜோடி உள்ளனர்.
இந்திய அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளதால் இந்திய கேப்டன் ரோகித்சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக விராட்கோலி மதுஷங்கா பந்தில் போல்டாகி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இலங்கை அணிக்கு எதிராக பேட் செய்து வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இலங்கை அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
துபாயில் நடைபெற உள்ள போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ்கார்த்திக் மற்றும் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Background
ஆசிய கோப்பை தொடரில் முதல் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தச் சூழலில் இன்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது. இலங்கை அணி முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இதனால் இலங்கை அணி நல்ல ஃபார்மில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தீபக் ஹூடாவிற்கு பதிலாக அணியில் அக்சர் பட்டேல் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இவர்கள் தவிர ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்ப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதன்காரணமாக அவர் அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இலங்கை அணியை பொறுத்தவரை கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் வெற்றி பெற முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது.
இந்தப் போட்டி தொடர்பாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் நெருக்கடியுடன் விளையாடுவதாக தெரியவில்லை. விராட் கோலி ஒரு சிறப்பான வீரர். அவர் பற்றி அவ்வளவு விமர்சனங்கள் வந்த போதும் அவர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். கடந்த போட்டிகளை போன்று இந்தப் போட்டியிலும் நாங்கள் அதே அணுகுமுறையை பின்பற்றுவோம்”எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் இந்த இரண்டு போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சூப்பர் 4 சுற்று அட்டவணை:
செப்டம்பர் 3: ஆஃப்கானிஸ்தான்-இலங்கை
செப்டம்பர் 4: இந்தியா-பாகிஸ்தான்
செப்டம்பர் 6: இந்தியா-இலங்கை
செப்டம்பர் 7: பாகிஸ்தான்-ஆஃப்கானிஸ்தான்
செப்டம்பர் 8: இந்தியா-ஆஃப்கானிஸ்தான்
செப்டம்பர் 9: இலங்கை-பாகிஸ்தான்
செப்டம்பர் 11: இறுதிப் போட்டி சூப்பர் 4 முதலிடம்- இரண்டாம் இடம் பிடித்த அணிகள்
அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோதும். ஆசிய கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி இம்முறையும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -